கருப்பை நீர்க்கட்டி உலக அளவில் பெருத்த பாதிப்பாக உருவாகி வருகிறது. உலக அளவில் 70%-க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுவதாக ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கில் கவனிக்கப்படாத கருப்பை நீர்க்கட்டிகளும் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு வாழ்க்கை முறைதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை சரி செய்தாலே இதை தவிர்க்கலாம். எப்படி என்று பார்க்கலாம்.
அறிகுறிகள் என்னென்ன..?
இது முதன்மை அறிகுறிகளாக முறையற்ற மாதவிடாய் , உடல் எடை போன்றவை கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து முகம், கை கால்களில் அதிக முடி வளர்தல், முகப்பருக்கள் , முடி உதிர்தல், வழுக்கை உருவாதல், தோல் கருப்பாக மாறுதல், அடிக்கடி தலைவலி போன்றவை கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால் உடனே மகப்பேறு மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை பெறுதல் நல்லது.
நீர்க்கட்டி வந்தால் உடல் நலத்தில் என்ன பாதிப்பு உண்டாகும்..?
குழந்தை கருவுருவதில் சிரமம் உண்டாகலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரலாம். இரத்தக் கொதிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், குறட்டை விடுதல், புற்றுநோய் , மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை உடலளவில் நீங்கள் சந்திக்க நேரிடும்.
தீர்வு என்ன..?
என்னதான் இந்த நீர் கட்டிக்கு மாத்திரைகள் இருந்தாலும் உங்களின் முறையான வாழ்க்கைதான் இந்த பிரச்னைக்கான நிரந்தர தீர்வு. எனவே எப்படி உங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் உங்கள் உடல் எடையைக் குறைப்பதே முக்கிய முதல் நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் 5 - 10% உடல் எடையைக் குறைத்தாலே உங்களின்
மாதவிடாய் சீராக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். உடல் எடைக் குறைவதோடு கொழுப்புச் சத்தும் கரையும். இன்சுலின் அளவு குரையும், இதய நோய்,
சர்க்கரை நோய் ஆபத்துகளும் இருக்காது.
கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துகொள்ளுதல் நல்லது. காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுங்கள்.
தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இதுவும் உங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கான மற்றொரு வழியாகும்.
Pregnancy Care : கர்ப்பம் முதல் பிரசவம் வரை..ஆயுர்வேதத்தில் உள்ள மருத்துவம் என்னென்ன..? ஏன் அவசியம்..?
தண்ணீர் அதிகம் குடியுங்கள்.
இவற்றை முறையாக செய்து வந்தாலே மாதவிடாய் பிரச்னை இல்லாமல் சீராக இருக்கும். மருத்துவரின் அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.