ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

PCOS: பிசிஓஎஸ், பிசிஓடி பற்றிய பிரபலங்களின் ஓபன் டாக்... அறிகுறிகள், பிரச்சனைகள் என்னென்ன?

PCOS: பிசிஓஎஸ், பிசிஓடி பற்றிய பிரபலங்களின் ஓபன் டாக்... அறிகுறிகள், பிரச்சனைகள் என்னென்ன?

சிஓஎஸ், பிசிஓடி அறிகுறிகள், பிரச்சனைகள் என்னென்ன?

சிஓஎஸ், பிசிஓடி அறிகுறிகள், பிரச்சனைகள் என்னென்ன?

கடந்த ஆண்டு உலக சுகாதார தினத்தன்று, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவில், "நான் ஏதாவது சாப்பிடுவதற்கு முன்பு

  • Trending Desk
  • 5 minute read
  • Last Updated :

உலக நாடுகளில் பெரும்பாலான பெண்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற ஹார்மோன் பிரச்சனைகளுக்கு சாமானிய பெண்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் பேசியது கவனத்தை ஈர்த்தது.

பெரும்பாலான பெண்களை பாதிக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் தானும் ஒருத்தி என ஸ்ருதி ஹாசன் ஓபனாக பேசியிருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒர்க்அவுட் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். அத்துடன் தான் ‘மோசமான ஹார்மோன் பிரச்சினைகளை’ கையாள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பிசிஓஎஸ் பிரச்சனை:

கர்ப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் நீக்கட்டிகள் தோன்றுவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. சினைப்பையின் சுவர்கள் தடிமனாகி விடுவதாலும் நீர்க்கட்டிகளின் பெருக்கத்தாலும், கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும். மாறி வரும் வாழ்க்கை முறை, அசுத்தமான காற்றை சுவாசிப்பது, உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் பெண்களுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சி தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தையின்மை, ஹார்மோன் இன்போலன்ஸ், மன அழுத்தம், தேவையில்லாத இடத்தில் முடி வளர்வது, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

Read More : வெவ்வேறு வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை வெளிப்படுத்திய ஆய்வு!

உண்மையில், இன்று, 10ல் 1 பெண்கள் வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக PCOS பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த நிலையில் போராடுபவர்களுக்கு சர்வீகித உணவை சரியாக சாப்பிடுவது உடற்பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

PCOS, PCOD & எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?

பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) மற்றும் பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) என்பவை பெரும்பாலும் ஒரே வகையானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், மருத்துவ ரீதியாக, பிசிஓடி என்ற சொல் தாமதமான அண்டவிடுப்பின் லேசான வடிவங்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை குறிக்கிறது. அதேசமயம், பி.சி.ஓ.எஸ் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு உள்ளிட்ட கடுமையான ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை அறிகுறியாக கொண்டுள்ளது.

இதற்கு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதும், உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமும் ஹார்மோனை சமநிலையின்மைக்கு தூண்டி மாதவிடாய் சுழற்சியை சீரற்றதாக மாற்றுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிசிஓஎஸ் அல்லது பிசிஓடியில் உள்ள அடிப்படை பிரச்சனை என்னவென்றால், கருப்பைகள் ஹார்மோன்களை உற்பத்தி செய்யாமல் இருப்பதுதான். மேலும் கருப்பையில் இருந்து மாதாந்திர முட்டை வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதால், கருவுறுவதற்கான தாமதம் அல்லது மாதவிடாய்க்கான தாமதத்தை அதிகரிக்கிறது.

