உடலின் பல முக்கிய பாகங்கள் மற்றும் உள்ளுறுப்புகளை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அபாயகரமான நோய் கேன்சர். உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும் போது இந்த ஆபத்தான நோய் ஏற்படுகிறது.
முதுமை, கேன்சரின் தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாறு, புகை மற்றும் மதுபழக்கம், ரேடியேஷன் வெளிப்பாடு உள்ளிட்ட பல காரணங்கள் ஒரு நபருக்கு கேன்சர் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம். இவற்றை போலவே கட்டுப்படுத்த முடியாத காரணியான ஒருவரின் உயரமும் கேன்சரால் அவர் எவ்வளவு பாதிக்கப்பட கூடும் என்பதை தீர்மானிக்க முடியும் என சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆய்வு கண்டறிந்தது என்ன?
World Cancer Research Fund International கூற்றுப்படி ஒருவரின் உயரம் அவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தீர்மானிக்கும். உணவு, எடை, உடல் செயல்பாடு மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்த உலகளாவிய ஆதாரங்களை சமீபத்தில் ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்தனர். உயரமானவர்களுக்கு 6 வகையான கொடிய புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயரமாக இருக்கும் நபர்களுக்கு ஓவரியன், ப்ரோஸ்டேட், கணையம், பெருங்குடல், மார்பகம் மற்றும் சிறுநீரக கேன்சர்கள் ஏற்படும் அபாயம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளின் விவரம்..
ஒவ்வொரு கூடுதல் 5 சென்டிமீட்டர் உயரமும் சில குறிப்பிட்ட புற்று நோய்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சிறுநீரக புற்றுநோய் ஏற்பட 10% அதிகரித்த ஆபத்து இருப்பதாக கூறி இருக்கும் இந்த ஆய்வு ப்ரீ மற்றும் போஸ்ட் மெனோபாஸ் மார்பக புற்றுநோய் ஏற்பட முறையே 9% மற்றும் 11%, ஓவரியன் புற்றுநோய் ஏற்பட 8%, கணைய புற்றுநோய் ஏற்பட 7%, பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட 5%, ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட 4% வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஒருவரின் உயரம் புற்றுநோயின் அபாயத்திற்கு ஏன் காரணமாகிறது.?
World Cancer Research Fund International அமைப்பில் அறிவியல் திட்ட மேலாளராக இருக்கும் சூசன்னா கூறுகையில், நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம் என்னவென்றால் ஒரு நபரின் உயரம் அல்ல, மாறாக தலையில் இருந்து உங்கள் பாதங்களுக்கு வரை உள்ள தூரம் (Distance From head to feet) தான் கேன்சர் பாதிப்புற்கு காரணமாகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
Also Read : அதிகமாக மது குடிக்கும் பழக்கம் டிஎன்ஏ- வையே சேதப்படுத்தும்.! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஒருவரின் உயரம் தாயின் வயிற்றிலிருந்தே அதிகரிக்கத் தொடங்குகிறது. மரபணுக்கள், ஹார்மோன்கள், ஊட்டச்சத்துக்கள், சுற்றுச்சூழல் ஆகியவை இந்த முழு செயல்முறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நபரின் உடல் தோற்றம் மற்றும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றில் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அதாவது இந்த செயல்முறை அவர்களின் மரபணுக்களால் மட்டுமல்ல மாற்றக்கூடிய வளர்ச்சி காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது. இவ்வளவு நீண்ட செயல்பாடு புற்றுநோயை தூண்டலாம். எளிமையாக சொல்வதென்றால் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பது ஒரு நபரின் உயரம் அல்ல. மாறாக ஒருவரை உயரமாக்க அவர் உடல் மேற்கொண்டுள்ள செயல்முறையே புற்றுநோயுடன் தொடர்புடையது.இந்த செயல்முறையின் எந்த அம்சங்கள் புற்றுநோய் அபாயத்தை தூண்டுகின்றன என்பதை அடையாளம் காண்பது முக்கியம் என்கிறார் சூசன்னா.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வு:
உயரத்தை மாற்ற முடியாது என்றாலும் புற்றுநோய் அபாயத்தை குறைக்க விரும்பினால் ஆரோக்கியடயட் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உள்ளிட்ட பல வழிகள் இருக்கின்றன. டயட்டில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சேர்ப்பது, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, புகை அல்லது மது பழக்கத்தை தவிர்ப்பது, வழக்கமான மருத்துவ சிகிச்சையை பெறுவது கேன்சர் அபாயத்தை குறைக்கும்.
பொதுவான கேன்சர் அறிகுறிகள்:
அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி கூறும் கேன்சரின் சில பொதுவான அறிகுறிகள் கீழே:
ஓய்வெடுத்தாலும் சரியாகாத அதீத களைப்பு, திடீர் எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு, உடலில் தோன்றும் திடீர் கட்டிகள், காரணமே இல்லாமல் ஏற்படும் வலிகள், சரும மாற்றங்கள், தொடர்ச்சியான இருமல், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் ரத்தம் வருவது உள்ளிட்ட சிறுநீரகம் சார்ந்த தீவிர உபாதைகள், காய்ச்சல் அல்லது இரவில் வியர்த்தல், அதிக தலைவலி, வாயில் புண்கள் அல்லது ரத்தப்போக்கு அல்லது உணர்வின்மை உள்ளிட்டவை கவனிக்க வேண்டிய முக்கிய கேன்சர் அறிகுறிகள் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.