ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

30 வயதை தாண்டிவிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம்... அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!

30 வயதை தாண்டிவிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம்... அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

ஒவ்வொரு ஆண்டும் பதினாலாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுகிறது என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4000 பெண்கள் இறக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய் வகைகளில், தடுக்கக்கூடிய ஒரே ஒரு புற்றுநோய் தான் செர்விக்கல் கேன்சர் என்று கூறப்படும் கர்ப்பவாய் புற்றுநோய் ஆகும். HPV என்ற வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய எந்த புற்றுநோய்க்கு ஏற்கனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் இதைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்ற ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது. செர்விக்கல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த ஆய்வு வெளியிட்டுள்ள தகவலின்படி 30களின் ஆரம்பத்தில் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரித்திருக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் அனைத்துமே அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஹெச்பிவி என்ற 200 வைரஸ் வேரியன்ட்களை கொண்ட ஒரு வைரஸ், 14 வகையான அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கேன்சர்களை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களை பாதிக்கும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கும் இந்த வைரஸ்தான் காரணம். அது மட்டுமல்லாமல் ஆசன வாய் புற்றுநோய் மற்றும் தலை மற்றும் கழுத்து பகுதியில் தோன்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் இந்த வைரஸ்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்டகாலம் ஒரு பெண்ணுக்கு HPV வைரஸ் தொற்று இருந்தால், அந்த தொற்று கர்ப்பவாய் புற்று நோயாக மாறும். HPV தொற்று என்பது ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பாலியல் உறவு மூலமாக பரவக்கூடியது.

ஒவ்வொரு ஆண்டும் பதினாலாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுகிறது என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4000 பெண்கள் இறக்கிறார்கள்.

Also Read : மார்பக அளவை மசாஜ் , உணவு மூலம் மாற்ற முடியுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு, உள்ளூரில் காணப்படும் நோய்கள் மற்றும் அந்தந்த பிராந்தியங்களில் பரவும் நோய்கள் ஆகிய இரண்டுமே அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடும்படியாக, ஸ்குவாமஸ் செல் செர்விக்கல் கார்சினோமா மற்றும் செர்விக்கல் அடினோகார்சினோமா ஆகிய இரண்டு வகையான புற்றும் அதிகரித்துள்ளது.

கர்ப்பவாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

* அதிகப்படியான ரத்தப்போக்கு

* மெனோபாசில் இருக்கும் பெண்களுக்கும் ரத்தப்போக்கு

* தீவிரமான முதுகு வலி

* பிறப்புறுப்பிலிருந்து திரவம் வெளியேற்றம்

* பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு

* அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு

* பாலியல் உறவுக்கு பிறகு ரத்தப்போக்கு

கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பது எப்படி.?

தடுக்கக்கூடிய மிகவும் அரிதான கேன்சர் வகைகளில் செர்விக்கல் கேன்சர் முதன்மையானது. இதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் Pap smear என்ற பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த சோதனை, கர்ப்பவாயில் இருக்கும் செல்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள உதவும்.

Also Read : Extra-Marital Affair | பெண்கள் ஏன் திருமணத்தை கடந்த உறவைத் தேர்வு செய்கிறார்கள்? – 5 காரணங்கள்.!

கர்ப்பவாய் புற்றுநோயைத் தடுக்க HPV தடுப்பூசிகள் உள்ளன. 9 முதல் 14 வயதிலான சிறுமிகளுக்கு, 2 டோஸ் தடுப்பூசிகளை 6 மாத இடைவெளியில் கொடுக்கலாம். பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன் HPV தடுப்பூசி செலுத்த வேண்டும். பின்னர், 15 முதல் 45 வயது வரையில் 3 டோஸ்கள் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். புகைபழக்கம், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளவேண்டும், ஆணுறை பயன்படுத்துவது பெருமளவில் கர்ப்பவாய் புற்றுநோயைத் தடுக்கும்.

First published:

Tags: Cervical cancer, Women after 30, Women Health