வாகனப் புகையின் நச்சுத்தன்மையால் இந்தியாவில் 3.5 லட்சம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தி லேன்செட் பிளானடரி ஹெல்த் (The Lancet Planetary Health) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், உலக அளவில் வாகனப் புகை காரணமாக ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் வாகனங்கள் வெளியிடும் நச்சுப்புகையால் 7.6 லட்சம் குழந்தைகள் சீனாவில் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக, 2015-ம் ஆண்டு 194 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டதாக லேன்செட் கூறியுள்ளது.
சீனாவில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், வாகனப் புகையில் இருக்கும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு (NO2) என்ற நச்சு வாயுவாலும் சீனாவில் 7.6 லட்சம் குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் 3.5 லட்சம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா 2.4 லட்சம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் மூன்றாவது இடத்திலும், 1.6 லட்சம் பாதிக்கபட்ட குழந்தைகளுடன் இந்தோனேஷியா நான்காம் இடத்திலும், 1.4 லட்சம் ஆஸ்துமா பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிரேசில் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.
உலக அளவில் ஒரு லட்சம் பேரில் 170 பேர் ஆஸ்துமா நோயால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 13 சதவிகித குழந்தைகள் வாகனப் புகை காரணமாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லேன்செட் ஆய்வு முடிவு நம்மை அதிரச் செய்கிறது.
194 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மற்ற நாடுகளுடன் ஓப்பிட்டுப் பார்க்கும்போது, நைட்ரஜன் டை ஆக்ஸைடு நச்சு வாயு அதிகமாக வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கீழே தான் இருக்கிறது என்பது மட்டுமே நமக்கு ஆறுதல்.
குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்க, பொது போக்குவரத்து முழுவதையும் மின் ஆற்றல் மூலம் இயக்கலாம். பைக்குகளை கைவிட்டு சைக்கிள் மற்றும் நடந்து பயணம் செய்யலாம். குழந்தைகளின் எதிர்காலத்தைப் காப்பது நமது கடமையல்லவா?
Also see...
Published by:Ilavarasan M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.