கொரோனா தற்போது உறுமாறி மீண்டும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த மக்களை மீண்டும் வீடுகளுக்குள் முடக்க வைத்துவிட்டது.
மீண்டும் வெளி இடங்களுக்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதை தவிர்த்து வருகின்றனர். அரசும் தற்போது மீண்டும் மக்களை பாதுகாப்புடன் இருக்க எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் மற்ற சிகிச்சைகள் அல்லது கொரோனா அறிகுறிகள், சந்தேகங்கள் இருந்தால் கூட மருத்துமனைக்கு வராமல் எப்படி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என திட்டமிட்டு ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது.
ஆம்... சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மக்கள் கொரோனா சந்தேகங்கள், சிகிச்சைகள் அல்லது மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு இலவசமாக ஆன்லைனிலேயே மருத்துவரை அணுகலாம் என்று கூறியுள்ளது. அதாவது ஆன்லைன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முன் பதிவு செய்துவிட்டு வீடியோ கால் மூலம் மருத்துவருடன் பேசலாம். குறைகளைக் கூறி சிகிச்சைப் பெறலாம்.
அந்த ஆப்பிற்கான லிங்க் இதுதான் Download link : https://bit.ly/3g9oq5l
Dear Chennaites,
Get your doubts cleared about COVID-19, and get medical consultation from your homes through video calls with using Greater Chennai Corporation's "GCC Vidmed app".
இதை பதிவிறக்கம் செய்துகொண்டு உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் இலவசமாக வீட்டிலிருந்தபடியே சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் மற்றவர்களுக்கும் நீங்கள் சிகிச்சை பெற உதவலாம்.
மேலும், வெளியே சென்றால் பாதுகாப்பு அம்சங்களை மறவாமல் பின்பற்றுங்கள். முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, கைகளை கழுவுதல் போன்ற விஷயங்களை தவறாமல் கடைபிடித்து வாருங்கள். இதனால் கொரோனா தொற்று பரவலை குறைக்கலாம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.