Home /News /lifestyle /

40 வயதை கடந்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள IVF சிகிச்சைதான் தீர்வா..?

40 வயதை கடந்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள IVF சிகிச்சைதான் தீர்வா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 39 : திருமணமான 80 சதவீதம் பேருக்கும் எந்த விதமான சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறக்கிறது. மீதமுள்ள பேருக்கு தான் சிகிச்சை தேவைப்படுது.

அன்று மருத்துவமனையில் விமலா மட்டும் தனியாக காத்துக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்தினரை எனக்கு நன்றாக தெரியும். விமலாவின் இரு தங்கைகளுக்கும் நான்தான் மகப்பேறு மருத்துவர். விமலாவுக்கு திருமணத்தில் அப்போது விருப்பமில்லாததால் தங்கைகளுக்கு முதலில் திருமணம் செய்து விட்டார்கள். 40 வயதில் என்ன தோன்றியதோ தனக்கும் வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என்று நினைத்தாரோ, திருமணம் செய்து கொண்டு விட்டார். திருமணம் ஆகி 2 மாதம் தான் ஆகிறது.

"டாக்டர்!! நான் தவறான முடிவெடுத்து விட்டேனோ!! என்றார் விமலா. " என்ன ஆச்சு விமலா?!! என்ன பிரச்சனை??!" என்று சொல்லுங்கள். சரியா !? தவறா! என்று நான் சொல்கிறேன்", என்று கூறினேன்.

40 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய தப்புன்னு தோணுது, டாக்டர்!. இப்ப கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆச்சு. ரெண்டு மாசமா பீரியட்ஸ் ஆயிடுச்சு. எனக்கு தானாக பிரக்னன்சி பார்ம் ஆகுமா??! இல்ல டெஸ்ட் டியூப் பேபி தான் போகணுமா??! , 40 வயசுக்கு மேல தானா எல்லாம் பிரேக்னன்சி பார்ம் ஆகாதுன்னு ஆபீஸ்ல என்கூட வேலை பாக்குறவங்க எல்லாரும் சொல்றாங்க "டெஸ்ட் ட்யூப் பேபிக்கு போயிடு", அப்படின்னு சொல்றாங்க. ரொம்ப ரொம்ப பயமா இருக்கு!! கவலையாவும் இருக்கு!! அதான் உங்ககிட்ட கேட்டுட்டு டெஸ்ட் டியூப் பேபிக்கு போகலாமா!? என்று நினைக்கிறேன் டாக்டர்", என்றார் விமலா.

முதல்ல நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும் விமலா, கல்யாணம் பண்ணிக்கிறது, குழந்தை பெத்துக்கிறது இது ரெண்டும் வெவ்வேறு ரெண்டு விஷயங்கள்.

திருமணம் செய்து கொள்வது என்பது ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு வாழ்க்கைத் துணை என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த துணை குழந்தை பிறந்தாலும் ,பிறக்காட்டாலும் கடைசி வரை நீடிக்க போகுது. குழந்தை பிறந்து, அது வளர்ந்து திருமணமாகி போன பிறகும் அந்த பந்தம் தொடரும்.
அதனால நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டதுல ஒரு தப்பு இல்ல. முதல்ல மனசுல இருந்து இந்த எண்ணத்தை எடுத்துருங்க விமலா!" என்றேன்.



இப்ப அடுத்தது குழந்தைக்கு வருவோம் .

திருமணமான 80 சதவீதம் பேருக்கும் எந்த விதமான சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறக்கிறது. மீதமுள்ள பேருக்கு தான் சிகிச்சை தேவைப்படுது. அதுலயும் பாத்தீங்கன்னா , ஒரு 15 சதவீதம் பேருக்கு சிகிச்சையில் குழந்தை பிறக்கும். சிகிச்சைக்கு வரும் எல்லாருமே வயது அதிகமானவர்கள் சொல்ல முடியாது.

பெண்குயின் கார்னர் 36 : கர்ப்பம் தரிக்க செக்ஸ் பொசிஷனும் அவசியமா..?

எந்த வயதாய் இருந்தாலும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கு நான்கு விஷயங்கள் முக்கியமானது.

1. முட்டைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவது
2. ஃபெலோபியன் குழாய் என்று சொல்லக்கூடிய கருக்குழாயில் எந்த அடைப்பும் இல்லாமல் இருப்பது.
3. கர்ப்பப்பையில் உள்பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கிறது.
4.கணவருடைய விந்தணு ஆரோக்கியம்

இதில் எதுல பிரச்சனை இருந்தாலும் எந்த வயதானாலும் அவங்களுக்கு கருத்தரிக்கிறதுல சிக்கல் இருக்கும்.



