Home /News /lifestyle /

பெண்களே அடிக்கடி இந்த அறிகுறிகளை உணர்கிறீர்கள் எனில் அது பிசிஓஎஸாக இருக்கலாம் : அலட்சியம் வேண்டாம்

பெண்களே அடிக்கடி இந்த அறிகுறிகளை உணர்கிறீர்கள் எனில் அது பிசிஓஎஸாக இருக்கலாம் : அலட்சியம் வேண்டாம்

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ்

PCOS என்பது ஒரு பெண்ணின் மன ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் (QOL) பெரிதும் பாதிக்கும் ஒரு நிலை ஆகும். பொதுவாகவே இந்த பிரச்சனை இந்தியாவில் போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பது வேதனையான விஷயம்.

தற்போது கொரோனா எனும் கொடிய நோய் பாதிப்பினால் பல்வேறு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற நடைமுறையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், அவர்கள் உடல்பருமன், அதிக மனஅழுத்தம் போன்ற உடல்ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், அவர்களில் PCOS தொடர்பான அறிகுறிகளும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து பணிபுரிந்தாலும் வேலை அழுத்தம் காரணமாக, பலர் அதிக கவலை அல்லது பதற்ற உணர்வை அனுபவிக்கின்றனர். இதன் பொருள் ஒருவர் அதிக அலுவலக பணிகளைச் செய்தாலும், சமூக சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுவதுபோல தோன்றினாலும், உள்ளுக்குள் அவர் பதற்ற கோளாறின் அனைத்து அறிகுறிகளையும் உணர்கிறார் என்பது அர்த்தம்.

இந்த அறிகுறி PCOS பிரச்சனையாக கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, வரவிருக்கும் அழிவு, பயம், பதற்றம் அல்லது கவலை, விரைவான இதயத் துடிப்பு, இரைப்பை குடல் துன்பம் போன்ற தீவிர உணர்வுகள் ஆகியவை பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS) நோய்க்கான அறிகுறி ஆகும்.

நிறைய அறிவியல் சான்றுகள் கூட PCOS மற்றும் கவலை ஆகியவற்றுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். PCOS மற்றும் பதற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்தும், இந்த அறிகுறிகளைக் குணப்படுத்த மேற்கொள்ளவேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.கவலை/பதற்றம் மற்றும் PCOS இடையேயான தொடர்பு:

கவலை என்பது நம்மில் பெரும்பாலானோர் அனுபவிக்கும் ஒரு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணர்ச்சி ஆகும். இது ஒரு முக்கியமான உணர்வு, ஏனென்றால் இது முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு மக்களை எச்சரிக்கிறது அல்லது சாத்தியமான ஆபத்து குறித்து ஒருவரை எச்சரிக்கிறது. ஆனால், கவலைக் கோளாறுடன், பயத்தின் ரெஸ்பான்ஸ் பிரச்சனையை மிகைப்படுத்தப்படுகிறது.

ஒரு நபர் ஏதேனும் ஒரு சூழ்நிலைகளில் கவலையும் பயமும் அடைகிறார். கவலை மற்றும் மனச்சோர்வு ஆகியவை இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை அதாவது PCOS உட்பட பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பெண்களுக்கு தொடைப் பகுதியில் அதிகமாக கொழுப்பு சேர என்ன காரணம்..? குறைக்கும் வழிகள் என்ன..?

PCOS என்பது இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே மிகவும் பொதுவான எண்டோகிரைன் கோளாறு ஆகும். இது மனநலம் உட்பட ஒரு நபரின் ஆரோக்கியத்தின் பல அம்சங்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளில், அமினோரியா (மாதவிடாய் இல்லாதது), ஹிர்சுட்டிசம் (ஒரு பெண்ணின் முகம் மற்றும் உடலில் அசாதாரண முடி வளர்ச்சி), கருவுறாமை, உடல் பருமன், முகப்பரு வல்காரிஸ் மற்றும் ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா (வழுக்கை பாட்டர்ஸ்) ஆகியவை அடங்கும்.

PCOS என்பது ஒரு பெண்ணின் மன ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் (QOL) பெரிதும் பாதிக்கும் ஒரு நிலை ஆகும். பொதுவாகவே இந்த பிரச்சனை இந்தியாவில் போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பது வேதனையான விஷயம். சரி இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?மூளையில் ஹார்மோன் வேறுபாடுகள் மற்றும் இரசாயனங்கள் :

PCOS உள்ள சில பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டத்தில் இன்சுலின் அதிக அளவில் சேர்ந்துவிடுகிறது. ஒரு ஆய்வில் அதிக இன்சுலின் எதிர்ப்பு மனச்சோர்வுக்கான ஆபத்தை அதிகரித்தது என்றும் மேலும் கவலை அறிகுறிகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. PCOS உள்ள பலரில் ஆண்ட்ரோஜன்களின்(டெஸ்டோஸ்டிரோன் உள்ளிட்ட ஹார்மோன்களின் குழு) அளவு உயர்த்தப்படுகின்றன. இது PCOS உள்ள பெண்களில் கவலை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும்.

மாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..?

இரண்டாவதாக, கவலை மற்றும் மனச்சோர்வைக் கொண்ட PCOS உள்ள பெண்களுக்கு சில நரம்பியக்கடத்திகள் (மூளை மற்றும் நரம்பு மண்டலம் முழுவதும் சமிக்ஞைகளை அனுப்பும் ரசாயனங்கள்) குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகள் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. செரோடோனின் நேர்மறை உணர்வுகளுடன் தொடர்புடைய நரம்பு மண்டலத்திற்குள் ஒரு ரசாயன கடத்தியாக செயல்படுகிறது. குறைந்த அளவிலான செரோடோனின் மற்றும் பிற நரம்பியக்கடத்திகள் கொண்ட PCOS உள்ள பெண்கள் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அதிக அறிகுறிகளைப் புகாரளிப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை எவ்வாறு சரிபடுத்தலாம்:

PCOS பிரச்சனையுடன் இணைக்கப்பட்ட கவலை மற்றும் அவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்ட பெண்கள், பல்வேறு சிகிச்சை முறைகள் குறித்து யோசிக்கலாம். உங்களின் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை(கவலை) சமாளிக்க உதவும் பல சிகிச்சைகள் உள்ளன. குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி நிச்சயமாக உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்துவது, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யும் PCOS உள்ள பெண்களுக்கு கவலை மற்றும் மனச்சோர்வு அறிகுறிகள் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆசனங்கள், வழிகாட்டப்பட்ட தளர்வு, சுவாச பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய யோகா பயிற்சியும் பதட்டத்தின் அறிகுறிகளை குறைக்கும். மொத்தத்தில், ‘செயல்பாட்டு கவலை’ மற்றும் PCOS பெரும்பாலும் கைகோர்த்துச் செல்கின்றன. இதனை சிகிச்சையின் மூலம், நீங்கள் இரு நிலைகளின் அறிகுறிகளையும் வெகுவாகக் குறைக்க முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: PCOS, Women Health

அடுத்த செய்தி