ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்... ஸ்கிரீனிங்கில் ஏற்படும் தாமதத்தினால் அதிகரிக்கும் இறப்பு விகிதம்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்... ஸ்கிரீனிங்கில் ஏற்படும் தாமதத்தினால் அதிகரிக்கும் இறப்பு விகிதம்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

எளிய HPV வைரஸ் பேரழிவு தரும் கேன்சரை உண்டாக்கும் என்பதற்கான விழிப்புணர்வு இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. முதலில் 1980-களின் முற்பகுதியில், HPV தொற்றுக்கும் cervical cancer-க்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய பெண்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (cervical cancer) இருக்கிறது. இது யோனியுடன் இணைக்கும் கருப்பையின் கீழ் பகுதியான கருப்பை வாயின் உயிரணுக்களில் ஏற்படும் ஒரு வகை புற்றுநோயாகும்.

இந்த கேன்சர் ஏற்பட பெரும்பாலும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) காரணமாக உள்ளது. சமீபத்திய ஆய்வில் இந்த கேன்சரால் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 23% இந்தியா மற்றும் 17% சீனாவில் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 6,04,127 புதிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் 3,41,831 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. நம் நாட்டில் பெண்களிடையே அதிகம் காணப்படும் கேன்சர் வகைகளில் இந்த cervical cancer 2-ஆம் இடத்தில் உள்ளது. ஆய்வின்படி நாட்டிலுள்ள 10-ல் 8 பெண்கள் HPV-யால் பாதிக்கப்படுகிறார்கள். மிக பொதுவான இந்த பாலியல் பரவும் நோய்த்தொற்று சில நேரங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸாக இருக்கிறது.

கிராமப்புறங்களில்...

நாட்டில் இந்த கேன்சரால் அதிக இறப்புகள் பதிவாகினாலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் கிடைப்பது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. பிரபல நோயியல் நிபுணர் டாக்டர் சுனிதா கபூர் கூறுகையில், நிறைய பெண்கள் கல்வியறிவற்றவர்களாக, இந்த கேன்சரின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள் இருக்கும் கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். கிராமப்புற இந்தியாவில் ஸ்கிரீனிங் மற்றும் நோயறிதலுக்கான அணுகல் செலவு முக்கிய பிரச்சனையாக உள்ளது. தவிர இந்த கேன்சரோடு தொடர்புடைய பல கட்டுக்கதைகளும் நோய் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன. HPV தடுப்பூசிகளை பற்றி விழிப்புணர்வு இல்லாதது ஒருபக்கம் என்றால் அதனை நினைத்து தயக்கம், அறியாமை மற்றும் பயம் கிராமபுற பெண்களிடையே உள்ளது என்றார்.

தடுப்பூசி பங்கு:

எளிய HPV வைரஸ் பேரழிவு தரும் கேன்சரை உண்டாக்கும் என்பதற்கான விழிப்புணர்வு இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. முதலில் 1980-களின் முற்பகுதியில், HPV தொற்றுக்கும் cervical cancer-க்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் cervical cancer-க்கும் HPV தொற்று தான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. HPV வைரஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில், HPV வகைகள் 16 மற்றும் 18 உலகளவில் 70% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு காரணமாகின்றன. இவற்றில் HPV டைப் 16 மற்றும் டைப் 18 உள்ளிட்டவை உலகளவில் 70% கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமாகின்றன. எனவே இவை கேன்சரை உண்டாக்கும் வைரஸ் வகைகளாக அறியப்படுகின்றன. HPV தொற்றுக்கு எதிராக உரிய தடுப்பூசி போட்டு கொள்வதன் cervical cancer ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த கேன்சருக்கு எதிராக இந்தியா விரைவில் HPV தடுப்பூசியைப் பெறப் போகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. இதற்கிடையே நம் நாட்டின் முதல் cervical cancer-க்கான தடுப்பூசியின் விலை ரூ.200- ரூ.400 என மிகவும் மலிவு விலையில் இருக்கும் என தெரிகிறது.

சரியான நேரத்தில் நோயை கண்டறிந்தால்.!

இந்த வெரைட்டி கேன்சரை கண்டறிவதில் ஏற்படும் தாமதங்கள், இந்திய பெண்களிடையே இந்த கேன்சரால் ஏற்படும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன. ஒருங்கிணைந்த சைட்டாலஜி மற்றும் HPV சோதனையுடன் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் கோ-டெஸ்டிங்கை பயன்படுத்த FOGSI பரிந்துரைக்கிறது. இது தவிர co-testing CIN3 மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய வழிவகுக்கிறது. சைட்டாலஜியுடன் HPV-ஐ இணைத்து கொள்வது சைட்டாலஜியை விட அதிக AIS-ஐ (Adenocarcinoma in situ) கண்டறிய உதவுகிறது. negative co-test ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஸ்பேசிங் ஸ்கிரீனிங்கை அனுமதிக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் co-testing வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இந்த கேன்சர் விகிதங்களில் தொடர்ந்து சரிவை காட்டுகிறது. கிராமங்கள், சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் நோயறிதலுக்கான தரமான அணுகல் இல்லாதது முக்கிய கவலையாக இருந்தாலும், பெருநகரங்களிலும் விழிப்புணர்வில் கணிசமாக குறைபாடு உள்ளது, 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது முடிந்தால் அடிக்கடி pap smear பரிசோதனையை மேற்கொள்ள டாக்டர் கபூர் அறிவுறுத்துகிறார். தரமான நோயறிதல், கட்டமைக்கப்பட்ட ஸ்கிரீனிங் மற்றும் ஃபாலோ-அப் கேர் இந்த கேன்சரை திறம்பட எதிர்த்து போராட முக்கிய திறவுகோல்.

Also Read : கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க செய்யும் வாழ்க்கை முறை பழக்கங்கள்..!

நம்மிடம் cervical cancer-ஐ கண்டறிய அதிநவீன வசதிகள் உள்ளன. இவை தவறான முடிவுகளை குறைக்கலாம் கோல்போஸ்கோபி போன்ற மேம்பட்ட சோதனைகளுக்கு சரியான நோயாளிகளை கண்டறிய மருத்துவர்களுக்கு உதவுகின்றன. நோயாளிக்கு தேவையற்ற செலவைக் குறைக்கலாம் என்கிறார் மருத்துவர் கபூர்.

First published:

Tags: Cancer, Cervical cancer, Uterus Care