• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்களுக்கு ஏற்படும் புதிய சிக்கல் : இதய அழற்சி உண்டாகிறதா..?

தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்களுக்கு ஏற்படும் புதிய சிக்கல் : இதய அழற்சி உண்டாகிறதா..?

தடுப்பூசி

தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் வயதினர் குறிப்பாக ஆண்கள் மையோகார்டிட்டிஸ் (Myocarditis) எனப்படும் இதய தசைகளில் அழற்சி ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு இதய அழற்சி என கூறப்படும் Heart Inflammation பிரச்சனை ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த சென்டர்ஸ் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல் அண்ட் பிரவன்சன் (Centers for Disease Control and Prevention) என்ற அமைப்பு கொரோனாவுக்காக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு இதய அழற்சி எனப்படும் Heart Inflammation பிரச்சனை ஏற்படுவதாக கூறுகிறது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் வயதினர் குறிப்பாக ஆண்கள் மையோகார்டிட்டிஸ் (Myocarditis) எனப்படும் இதய தசைகளில் அழற்சி ஏற்படுவதாக கூறுகிறது.

    பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும் என்கிறது அந்த அமைப்பு, மேலும் அதிக பேரிடம் இந்த நோய் கண்டறியப்படவில்லை என்றாலும் சுகாதாரத்துறையினர் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என தகவல் அளித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் இதய அழற்சியினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலை அந்த அமைப்பு வெளியிடவில்லை. இதுகுறித்து மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    Corona Vaccine, Covaxin, Covishield

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் ஹெல்த் செக்யூரிட்டையை சார்ந்த மருத்துவர் அமெஸ் அடல்ஜா , தடுப்பூசிகளினால் இதய அழற்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து உண்மை நிலையை ஆராய வேண்டும் என்றார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட நான்கு நாட்களில் இந்த பிரச்சனை எழுகிறது. ஆனால் எந்த தடுப்பூசியினால் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறவில்லை.

    பிஃபிசெர்(Pfizer) தடுப்பூசி செலுத்திக்கொண்ட குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு இதய அழற்சி ஏற்பட்டதாக இஸ்ரேல் மருத்துவ அமைச்சரகம் தெரிவித்தது. ஆனால் இது குறித்து இன்னும் முழுமையான முடிவு எட்டப்படவில்லையாம். பாதிப்பு ஏற்பட்டோரில் பெரும்பான்மையானவர்கள் 30 வயது வரை உள்ளவர்கள். ஆனால் அதிகம் பேருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை எனவும் இந்த பிரச்சனை தடுப்பூசி செலுத்திக்கொண்டது தான் காரணமா என்பது இன்னும் தெரியவரவில்லை என்றும் கூறுகிறது.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை பிரச்னையா..? காரணங்களும்…அறிகுறிகளும் என்ன..?

    மேற்கூரிய பிரச்சனைகள் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் தான். இந்திய தடுப்பூசிகளினால் இப்படியான பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை. இருப்பினும் சிலருக்கு மட்டுமே இந்த பிரச்சனை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான்.



    எது எப்படியோ மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே, உலகம் கொரோனா பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு என அரசு, சுகாதாரத்துறையினர் என அனைவரின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் தற்போது நிலவும் பொருதாளார நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்துவது கடினம். இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: