ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பவாய் புற்றுநோயால் ஆண்டுக்கு 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறப்பு : நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த அறிவுரை..!

கர்ப்பவாய் புற்றுநோயால் ஆண்டுக்கு 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறப்பு : நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த அறிவுரை..!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இந்தியா முழுவதுமே 45.3 கோடி பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை மற்றும் HPV தடுப்பூசி மூலம், செர்விக்கல் கேன்சரை முழுவதுமாக தடுக்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உயிர்க்கொல்லி நோயான கேன்சர் எந்த உடலின் எந்த பாகத்தை பாதிக்கும் என்று கூறமுடியாது. பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் வகையில், மார்பக புற்றுநோய்க்கு அடுத்ததாக கர்ப்பவாய் புற்றுநோய் இருக்கிறது. கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிவது மிகவும் கடினம் என்பதால் பெரும்பாலானவர்கள் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெற முடிவதில்லை. அது மட்டுமில்லாமல் ஆண்டுக்கு 77,000 பெண்கள் கர்ப்பவாய் புற்று நோயால் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

வேறு எந்த புற்று நோய்க்கும் இல்லாத ஒரு மருந்து, கர்ப்பவாய் புற்றுநோய்க்கு இருக்கிறது. அதாவது கர்ப்பவாய் புற்று நோயை வரும் முன் தடுக்கும் தடுப்பூசி உள்ளது. எனவே கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கு FOGSI என்ற அமைப்பு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் நலவியல் சமூகங்கள் அமைப்பைச் சார்ந்த அனைத்து தனியார் மட்டும் பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அனைத்து மகப்பேறியல் மருத்துவர்களும், மகளிர் நலன் சிறப்பு மருத்துவர்களும், ஹெச்பிவி தடுப்பூசியை தேசிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கர்ப்பவாய் பகுதியில் ஹ்யூமன் பாப்பிலோ வைரஸ் என்ற வைரஸால் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் புற்றுநோய் ஆபத்து உண்டாகி, இது இந்தியப் பெண்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் HPV வைரஸால் பாதிக்கப்பட்டு, 1.2 லட்சம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில், குறைந்த பட்சம் 77,000 பெண்கள் கர்ப்பவாய் புற்றுநோயால் இறக்கிறார்கள்.

இந்தியா முழுவதுமே 45.3 கோடி பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை மற்றும் HPV தடுப்பூசி மூலம், செர்விக்கல் கேன்சரை முழுவதுமாக தடுக்கலாம். கர்ப்பவாய் புற்றுநோய் தீவிரத்தை அறிந்த FOGSI அமைப்பு, டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ்ஸில், ‘கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை முழுவதுமாக அழிப்பதற்கான விரைவான நடவடிக்கை’ என்ற தலைப்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க நிபுணர் குழு கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

ஃபாக்சியின் பிரெசிடன்ட் ஆன மருத்துவர் ஷாந்தா குமாரி, இதைப் பற்றி கூறுகையில், “கர்ப்பவாய் புற்று நோயால் இவ்வளவு இழப்புகள் மற்றும் இறப்புகள் என்பதை தவிர்க்கவும் தடுக்கவும் முடியும். ஒரு சின்ன பிரச்சனையாக தொற்றாக தோன்றுவதுதான் 10 – 20 ஆண்டுகளில் கர்ப்பவாய் புற்று நோயாக மாறுகிறது. எனவே இந்த சிறிய பிரச்சனை மிகப்பெரிய நோயாக மாறுவதற்கு நீண்ட காலம் ஆவதால், இந்த நோயை எளிதாக கட்டுப்படுத்த, தடுக்க முடியும். இதற்கு தேவையெல்லாம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

Also Read : ஹீல்ஸ் அணிவதால் என்னென்ன தீமைகள் ஏற்படும்..? 

கேன்சர் போன்ற கட்டிகள் ஏதேனும் தென்பட்டால் அதை உடனடியாக டயக்நோஸ் செய்து, உரிய சிகிச்சையை அளித்தால் கேன்சர் வளராமல் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளித்துவிட முடியும். ஆனால் பரிசோதனை செய்தால் மட்டும் போதாது. பல பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதால் நாடு முழுவதுமே அனைத்து பெண்களும் ஹெச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் அவசியம். ஹெச்பிவி வைரஸால் ஏற்படக்கூடிய பெரும்பாலான செர்விக்கல் கேன்சர் மற்றும் வேறு வகை கேன்சர்களையும் இந்த தடுப்பூசி தடுக்கும். எனவே தேசிய நல திட்டத்தில் ஹெச்பிவி தடுப்பூசியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்கள் அமைப்பும், எங்களை போன்ற வேறு சில அமைப்புகளும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வேறு சில நிபுணர்களும் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்ப்பவாய் புற்றுநோய் எவ்வாறு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற விவரங்களை உலக சுகாதார மையத்திற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2030 ஆம் ஆண்டுக்குள் கர்ப்பவாய் புற்றுநோய் என்ற ஒரு புற்று வகையை முழுவதுமாக அழித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் உலக சுகாதார மையம் உலகளவில் பயன்படுத்தக்கூடிய திட்டங்களை மேற்கொள்ளும் பணியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் முதல் கட்டமாக, 15 வயதில் இருக்கும் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதும் அடங்கியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் 70 சதவிகித பெண்களுக்கு அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்வதன் மூலமாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாகவும் பெண்களை தாக்கும் தீவிரமான புற்றுநோயை தடுக்க முடியும் என்பது வரவேற்கத்தக்கது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cervical cancer, Women Health