Home /News /lifestyle /

Cervical Cancer Awareness Month : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

Cervical Cancer Awareness Month : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

Cervical Cancer | ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

உலகம் முழுவதிலும் அதிக மக்களை பாதிக்கும் கேன்சர் வகைகளில் நான்காவது இடத்தில் இருப்பது செர்விக்கல் கேன்சர், அதாவது பெண்களின் கர்ப்பவாயில் ஏற்படும் புற்றுநோய். அதே போல, கேன்சர் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. இந்தியாவில், நான்கு கேன்சர் நோயாளிகளுக்கு ஒருவருக்கு செர்விக்கல் கேன்சர் பாதிப்பு உள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

"இந்த புள்ளிவிவரங்கள் செர்விக்கல் கேன்சர் எவ்வளவு ஆபத்தானவை என்று குறிப்பிடுகின்றன. ஏனென்றால். மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், எதிர்காலத்தில் கர்ப்பவாய் புற்றுநோயால் பெண்களைக் கண்டறிந்து, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள ஸ்கிரீனிங் முறைகள் உள்ளன. இவற்றைத் தவிர, 99 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களுக்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு (HPV) எதிரான தடுப்பூசிகளும் உள்ளன” என்று கூறுகிறார் பெங்களூர்.ஃபோர்டிஸ் லா ஃபெம் மருத்துவமனையின் ஆலோசகர், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் கீத் மொன்னப்பா.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது

HPV, பெரும்பாலான புற்றுநோய்களை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாக இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து, புற்றுநோய் உருவாக 15-20 ஆண்டுகள் ஆகும். புற்றுநோயை பாதிப்படையும் அதிக ஆபத்தில் உள்ள பெண்களை அடையாளம் காண இது மிகப்பெரிய கால அளவை வழங்குகிறது. 100 வகைக்கும் HPV வேரியன்ட்கள் உள்ளன. அவற்றில் சுமார் 14 வேரியன்ட்கள் புற்றுநோய் உண்டாக்கும் அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது.

பெரும்பாலான பெண்களில் HPV நோய்த்தொற்று ஏற்பட்ட 2 ஆண்டுகளுக்குள் முழுவதுமாக நீங்கிவிடும். ஆனால், அதிக சக்திவாய்ந்த வேரியன்ட்கள் தாக்கும் போது, வைரஸின் தாக்கம் 2 வருடங்களுக்கும் மேலாக உடலில் நீடித்து, உயிரணுக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கர்ப்பப்பை வாய்ப் வழியே புற்றுநோயாக மாறும்.



கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

  • அதிகப்படியான ரத்தப்போக்கு

  • மெனோபாசில் இருக்கும் பெண்களுக்கும் ரத்தப்போக்கு

  • தீவிரமான முதுகு வலி

  • பிறப்புறுப்பிலிருந்து திரவம் வெளியேற்றம்


கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது

பாதிப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய மிகவும் அரிதான கேன்சர் வகைகளில் செர்விக்கல் கேன்சர் முதன்மையானது. இதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் Pap smear என்ற பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த சோதனை, கர்ப்பப்பை வாயில் இருக்கும் செல்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள உதவும்.

வெள்ளைப்படுதல் , அதிக உதிரப்போக்கு... கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் கண்டுகொள்ளப்படாத அறிகுறிகள்...

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பது எப்படி

கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க HPV தடுப்பூசிகள் உள்ளன. 9 முதல் 14 வயதிலான சிறுமிகளுக்கு, 2 டோஸ் தடுப்பூசிகளை 6 மாத இடைவெளியில் கொடுக்கலாம். பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன் HPV தடுப்பூசி செலுத்த வேண்டும். பின்னர், 15 முதல் 45 வயது வரையில் 3 டோஸ்கள் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளவேண்டும், ஆணுறை பயன்படுத்துவது பெருமளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cervical cancer, Women Health

அடுத்த செய்தி