முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பது சாத்தியமா..?

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பது சாத்தியமா..?

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பது சாத்தியமா..?

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பது சாத்தியமா..?

மார்பக புற்றுநோய்க்குப் பிறகு கர்ப்பம் சாத்தியம் மற்றும் இளம் பெண்கள் மார்பகப் புற்றுநோய் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து கர்ப்பம் தரிக்க முடியும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் இயற்கையாக கருவுறுதல் சதவிகிதம் குறைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை மற்றும் கருத்தரிப்பதற்கான பல்வேறு சிகிச்சை முறைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களை அதிகமாக தாக்கக் கூடிய புற்றுநோய் வகைகளில் ஒன்றான மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் கருவுறும் தன்மை எந்த அளவுக்கு பாதிக்கப்படும்?

குறிப்பாக 40 வயதுக்கு குறைவாக இருக்கும் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படும் பொழுது, அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா அல்லது கருத்தரித்தால் அவர்கள் ஆரோக்கியம் எந்த அளவுக்கு குழந்தையை தாங்கும் என்பதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பெண்களுக்கான இனப்பெருக்க வயது அதாவது பாலியல் ஆரோக்கியம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஆரோக்கியமான வயது என்பது தற்பொழுது 20களின் பிற்பகுதி முதல் 40 வயது வரை காணப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டு. குழந்தை பிறப்பையும் கொஞ்சம் தாமதமாக திட்டமிடுகின்றனர். ஆனால் இதே காலகட்டத்தில்தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, இவை இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்ப காலத்துடன் தொடர்புடைய மார்பக புற்றுநோய் மற்றும் குழந்தை பெற்ற பிறகு உடல் நிலையில் ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் என்பதும் இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது என்று அச்சுறுத்தக்கூடிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

கர்ப்பம் சம்பந்தப்பட்ட புற்றுநோய் மற்றும் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் 

கர்ப்ப காலத்தில் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது மற்றும் இது மிகவும் வீரியமானதாக கருதப்படுகிறது. 3000 முதல் 10000 கர்ப்பங்களில் 1 பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் புற்றுநோயை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை, நல்வாழ்வை மனதில் கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய், கர்ப்பமாக இல்லாத பெண்களை எவ்வாறு பாதிக்குமோ அதே போல கர்ப்பிணிகளையும் பாதிக்கும், சில நேரங்களில் தீவிரமான பாதிப்பையும் ஏற்படுத்தும். கர்ப்ப நேரத்தில் உண்டாகும் மார்பக மாற்றங்களால், இதைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

பொதுவாக, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பாதுகாப்பாக குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை கருவுக்குப் பாதுகாப்பான சிகிச்சையை அளிப்பதும், அதன்பின் சிகிச்சையைத் தொடர்வதும் நோக்கமாக கொண்டு மருத்துவர்கள் செயல்படுகிறார்கள். கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் அறுவை சிகிச்சை செய்து, கீமோதெரபி கொடுக்கலாம். ஆனால் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு, ஹார்மோன்கள் மற்றும் ஸ்கேன் ஆகியவற்றை மருத்துவர்கள் தவிர்க்கிறார்கள்.

மார்பக புற்றுநோய்க்குப் பிறகு கர்ப்பம் சாத்தியம்

மார்பக புற்றுநோய்க்குப் பிறகு கர்ப்பம் சாத்தியம் மற்றும் இளம் பெண்கள் மார்பகப் புற்றுநோய் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து கர்ப்பம் தரிக்க முடியும். இதில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் கருத்தரிப்பதன் பாதுகாப்பிற்கான உறுதியளிக்கும் சான்றுகளை பல்வேறு ஆய்வு முடிவுகள் வழங்குகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பமாக வேண்டும் என்ற ஆசை எப்போதும் அவர்களின் உயிர்வாழ்தல் மற்றும் உடல் நலப் பராமரிப்பு திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்பட வேண்டும்.

பல்வேறு சிகிச்சைகள் மற்றும் நோயால் ஏற்படும் விளைவுகளின் காரணமாக பொது மக்களுடன் ஒப்பிடுகையில் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டு, உயிர் பிழைத்தவர்கள் அடுத்தடுத்த அல்லது உடனடியாக கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால், பிறக்கும் போதே குறைபாடு அல்லது அம்மாவுக்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்ட்ரோஜன் பாசிட்டிவ் மார்பகப் புற்றுநோய் மற்றும் அதைச் சார்ந்து நிகழும் ஒரு சில சர்ச்சைகள் நிரூபிக்கப்படவில்லை.

இருப்பினும் நோயாளியின் வயது, மீண்டும் புற்றுநோய் வளரக்கூடிய ஆபத்து, துணை சிகிச்சை மற்றும் கருப்பை ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தனிப்பட்ட அணுகுமுறையை எடுப்பது புத்திசாலித்தனம்.

சிகிச்சையின் விளைவாக அல்லது புற்றுநோயியல் நிலைமைகளின் விளைவாக கருவுறாமை ஏற்படலாம்

சமீப காலங்களில் புற்றுநோயியல் மற்றும் கருவுறுதல் சார்ந்த சிகிச்சைகள் மேலாண்மை இரண்டிலும் இணையான மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகிறது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளின் கருவுறுதல் பாதுகாப்பிற்கான சாத்தியக்கூறுகளை முன்னணியில் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், ஒரு சிலருக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு அல்லது சிகிச்சையின் பின்விளைவாக, கருத்தரிக்க முடியாமல் போகலாம்.

கீமோதெரபி அல்லது மருந்துகளின் அளவு சார்ந்த விளைவு மற்றும் வயது சார்ந்த விளைவு மூலம் கருவுறுதலை பாதிக்கலாம்

இடுப்புப் பகுதிக்கான கதிர்வீச்சு (டோஸ் சார்ந்தது) கருப்பையைப் பாதிக்கலாம் மற்றும் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படலாம். இடுப்புப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை அதையும் உள்ளடக்கியிருக்கும்.

Also Read : கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு பெண்களுக்கு கருவுறுதலைப் பாதுகாப்பதற்காக பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் முறைகள்:

  • கரு கிரையோப்ரெசர்வேஷன்
  • கருப்பை திசு பாதுகாப்பு,
  • கருமுட்டைப் பாதுகாப்பு
  • கருப்பைச் சுழற்சியை தடுப்பதற்கு மருந்துகள் மற்றும் இதனால் தற்காலிக மாதவிடாய் நிறுத்தத்தைத் தூண்டுகிறது
  • கருப்பை இடமாற்றம்

நவீன காலங்களில் குறிப்பாக இளம் வயதினரிடம் புற்றுநோய் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதால், பெரும்பாலான நோயாளிகள் மற்றும் தம்பதியரிடத்தில் கருவுறுதல் முக்கிய விவாதமாக உள்ளது.

First published:

Tags: Breast cancer, Pregnancy, Pregnancy changes