ஒரு ஆச்சரியமான விஷயம் :

பிறக்கும்போது மில்லியனுக்கும் அதிகமான கருமுட்டைகள் முட்டைப் பையில் இருக்கும். ஆனால் ஒரு பெண்ணினுடைய வாழ்க்கையில 30- 40 வருட கால இனப்பெருக்க வயதில் சராசரியா மொத்தம் 400 முட்டைகள் தான் வெளியிலேயே வரும் .ஒவ்வொரு மாதமும் 10லிருந்து 15 முட்டைகள் வளரத் துவங்கும். ஆனா அதுல ஒன்னோ ,ரெண்டோ தான் அந்த கடைசி வெற்றி புள்ளியை அடையும். மற்ற முட்டைகள் எல்லாம் தானாகவே சுருங்கி போய்விடும்.

பெண்குயின் கார்னர் 38 : கர்ப்பம் தரிக்க ஓய்வு அவசியமா..? அளவுக்கு மீறிய ஓய்வும் ஆபத்து...

40 வயதுக்கு மேல் , கருமுட்டை வெளியாவதில் தான் சிக்கல் உண்டாகும். வயது அதிகமானால் பெண்களுக்கு சேமிப்பில் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.
40 வயதிற்கு மேல் எல்லா மாதமும் அவர்களுக்கு கருமுட்டை வெளியே வராது.

இரண்டாவது அப்படியே வந்தாலும் அந்த கருமுட்டை, நல்ல தரமான கருமுட்டையா இருக்கும் பொழுது தான் அதற்கு கரு தரிப்பதற்கான சக்தி இருக்கும். வயதாக, வயதாக, கருமுட்டையின் தரம் குறைந்து கொண்டே தான் போகும்.



விமலா ! உங்களுக்கான நம்முடைய திட்டம் இது தான்.

உடனே 'ஐவிப் 'க்கு போகணும்னு அவசியம் இல்ல.

ரத்த டெஸ்ட்களை பார்ப்போம். ரத்த டெஸ்ட்ல( AMH) ஏ எம் எச் என்ற ஹார்மோனை பார்க்கிறப்ப உங்களுக்கு கருத்தரிக்கிறதுக்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்குனு தெரியும்.
உங்களுக்கு ஸ்கேன் செய்தால் கர்ப்பப்பை, முட்டைப்பையின் அமைப்பு , கருமுட்டைகளின் எண்ணிக்கை இதெல்லாம் தெரியும்.

பெண்குயின் கார்னர் 37 : கருத்தரிக்க கருமுட்டை வெளிவரும் நாளை எப்படி கண்டறிவது? அறிகுறிகள் எப்படி இருக்கும்?

கருக்குழாயில் அடைப்பு இருக்கானு பார்க்க வேண்டும். இதெல்லாம் பார்த்த பிறகு இதுல எந்த விதமான பிரச்சினையும் இல்லன்னா குறைஞ்சபட்சம் நீங்க ஒரு மூன்று மாதங்கள் (timed intercourse) "குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு" என்ற கருமுட்டை வரும் காலத்தை கணித்து அந்த டயத்துல நீங்க தாம்பத்திய உறவில் இருந்தால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.
அடுத்த , மூன்று மாதங்களில் கருமுட்டை உருவாவதற்கு மாத்திரை கொடுத்து கருமுட்டை உருவாவதை ஸ்கேன் மூலம் உறுதி செய்து முயற்சி செய்யலாம்.



இந்த இரண்டிலும் கர்ப்பமாக வில்லை எனில் அடுத்ததாக iui "கருப்பைக்குள் விந்தணு செலுத்துதல்" முறையை பயன்படுத்தி குறைந்தது , இரண்டு அல்லது மூன்று முறை முயற்சி செய்யலாம். இதில் எதுவுமே பலனளிக்கவில்லை என்றால் கடைசியாக டெஸ்ட் டியூப் பேபிக்கு சொல்லலாம். ஆனால் எல்லாம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த முயற்சிகளிலேயே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு 80% சதவீதம் வரை இருக்கும் என்று கூறினேன்.

"ஓகே டாக்டர்!! இப்ப தெளிவா புரிஞ்சது டாக்டர்!!! . என்றார் விமலா.
" என்னென்ன பிளட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதை இப்போதே எழுதித் தருகிறேன். மாதவிடாய் வந்ததும் முதல் இரண்டு நாட்களில் வந்தால் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்" என்று கூறினேன்.

முகத்தில் நிம்மதியோடும், புன்னகையோடும், நடையில் ஒரு நம்பிக்கையோடும் சென்றார் விமலா.

மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Pregnancy, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி