ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பிணிகளுக்கும் கேன்சர் ஆபத்து... தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் மறைந்திருக்கும் அபாயம்!

கர்ப்பிணிகளுக்கும் கேன்சர் ஆபத்து... தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் மறைந்திருக்கும் அபாயம்!

கர்ப்பகால சிக்கல்கள்

கர்ப்பகால சிக்கல்கள்

நரை முடியை கறுப்பாகப் பயன்படுத்தும் ஹேர்டை அடங்கும். ரசாயனங்கள் அதிக அளவு வெளிப்படுவதால் அதில் இது கர்ப்பிணி பெண்களுக்கு கேன்சர் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எந்த காரணங்களுக்காக ஒரு நபருக்கு புற்றுநோய் வருகிறது என்பதை உறுதியாக கூற முடியாது. மரபணு ரீதியாகவும் இது ஒரு நபரை பாதிக்கலாம். ஆனால் ஒருசில பொருட்களை பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களில், பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள், சரும பாதிப்புகள் முதல் கிட்னி பிரச்சனை வரை உடலுக்கு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பல விதமான நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. ஒரு சில பொருட்கள் மிக மிக ஆபத்தானவை.

அதில் நம் நரை முடியை கறுப்பாகப் பயன்படுத்தும் ஹேர்டை அடங்கும். ரசாயனங்கள் அதிக அளவு வெளிப்படுவதால் அதில் இது கர்ப்பிணி பெண்களுக்கு கேன்சர் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பொருளை நாம் தொடர்ந்து பர்சனலாக பயன்படுத்தினால் தான் அதில் இருக்கும் ரசாயனங்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அர்த்தம் கிடையாது! ரசாயனத்திற்கு நாம் வெளிப்பாட்டால் கூட உடலில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தும்.

உதாரணமாக பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்பு மற்றும் லிக்விட்கள், கலர் டை மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை உணவு மற்றும் குடிக்கும் தண்ணீரில் கலக்கும் பொழுது நமக்கு தெரியாமலேயே நம் உடலில் நச்சு கலந்து விடுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக ரசாயனங்களுக்கு வெளிப்படும் கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் கூட ஏதேனும் பாதிப்பு உண்டாகலாம்.

தேசிய சுகாதார அமைப்பின், குழந்தையின் சுகாதார பாதிப்புகளில் சுற்றுச்சூழலின் தாக்கங்கள் என்ற திட்டத்தில், ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புதிய ஆய்வில் இது குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறுநீர் பரிசோதனையில் கேன்சர் உண்டாக்கும் ரசாயனங்கள் கண்டுபிடிப்பு

2008 - 2020 ஆம் ஆண்டு வரை கர்ப்பிணியாக இருந்த 171 பெண்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. புதிய சோதனை முறைப்படி, இவர்களுடைய சிறுநீர் மாதிரி பரிசோதித்த போது, 45 கேன்சர் உண்டாக்கும் கெமிக்கல்கள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Also Read :  பிரசவத்திற்கு பின் குழந்தையுடன் பிணைப்பு இல்லாமல் இருக்க என்ன காரணம்..?

இந்த பரிசோதனையில் கண்டறியப்பட்ட கெமிக்கல்கள், தொழிற்சாலை ரசாயனங்களாக, மிகவும் ஆபத்தானவை என்றும், இந்த கெமிக்கல்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வெளிப்படும் பொழுது இது கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் கூட உயிர் கொல்லும் ரசாயனங்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களில் மிகவும் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்கள் இருக்கின்றன. உதாரணமாக தரை துடைக்கும் பொருட்கள், சுத்தம் செய்யும் பொருட்கள், பிளாஸ்டிக், பூச்சி கொல்லி மருந்து என்று எல்லாவற்றிலுமே நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்கள் உள்ளன.

பவுடர் பாலில் அதிக கெமிக்கல்கள்

கேன்ஸர் உருவாக்கும் காரணிகளாக கார்சினோஜன் என்று கூறப்படுகிறது. மெலமைன் என்பது ஒரு கார்சினோஜனாக கண்டறியப்பட்டுள்ளது. மெலமைன் ஒரு நபருக்கு எந்த அளவுக்கு மேல் இருந்தால் அவருக்கு கேன்சர் உருவாகும் என்பதை இதுவரை மருத்துவர்கள் கண்டறியவில்லை. ஆனால், குழந்தைகளுக்கு கொடுக்கும் ஃபார்முலா மில்க்கில் அதிகமான கெமிக்கல் இருந்தது அதில் அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதித்து இருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கைக்குழந்தைகளுக்கு கிட்னி சரியாக வேலை செய்யவில்லை. இதில் ஆறு குழந்தைகள் இறப்புக்கு மெலமைன் காரணமாக கூறப்படுகிறது. குழந்தைகளின் கிட்னிக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு கெமிக்கல் இன்ஸ்டன்ட் பார்முலா மற்றும் உணவில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : கர்ப்பம் தரிக்க நினைப்பவர்களுக்கு பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பழங்கள், காய்கறிகளால் ஆபத்து : கண்டறிவது எப்படி..?

இந்த ஆய்வில் வெவ்வேறு இனத்தை பூர்வீகமாக கொண்ட பெண்களை ஆய்வில் பங்கேற்பதற்கு ஊக்கப்படுத்தினர். இதில் 34% பெண்கள் வெள்ளை இனத்தவர், 40 சதவிகிதம் லாடினா, 20% கறுப்பர் இனத்தவர் மற்றும் 4% ஆசியர்கள். மூன்று சதவீதம் வேறு சில இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணத்தில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட வெள்ளை இனப் பெண்களை விட, மற்ற பூர்வீகத்தை சேர்ந்த பெண்களை விட, கறுப்பின பெண்களுக்கு அதிகமான கெமிக்கல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இனத்தை சேர்ந்த பெண்கள், கூந்தல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் காஸ்மெடிக் பொருட்களில் அதிக அளவிற்கு பாராபன் மற்றும் தாலேட்டுக்கள் உள்ளதால் இவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இதனால்தான் இவர்களுக்கு கேன்சர் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாக இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வு கூறியுள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer, Pregnancy