• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Dengue | வேகமாக பரவும் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல்! அறிகுறிகள் என்ன? அலர்ட் பதிவு

Dengue | வேகமாக பரவும் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல்! அறிகுறிகள் என்ன? அலர்ட் பதிவு

டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகள் நோயின் தீவிரத்தை பொறுத்து வேறுபடுகின்றது.

  • Share this:
மழைக்காலங்களில் டெங்கு வைரஸ் அதிகம் பரவுகிறது. இந்த காலங்களில் காய்ச்சல் உள்ளிட்ட டெங்கு போன்ற நோய்களால் பல்வேறு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளுக்கு நாள் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கோவிட்-19 அறிகுறியும், டெங்குவின் அறிகுறியும் ஒரே மாதிரியாக இருப்பதால் எந்த நோய் என்று கண்டறிந்து, உடனே சிகிச்சை பெற வேண்டும். டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் குறித்து இங்கு விரிவாக காண்போம்.,

டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல்:

ஏடிஸ் கொசு கடிப்பதால் டெங்கு பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நபரை கடிக்கும் கொசு, மற்றவரை கடிக்கும் போது வைரஸ் அவருக்கும் பரவுகிறது. இதனால் கொசு கடித்தால் டெங்கு வருவது என்பது மிகவும் பொதுவானது. டெங்கு வைரஸின் தீவிரமான நிலையே ‘டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல்’ ஆகும். டெங்கு வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பிறகும் கூட சிலருக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் வரும்.

டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகள்:

டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகள் நோயின் தீவிரத்தை பொறுத்து வேறுபடுகின்றது. தோலில் இரத்தப்போக்கு, அடிக்கடி வாந்தி வருதல்,வயிற்று வலி, அதிக காய்ச்சல், தலைவலி,குமட்டல், தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி, தோலில் தடிப்புகள் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு, திடீரென புதிய அறிகுறிகள் தோன்றினால், டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஓய்வின்மை, கடுமையான அல்லது திடீர் காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, தோலில் இரத்தங்களுடன் கூடிய சிராய்ப்பு, மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.



யாருக்கு அதிக வாய்ப்புள்ளது?

கொசுக்களால் பரவும் நோயான டெங்கு எந்தவொரு நபருக்கும் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். கவனக்குறைவு மற்றும் தாமதமான சிகிச்சை கூட கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும். கைக்குழந்தைகள், சிறியவர்கள், கர்ப்பிணிகள், வயதான நபர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

Must Read | இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிறது என்று அர்த்தம்!

சிகிச்சை:

மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம் ஆகும். வலியை கண்ட்ரோல் செய்யும் ஓவர்-தி-கவுண்டர் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், எலக்ட்ரோலைட் சிகிச்சை, இரத்தமாற்றம், ஆக்ஸிஜன் சிகிச்சை ஆகிய முறைகளை பின்பற்றலாம். இந்த முறைகள் அனைத்தும் டெங்குவை கட்டுப்படுத்த உதவுகின்றன. சில சமயங்களில் பாதிப்பு குறைவாக இருப்பின் இயற்கையாகவே குணமடையலாம். அறிகுறிகள் தோன்றிய உடனேயே மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.

தடுப்பது எப்படி? 

சிகிச்சை எடுப்பதை விட நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்போதும் நல்லது ஆகும். டெங்குவை தடுக்க தடுப்பூசி இல்லை என்றாலும், எளிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்கலாம். முதலில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். வெளியில் செல்லும் போது கொசு விரட்டி கிரீம் பயன்படுத்துதல், மாலை நேரத்திலேயே ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூட வேண்டும், வெளியே செல்லும் போது முழு ஆடைகளை அணிவது, தண்ணீர் தொட்டியை மூடி வைத்தல்,வீ ட்டைச் சுற்றியுள்ள திறந்தவெளியில் குப்பை போடாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றினால் டெங்கு வராமல் தற்காத்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: