Home /News /lifestyle /

எந்த நாட்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்..? என்ன காரணம்..? UNICEF அறிக்கை!

எந்த நாட்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்..? என்ன காரணம்..? UNICEF அறிக்கை!

குழந்தைகள்

குழந்தைகள்

டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறார்கள். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவதை தவறுவதே இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
குழந்தைகள் விவரம் அறிந்து வளரும் காலத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது பெற்றோர்களின் கடமை. மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் அவர்கள் வளர்ந்தபின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படாமல் பாதுகாக்கும். சமீபத்தில் UNICEF அதிக வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில், எந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் படி, நெதர்லாந்து நாட்டு குழந்தைகள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்கிறார்கள் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.

யுனிசெஃப் ஆய்வு குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் சோஷியல் திறன்கள் மற்றும் மனநலம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டது. ‌‌இந்த மூன்று பிரிவிலும் நெதர்லாந்து நாட்டு குழந்தைகள் முன்னிலையில் வசிக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் டென்மார்க் மற்றும் மூன்றாவது இடத்தில் நார்வே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவித்துள்ளது. நெதர்லாந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அந்தக் காரணங்கள் என்ன என்பதற்கான பட்டியல் இங்கே.

குழந்தைகளின் ஆளுமையை வெளிப்படுத்த உதவும் வளர்ப்பு முறை :

டச்சு நாட்டவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை, அவர்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் வகையில் வளர்க்கிறார்கள். குழந்தைகள் கூறுவதை நிதானமாக முழுமையாக கேட்கிறார்கள், அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில் எது சரி எது தவறு என்று பொறுமையாக குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு குறைகிறது. மேலும், குழந்தைகளை உரிய மரியாதையுடன் நடத்துகிறார்கள். இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைக் இடையே ஒரு அழகான பிணைப்பையும் உருவாக்குகிறது.

மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசும் சுதந்திரம் :

இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு உனக்கு இன்னும் வயதாகவில்லை, பெரியவர்கள் மாதிரி பேசாதே, நீ சின்ன பையன், சின்ன பொண்ணு, என்று கூறும் வழக்கம் உண்டு. ஆனால் டச்சு நாட்டில் வெளிப்படையாக மனதில் இருப்பதை பெற்றோர்களுடன் பகிர்ந்து அதை பற்றி விவாதிக்கும் உரிமையை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்கள். வெளிப்படையாக உரையாடுவது, மனதில் இருப்பதை பேசுவது ஒரு வலுவான உறவை வளர்ப்பதற்கு பாலமாக செயல்படுகிறது.



குழந்தைகளுக்கு மனதுக்குள்ளேயே போட்டு குழப்பிக் கொள்ளாமல், அதைப்பற்றிய ஒரு தீர்வு கிடைக்கவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. பிற நாட்டு குழந்தைகளுடன் ஒப்பிடும் பொழுது நெதர்லாந்து நாட்டு குழந்தைகளுக்கு பேச்சு சுதந்திரம் மற்றும் பாலியல் ரீதியான தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரமும் இருக்கிறது.

உங்கள் குழந்தைகள் உயரம் குறைவாக இருக்கிறார்களா? அவர்கள் வளர உதவும் பயிற்சிகள்!

குடும்பத்துக்கு தான் முன்னுரிமை :

டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறார்கள். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவதை தவறுவதே இல்லை. குழந்தைகளின் ஆக்டிவிட்டி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிடுவது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று குழந்தைகளுக்காகவே நேரத்தை ஒதுக்குவார்கள். அதேபோல அப்பா அம்மா இருவருமே குழந்தை வளர்ப்பில் பங்கேற்கிறார்கள்.



போட்டி மனப்பான்மையை வளர்க்காத பள்ளிகள் :

படிப்பு என்று வரும்போது யார் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள், யார் அதிக திறமைசாலி, யார் முதலில் இருக்கிறார்கள் என்று மாணவர்கள் இடையே கடுமையான போட்டி நிலவும். ஒரு கட்டத்தில் இந்த போட்டி மாணவர்கள் கவனத்தை கலைத்து விடும். ஆனால் டச்சு நாடு அனைத்து குழந்தைகளும் அனைத்து செயல்களிலும் ஈடுபட வேண்டும், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் பள்ளிகளில் குழந்தைகள் மீது எந்த அழுத்தமும் கொடுப்பதில்லை. குறிப்பாக, மாணவர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்ப்பதில்லை. குழந்தைகளின் பலம் எது பலவீனம் எது என்று தெரிந்து அவர்களுடைய எல்லைகளை விரிப்பதற்கு உதவியாக செயல்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Child Care, Happiness, Kids Care

அடுத்த செய்தி