இந்தியாவில் விளையும் ஏலக்காயானது மார்பகங்களில் ஏற்படும் டிரிபிள் நெகடிவ் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக் கூடியவை என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா அக்ரிகல்சுரல் மற்றும் மெக்கானிக்கல் பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஏலக்காயில் உள்ள கார்டோமொனின் என்ற பொருளானது, மார்பகத்தில் ஏற்படும் டிரிபிள் நெகடிவ் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் அளவுக்கு இருக்கிறது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மார்பக புற்றுநோயின் ஒரு பகுதியாக டிரிபிள் நெகடிவ் புற்றுநோய் செல்கள் என்பது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பது கடினமானதாகவும் இருந்து வந்தது. புற்றுநோய் செல்களின் மீது எந்தவித தடயங்களும் இன்றி இது வளரக் கூடியது என்றும், தற்போதைய தெரஃபி அதை எதிர்த்துப் போராடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு இனங்களின் பெண்களிடம் ஆய்வு
மார்பக புற்றுநோயை எதிர்த்து ஏலக்காய் எந்த அளவுக்கு போராடுகிறது என்பதை கண்டறிய இரண்டு பெண்களிடம் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். முதலாவதாக, ஆப்ரிக்க - அமெரிக்க பெண்ணின் புற்றுநோயில் இருந்தும், இரண்டாவதாக காகசியன் நாட்டு பெண்ணின் புற்றுநோயில் இருந்தும் செல்களை எடுத்து ஆய்வு செய்தனர்.
இதில், இந்த பெண்களிடமும் புற்றுநோய்க்கான பாதிப்புகளை குறைப்பதாக ஏலக்காய் இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஆப்ரிக்க இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஆப்ரிக்காவைச் சேராத பெண்ணுக்கும் இடையேயான சிகிச்சையில் இது எந்த அளவுக்கு வேறுபாடுகளை காண்பிக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
Menstrual Cup : மாதவிடாய் கப் என்றால் என்ன..? பயன்படுத்தும் முறைகளும்.. பாதுகாப்பு அமசங்களும்..!
மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்
* மார்பகத்தின் அளவு அல்லது தோற்றம் என்பது இயல்புக்கு மாறானதாக இருப்பது.
* மார்பகத்தின் மீதான சருமத்தில் மாற்றங்கள் தென்படுவது.
* மார்பில் உள்ள நிப்பிள் உள்புறமாக அமுங்குவது.
* மார்பகத்தின் சருமப் பகுதி, ஒரு ஆரஞ்சு தோலைப் போல சிவந்து போகுதல்
காரணங்கள் :
மார்பகத்தில் உள்ள செல்கள் இயல்புக்கு மீறி வளரத் தொடங்கும்போது மார்பக புற்றுநோய் உருவாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செல்கள், ஆரோக்கியமான செல்களைக் காட்டிலும் மிக வேகமாக வளருவதுடன், மார்பகத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கும். ஹார்மோன் ரீதியான மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் சுற்றுப்புற காரணங்கள் போன்றவற்றால் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சருமத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கு அடுத்த படியாக பெண்களை அதிகம் பாதிக்கக் கூடியதாக மார்பக புற்றுநோய் இருக்கிறது. இந்நிலையில், அதற்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.