இந்நிலையில் முகம், தாடை, மார்பு போன்ற தேவையற்ற பகுதிகளில் முடி வளர்வது, முகப்பரு ஆகிய பிரச்சனைகளை வேறு உருவாக்குகிறது.எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பைக்கு வெளியே உள்ள அசாதாரண இடங்களில், அடிவயிற்று வலி மற்றும் டிஸ்மெனோரியா போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது. எண்டோமெட்ரியோசிஸ், கருப்பையில் அசாதாரண எண்டோமெட்ரியல் திசு காணப்படுகிறது. கருப்பையை ஒட்டிய இடங்களில். மாதவிடாய் காலங்களில், இடுப்பின் இந்த பகுதிகளில் இரத்தம் சேகரிக்கப்பட்டு, அடிவயிற்றில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட காரணமாக அமைகிறது.

Read More : சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதியா..? இயற்கையாகவே கல்லை கரைக்கும் வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்

அறிகுறிகள்:

இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் பெண் புற்றுநோய் நிபுணர், ரோபோட்டிக் மகப்பேறு மற்றும் கருப்பை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரிகா குப்தா கூறுகையில், மாதவிடாய் காலங்களில் அடிவயிற்றில் சில அளவு வலி ஏற்படுவது பொதுவானது என்றாலும், எந்த விதமான கடுமையான வலியையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிறார்.

மாதவிடாய் காலத்தில் வலி இயல்பானது தான் என்றாலும், வலி காரணமாக பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுப்பது அல்லது மாதவிடாய் காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது போன்ற நிலை உருவானால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது.

பி.சி.ஓ.எஸ் உடன், ஆண்ட்ரோஜன் - ஆண் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு, எடை அதிகரிப்பு, முகப்பரு, முகம் மற்றும் கழுத்தில் அதிகமாக முடி வளர்வது, அலோபீசியா மற்றும் மலட்டுத்தன்மை ஆகிய அறிகுறிகள் தென்படும்.

பிசிஓஎஸ், பிசிஓடி பற்றி பேசிய பிரபலங்கள்:

மசாபா குப்தா:

கடந்த ஆண்டு, மசாபா குப்தா தனது இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றிய ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டதோடு, அதில், “எனது காலை 7-9 மணி வரையிலான உடற்பயிற்சி, நடையிற்சி, யோகா ஆகியவை சமரசம் செய்து கொள்ளக்கூடியவை கிடையாது. மேலும் வார நாளில் வெளி உணவுகளை ஆர்டர் செய்யக்கூடாது, இரவு நேர கொண்டாட்டம் , மன அழுத்தம் மற்றும் தொலைபேசி அழைப்பு என எதுவும் என்னை இதிலிருந்து திசை திருப்ப முடியாது.

ஏனெனில் நான் சமரசம் செய்து கொள்ளாமல் கடைபிடிக்க்கும் இவையே எனது பிசிஓடியை கிட்டத்தட்ட குணப்படுத்தவும், மருந்துகளை நிறுத்தவும், சிறப்பாக கவனம் செலுத்தவும், வார இறுதியில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நான் விரும்பும் உணவு மற்றும் பானத்துடன் ஓய்வு நேரத்தை அனுபவிக்கவும் உதவியது. 10 வருடங்களில் இன்று நான் மிகவும் இலகுவாக இருக்கிறேன்... உங்கள் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் கவனம் (sic) செய்வதன் மூலம் நிறைய ஹார்மோன் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்! ” என பதிவிட்டிருந்தார்.

லியா மைக்கேல்:

2020-ல், PCOS உடனான தனது போராட்டத்தைப் பற்றி லியா மைக்கேல் மனம் திறந்து பேசினார். பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், "எடை அதிகரிப்பு மற்றும் மோசமான சரும பாதிப்பு போன்ற பக்க விளைவுகள் கொடூரமானவை. இந்த அறிகுறிகள் தென்பட்ட போது, நான் ஒரு பெரிய பெண் மருத்துவரை அணுகினேன், அவர் என்னை பார்த்த நிமிடத்திலேயே, 'ஓகே, உனக்கு பிசிஓஎஸ்' இருக்கிறது என தெரிவித்தார். பின்னர் பொறுமையாக எனக்கு எல்லாவற்றையும் விளக்கினார். உணவின் மூலம், என்னால் அதை நிர்வகிக்க முடிந்தது. ஆனால் எனக்கு வந்த PCOS தீவிர நிலையை சேர்ந்ததாக இல்லாததால் நான் அதிர்ஷ்டசாலி,” என தெரிவித்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன்:

அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எனது PCOS மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் (sic) ஆகியவற்றில் சில மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொண்டேன். எனது உடல் சிறப்பாகச் செயல்படுவதை இயற்கையான இயக்கமாக நான் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் சரியாக சாப்பிட்டு நன்றாக உறங்கி, என் வேலையை அனுபவிப்பதற்கு நான் நன்றி கூறுகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

Read More : இளம் வயதிலேயே டிமென்ஷியா... அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என எச்சரிக்கும் மருத்துவர்கள்

சாரா அலி கான்:

சாரா அலிகான் டி.வி. டாக் ஷோ ஒன்றில் பங்கேற்ற போது தனது பிசிஓடி பிரச்சனைகள் குறித்து மனம் திறந்தார். “நான் 96 கிலோவாக இருந்தேன். உண்மையில், எனக்கு PCOD இருந்தது. எனக்கு இன்னும் இருக்கிறது" என தெரிவித்தார். மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, "பிசிஓடி பிரச்சனையுடன் நான் இன்றுவரை போராடி வருகிறேன். ஏனென்றால் ஒரே உண்மையான சிகிச்சையின் மூலமாகவே ஒரு நிலையான, கவனமான மற்றும் உறுதியான வாழ்க்கை முறைக்கு மாற முடியும். இந்த பிரச்சனைக்கு எந்த குறுக்குவழியும் இல்லை” என தெரிவித்தார்.

சோனம் கபூர்:

கடந்த ஆண்டு உலக சுகாதார தினத்தன்று, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவில், "நான் ஏதாவது சாப்பிடுவதற்கு முன்பு காலையில் நடைபயிற்சி எனக்கு உதவுகிறது, அதனால் என் உடலை ஒருங்கிணைக்க முடியும். கார்டியோ உடற்பயிற்சிகள் உண்மையில் எனக்கு உதவியது என நினைக்கிறேன், ஏனெனில் என் பிசிஓஎஸ் பிரச்சனையை சமாளிக்கவும், எடையை பராமரிக்கவும் அது உதவுகிறது” என தெரிவித்தார்.

விக்டோரியா பெக்காம்:

விக்டோரியா பெக்காம் தனது நான்காவது குழந்தையான ஹார்பர் செவனை கருத்தரிக்க முயன்றபோது PCOS நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில், அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ஒவ்வொரு முறையும் யாராவது, ‘நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்கும்போதெல்லாம், நான் சொன்னேன், ‘உண்மையில், நான் என் பிசிஓஎஸ் காரணமாக மலட்டுத்தன்மையுடன் போராடுகிறேன், அதனால் நானும் என் கணவரும் பல கருவுறுதல் சிகிச்சைகளை மேற்கொண்டோம். இன்னும் குழந்தை இல்லை, ஆனால் அது விரைவில் நடக்கும்” என வெளிப்படையாக பேசியது. பிசிஓஎஸ் பிரச்சனையால் பிரபலங்களே குழந்தை பேறுக்காக எவ்வளவு போராட வேண்டி உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது.

இப்படி திரைப்பிரபலங்கள் பலரும் சொல்லியுள்ள கருத்துக்களை வைத்து பார்க்கும் போது பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் பிரச்சனைகளை தீர்க்க உடற்பயிற்சி செய்வதும், சரியான உணவை உட்கொள்வது, 8 மணி நேர தூக்கம் ஆகியவையும், மருத்துவரின் பரிந்துரைகளை செயல்படுத்துவதும் முக்கியமானது என்பது தெளிவாகிறது.

First published:

Tags: Health tips, PCOD, PCOS