ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஏலக்காய் , புதினா இலை... ஆவி பிடித்தால் சளி வேகமாக குறைந்துவிடும்..!

ஏலக்காய் , புதினா இலை... ஆவி பிடித்தால் சளி வேகமாக குறைந்துவிடும்..!

ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தல்

பலரும் சளி, இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்போது அவர்கள் அனைவருக்கும் தேவைப்படுவது நல்ல வீட்டு வைத்தியம்தான். உங்களுக்கும் அதுதான் தேவை எனில் இந்த டிப்ஸை கவனியுங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பருவநிலை மாறி மாறி வரும் சூழலை பலருக்கும் ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது. இதை உடல் இருமல், சளி, காய்ச்சல் என வெளிப்படுத்துகிறது. அப்படி பலரும் சளி, இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்போது அவர்கள் அனைவருக்கும் தேவைப்படுவது நல்ல வீட்டு வைத்தியம்தான். உங்களுக்கும் அதுதான் தேவை எனில் இந்த டிப்ஸை கவனியுங்கள்.

  தேவையான பொருட்கள் :

  ஏலக்காய் - 1 tsp

  துளசி இலை - 10 - 15

  மஞ்சள் - 1/2 tsp

  புதினா இலை - 4-5

  எப்படி செய்ய வேண்டும்..?

  மேலே குறிப்பிட்ட அனைத்தையும் தண்ணீரில் தட்டு போட்டு மூடி கொதிக்க வையுங்கள். 5 நிமிடங்களுக்கு கொதித்தால் போதுமானது.

  Also Read : டைபாய்டு காய்ச்சல் அறிகுறி எப்படி இருக்கும்..? எப்படி பரவுகிறது..? முழுமையான தகவல்..!

  பின் அடுப்பை அணைத்துவிட்டு ஆவி பிடியுங்கள். 45- 60 நொடிகள் நன்கு மூச்சை இழுத்து விட்டு பிடியுங்கள். ஒவ்வொரு முறைக்கும் 1 நிமிடம் இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.

  நன்கு மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும். அப்போதுதான் அந்த புகை உங்கள் நுரையீரலை அடையும். வாய் வழியாகவும் உள்ளே இழுக்கலாம். இந்த ஆவி பிடிக்கும் முறையால் சைனஸ் பிரச்சனை கூட சரியாகலாம்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Cardamom, Cold, Mint, Steam Inhalation