ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களுக்கு 30 வயதில் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு என்ன காரணம்..?

பெண்களுக்கு 30 வயதில் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு என்ன காரணம்..?

குழந்தையின்மை

குழந்தையின்மை

மூன்று வகையான நார்த்திசுக்கட்டிகள் உள்ளன. அவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பவை. சில பெண்களுக்கு எந்தவித அறிகுறிகளும் ஏற்படாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊருக்கு ஒன்றிரண்டு என்று இருந்த கருத்தரிப்பு மையங்கள் இன்று பல்கி பெருகியிருப்பதை பார்த்தாலே குழந்தையின்மை என்பது மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது என்பது நமக்கு தெரிய வரும். குழந்தையின்மை என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான குறைபாடு ஆகும். எனினும், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் இந்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றனர்.

வயது முதிர்வு, போதிய அளவுக்கு கருமுட்டை உற்பத்தி இல்லாமை, புற்றுநோய், பிசிஓஎஸ் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை உருவாகிறது. அதே சமயம் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கக் கூடிய விஷயமாக கர்பப்பை நார்த்திசுக்கட்டி பிரச்சினை இருக்கிறது. மூன்றில் இரண்டு பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுவதற்கு இதுவே காரணமாகும்.

கர்ப்பப்பை உள்ளே தசைகள் மற்றும் நார்த்திசுக்களை கொண்டு உருவாகும் அசாதாரணமான வளர்ச்சி நிலையைத்தான் நார்த்திசுக்கட்டி என்று குறிப்பிடுகின்றனர். இது உருவாகும் பட்சத்தில் கர்ப்பப்பையில் கரு நிலைத்து நிற்காது. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பம் அடைவதே சிரமம் ஆகிவிடும். இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த கருத்தரிப்பு மையம் ஒன்றின் இயக்குநர் மற்றும் மகப்பேறு மருத்துவ சிகிச்சை நிபுணர் ஷோபா குப்தா பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நார்த்திசுக்கட்டிகளை வெகு விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றார் அவர். நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி, சிகிச்சை முறை உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நார்த்திசுக்கட்டி வளர்ச்சி அடைவது ஏன்?

நார்த்திசுக்கட்டிகள் எப்படி உருவாகின்றன என்ற துல்லியமான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என்றாலும், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் இடையே ஒரு பிணைப்பு இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் நார்த்திசுக்கட்டிகள் இருந்திருப்பின், அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரக் கூடும்.

இதுகுறித்து ஷோபா குப்தா கூறுகையில், “நார்த்திசுக்கட்டி நோய் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பின், அவ்வப்போது இதுகுறித்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக பெரும் அபாயங்களை தவிர்க்கலாம்’’ என்று கூறினார்.

நார்த்திசுக்கட்டிகள் என்னவாக மாறும்

மூன்று வகையான நார்த்திசுக்கட்டிகள் உள்ளன. அவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பவை. சில பெண்களுக்கு எந்தவித அறிகுறிகளும் ஏற்படாது. இதுகுறித்து ஷோபா குப்தா கூறுகையில், “பெரும்பாலும் அறிகுறிகள் தென்படுவதில்லை. இருப்பினும் உடல் சோர்வு, கடுமையான வயிறு வலி, தீவிரத்தன்மை கொண்ட மாதவிலக்கு, உடலுறவு கொள்ளும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்’’ என்றார்.

குழந்தையின்மைக்கு காரணம்

கர்ப்பப்பை சுவர்களில் வளரக் கூடிய நார்த்திசுக்கட்டிகளின் காரணமாக கருத்தரித்தலில் சிக்கல் உண்டாகக் கூடும். கருமுட்டை வெளியேறுவதை இது தடுக்கிறது. அதேபோன்று கருத்தரித்த முட்டையானது கர்ப்பப்பை உள்ளே கருவாக தங்கும் நடவடிக்கையையும் இது தடுக்கிறது. மிக அதிகமான நார்த்திசுக்கட்டிகளை கொண்ட பெண்களுக்கு கர்ப்பம் அடைவதிலும், குழந்தையை சுமப்பதிலும் சிக்கல் உண்டாகும் என்று ஷோபா குப்தா தெரிவிக்கிறார்.

Also Read : இளம் தம்பதிகள் குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்..? மருத்துவர் விளக்கம்

சிகிச்சை முறை

நார்த்திசுக்கட்டி பிரச்சினைக்கு எண்ணற்ற சிகிச்சை முறைகள் உள்ளன. பொதுவாக அவற்றின் வளர்ச்சியை தடுக்க மருந்துகள் அல்லது ஊசிகள் செலுத்தப்படும். சில சமயம் பெரிய கட்டிகளை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். நோயாளியின் வயது, அவர்களது உடல்நலன், குழந்தை பெற இருக்கிறார்களா என்ற காரணங்கள் மற்றும் கட்டியின் அளவு, இருப்பிடம் போன்றவற்றை பரிசீலித்து சிகிச்சை அளிக்கப்படும் என்று ஷோபா குப்தா தெரிவித்தார்.

First published:

Tags: Infertility, Pregnancy, Pregnancy Symptoms