• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சத்தமின்றி இளம் வயதினரையும் தாக்கும் ஆர்த்ரைடிஸ்.. அறிகுறிகள் என்ன..?

சத்தமின்றி இளம் வயதினரையும் தாக்கும் ஆர்த்ரைடிஸ்.. அறிகுறிகள் என்ன..?

ஆர்த்ரைடிஸ் பாதிப்பு

ஆர்த்ரைடிஸ் பாதிப்பு

உலகம் முழுவதும் உள்ள சுமார் 350 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்த்ரைடிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதிப்பு எப்படி எதனால் ஏற்படுகிறது என்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட வழி இல்லை

  • Share this:
சத்தமின்றி பலரையும் பாதிக்க கூடிய ஒரு நோயாக இருந்து வருகிறது ஆர்த்ரைடிஸ் (Arthritis). இது மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தக் கோளாறையும் குறிக்க பயன்படுத்தப்படும் சொல் இது. அதாவது ஆர்த்ரைடிஸ் (மூட்டு நோய்கள்) என்பது மூட்டு இணைப்புகளை சேதப்படுத்தும் பல நோய்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முதுமை ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருந்தாலும் பல காரணங்களால் 30-களில் உள்ளவர்கள் கூட மூட்டுகளில் பாதிப்புகளை சந்திப்பது இப்போது அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 350 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்த்ரைடிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதிப்பு எப்படி எதனால் ஏற்படுகிறது என்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட வழி இல்லை என்றாலும் பொதுவான ஆர்த்ரைடிஸ் வகைகள் மற்றும் அதன் காரணங்களை பற்றி பார்ப்போம்.

பொதுவான ஆர்த்ரைடிஸ் வகைகள்..

ஆர்த்ரைடிஸ் என்பது எலும்புகள் இணையும் இடமான மூட்டுகளில் ஏற்படும் அழற்சியாகும். இது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான கோளாறு. தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவை. 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மூட்டுப் பிரச்சனைகள் ஆர்த்ரைடிஸ் என்ற குடைசொல்லின் கீழ் வருகிறது. இப்போது சில பொதுவான ஆர்த்ரைடிஸ் வகைகளை பார்ப்போம்.

ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸ்: மூட்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்: தன்னுடல் தாக்க நோயான இதை முடக்கு வாதம் என்கிறோம். நோயெதிர்ப்பு அமைப்பு உடலின் பல்வேறு பாகங்களை குறிப்பாக மூட்டுகளை தாக்குவதால் நிகழ்கிறது.

சொரியாடிக் ஆர்த்ரைடிஸ்: இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.

கீல்வாதம்: ஒரு மூட்டில் யூரிக் அமில படிகங்கள் உருவாவதன் விளைவாக இந்த நிலை உண்டாகிறது.

இளம் மூட்டுவலி : 16 வயது அல்லது அதற்கு குறைவான குழந்தைகளை பாதிக்கும் ஒரு கோளாறு. நோயெதிர்ப்பு அமைப்பு குறைபாடு மூட்டுகளை சுற்றியுள்ள திசுக்களை பாதிப்படைய செய்வதால் ஏற்படுகிறது.



குடும்ப வரலாறு..

ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாதத்தின் போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு குழப்பமடைந்து உடலின் திசுக்களையே அழிக்க துவங்குவதால், மூட்டுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் அல்லது பிற தன்னுடல் தாக்க நோய்களின் குடும்ப வரலாறு காரணமாக ஒருவர் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள்

உடல்பருமன்.!

ஆர்த்ரைடிஸின் பொதுவான வகை ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸ். வயதாவதன் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் இந்நிலைக்கு காரணம் என்றாலும், இளவயதினருக்கு இந்த கோளாறு ஏற்பட உடல்பருமன் காரணமாக இது ஏற்படலாம். அளவுக்கு மீறிய உடல் எடை மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸ் ஏற்படும் வாய்ப்பு உருவாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.



காயங்கள்..

மூட்டுகளில் காயங்கள் அல்லது மீண்டும் மீண்டும் அழுத்தம் ஏற்படுவது ஆர்த்ரைடிஸ் கோளாறு ஏற்பட வழிவகுக்கும். மூட்டுகள் தேய்மானம் அடைந்துள்ளதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸை குறிக்கும். குருத்தெலும்பு திசுக்களை பாதிக்க செய்யும் வகையிலான மூட்டு காயங்களும் ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸை ஏற்படுத்தும்.

உடல் உழைப்பின்மை..

புகைப்பழக்கம் மற்றும் போதுமான உடல்செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல வாழ்க்கை முறை காரணிகள் ஆர்த்ரைடிஸ் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: