இன்றைக்குப் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றாக மூளை பக்கவாதம். வேலைப் பளு மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகளை மக்கள் நாளுக்கு நாள் சந்தித்துவருகின்றனர். ஒரு கட்டத்தில் இவற்றைச் சமாளிக்க முடியாத போது தான், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதுப் போன்ற காரணங்களால் மூளைக்கு இரத்த விநியோகம் தடைப்பட்டு மூளை பாதிக்கப்படுவதைத் தான் மூளை பக்கவாதம் என்கிறோம். பொதுவாக இரத்த ஓட்டம் இயல்பாக இருந்தால் தான் உடல் முழுவதும் சீராக இயங்கும். சில சமயங்களில் மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதோடு, இரத்த நாளங்கள் வெடிப்பதால் மூளைக்கு இரத்த கசிவு ஏற்படும். இதனால் மூளை முறையாக இயங்க முடியாத போதும் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்..
பக்கவாதத்திற்கான ஆபத்து காரணிகள் என்ன? மூளை பக்கவாதத்திற்கான ஆபத்து காரணிகள் பல வகைகள் உள்ளன.
மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள்: உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், அதிக பிளாஸ்மா கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, வாய்வழி கருத்தடை மாத்திரைகள், இதய நோய், அசாதாரண இதய துடிப்பு போன்றவற்றால் ஏற்படும் மூளை பக்கவாத நோயை முறையான சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும். எனவே தான் இதை மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள் என்கின்றனர்.
மாற்ற முடியாத ஆபத்து காரணிகள்: முதியோர் வயது, ஆண் பாலினம், இனம்- ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், முந்தைய பக்கவாதங்களின் வரலாறு, பக்கவாதத்திற்கான மரபணு ஆபத்து காரணிகள் போன்றவை மாற்ற முடியாத ஆபத்து காரணிகளாக உள்ளன.
மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள்? பக்கவாதம் திடீரென ஏற்படக்கூடியது என்றாலும் இதற்கு பல அறிகுறிகளும் உள்ளன. பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில் முகம், கை அல்லது கால் பலவீனமாவதோடு உணர்வின்மை ஏற்படுகிறது.
ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் மங்கல அல்லது பார்வை இழப்பு போன்ற பார்வைக்குறைபாடுகள்.
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், வலிப்பு, எந்த காரணமும் இல்லாமல் கடுமையான தலைவலி, உடல் சோர்வு போன்றவை மூளை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்.
இதோடு மூளையின் செயல்பாடு பாதிக்கும் போது, உடல் நலத்தில் மட்டமில்லை, பேச்சு தடுமாற்றமும் ஏற்படுகிறது.
பக்கவாதத்திற்கான சிகிச்சை: மேற்கூறியுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டறிந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். குறிப்பாக லேசான நெஞ்சு வலி ஏற்பட்டால் அது அஜீரணம் என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.
Also Read : புகைப்பழக்கம் நுரையீரலை மட்டுமல்ல மூளையையும் அதிகம் பாதிக்கும் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
இதோடு பக்கவாதம் என்று சந்தேகிக்கப்பட்டவுடன் CT அல்லது MRI மூளை வடிவில் நியூரோஇமேஜிங் தேவைப்படுகிறது. மேலும் அறிகுறிகள் தோன்றிய 4.5 மணி நேரத்திற்குள் நோயாளி மருத்துவமனையை அடைந்தால், திசு பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் எனப்படும் ஊசியை தகுதியுள்ள நோயாளிகளுக்கு இரத்த உறைவைக் கரைத்து, இரத்த விநியோகத்தை மீட்டெடுக்கலாம். இது இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அறுவைசிகிச்சை: ஒரு பெரிய இரத்த நாளம் தடுக்கப்பட்டால், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி எனப்படும் ஒரு செயல்முறை செய்யப்படுகிறது. அங்கு இரத்தக் குழாயை மீட்டெடுக்க எண்டோவாஸ்குலர் நுட்பங்களைப் பயன்படுத்தி இரத்த உறைவு அகற்றப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brain Disorder, Brain Health, Stroke