ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர் காலத்தில் இருந்தே விளக்கெண்ணெய் பல்வேறு சிகிச்சைக்களுக்கான மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலவகையான நோய்களுக்கு ஒரே மருந்து என்பதால் நமது பாட்டி வைத்தியத்தில் எப்போதும் ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய்-க்கு தனி மவுசு உண்டு.
விளக்கெண்ணெய் பல ஆண்டுகளுக்கு முன்பு 'பால்மா கிறிஸ்ட்' என்றும் அழைக்கப்பட்டது, ஏனெனில் தாவரத்தின் இலைகளின் வடிவம் கிறிஸ்துவின் உள்ளங்கையை ஒத்திருந்ததாக கூறப்படுகிறது. பண்டைய எகிப்தில் இது கண் எரிச்சல்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது மற்றும் தோல் சிகிச்சைக்கான இயற்கை மருந்தாகவும் உதவியுள்ளது. ஆயுர்வேதம் நீண்ட காலமாக விளக்கெண்ணெய்யின் நன்மைகள் குறித்து நமக்கு அறிவுறுத்தியுள்ளது, எனவே இந்தியாவில் இது சரும பிரச்சனைகளை சரி செய்யவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெய்யை பின்னர் சூடாக்கி தெளிவுபடுத்தி பயன்படுத்தப்படுகிறது. விளக்கெண்ணெய்யில் பல மருத்துவ குணங்கள் கொண்ட ரிசினோலிக் அமிலத்தின் அடர்த்தியான செறிவு அடங்கியுள்ளது.
ரிசினோலிக் அமிலம் வேறு எந்த பொருட்களிலும் காணப்படவில்லை, என்பதால் இது விளக்கெண்ணெய்யை தனித்துவமாக்குகிறது. விளக்கெண்ணெயில் சில நன்மை பயக்கும் உப்புகள் மற்றும் எஸ்டர்கள் உள்ளன, அவை சருமத்தை சீரமைக்கும் முக்கிய பொருளாக பயன்படுகிறது. அதனால்தான் விளக்கெண்ணெய் பல அழகுசாதனப் பொருட்கள், முடி மற்றும் தோல் பராமரிப்பு சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த 4 மசாலா பொருட்களை இன்றே பயன்படுத்த துவங்குங்கள்... மழைக்கால நோய்களுக்கு குட்பை சொல்லுங்க..
விளக்கெண்ணெய்யின் முக்கிய பயன்பாடுகள்:
- விளக்கெண்ணெய் சரியான அளவிலான லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்ய உதவுகிறது, இது பாக்டீரியா, நோய்கள் மற்றும் நச்சுகளுக்கு எதிரான நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயற்கையான நோய் போராளியாக விளங்குகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் வேகமாக பாய உதவுகிறது.
- விளக்கெண்ணெய் முற்றிலும் இயற்கையானது மற்றும் இதில் பிற எண்ணெய்களைப் போல் செயற்கை பொருட்களை கலப்பது என்பது மிகக்குறைவு. எனவே தான் இது தோல் பிரச்சனைகள், சருமத்தில் ஏற்படும் வீக்கம், நிற மாற்றம், கட்டிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
- பிரசவத்தின் போது குழந்தையை வெளியேக்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆமணக்கு எண்ணெய்யை வாய்வழியாகக் கொடுப்பது பழங்கால பாரம்பரியம். இதன் பக்கவிளைவாக சிலருக்கு குமட்டல் ஏற்படலாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதியா..? இயற்கையாகவே கல்லை கரைக்கும் வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்
- விளக்கெண்ணெய் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வயதான பல்வேறு அறிகுறிகளில் இருந்து விடுபட சிறந்த மாய்ஸ்சரைசர் மற்றும் ஆன்டி-ஏஜிங் தீர்வாக அமைகிறது.
- இது ஒரு சிறந்த மலமிளக்கி ஆகும். விளக்கெண்ணெய்யை நேரடியாக வாய்வழியாக உட்கொள்வது மலச்சிக்கலில் இருந்து விடுபடவும், செரிமான செயல்முறையை முறைப்படுத்தவும் உதவுகிறது.
- விளக்கெண்ணெய் முடி வளர்ச்சிக்கு தேவையான ஒமேகா 6 கொழுப்பு அமிலத்தைக் கொண்டுள்ளது மற்றும் அடர்த்தியை அதிகரிக்க முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதோடு, பளபளப்பையும் கொடுக்கிறது. இதில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை அகற்ற உதவுகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.