ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் இந்த நான்கு எண்ணெய் வகைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் இந்த நான்கு எண்ணெய் வகைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

புற்றுநோய்

புற்றுநோய்

எண்ணெய்கள் அன்றாட சமையலில் தேவையான பொருளாக இருந்தாலும், ஒரு சில எண்ணெய்களை சூடாக்கும் போது, அவை ஒரு விதமான நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

‘உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோர்’ என்ற கூற்று உள்ளது. உடல் வளர்ப்பது என்பது ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. உடலில் எந்த நோய் அல்லது குறைபாடாக இருந்தாலுமே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை சமீபத்தில் அதிகமாக கேட்கிறோம். அந்த அளவுக்கு உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறது. குறிப்பாக ஒரு சில உணவுகள் உடலுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் என்பது வரும்முன் தடுக்கும் தீவிர நோய்களில் ஒன்று. அதற்கு, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் வாழ்க்கை முறையும் அவசியம். என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் என்ன உணவுகளை தவிர்க்கிறீர்கள் என்பதில் அதிக முக்கியத்துவம் தேவை. இயற்கையான, ஃபிரெஷ்ஷான, ஹெல்தியாக சமைத்து சாப்பிடுவதும், அதிக ஆன்டிஆக்சிடன்ட் கொண்ட உணவுகளை சாப்பிடுவதும், உடலுக்கு ஆற்றலும் மன அழுத்தத்தை குறைக்கவும் உடற் பயிற்சியில் ஈடுபடுவதும் ஒரு பக்கம் அவசியம். மற்றொரு பக்கம், சில உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

கேன்சர் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் :

அதில் முக்கியமாக கேன்சர் ஏற்படுத்தக்கூடிய தன்மை சில உணவுகளில் இருக்கின்றன. ஜெனிட்டிகலி மாடிஃபைட் ஃபூட்ஸ் அதாவது ஒரு உணவின் மரபுத்தன்மையை மாற்றி அமைக்கக்கூடிய உணவுகளால் கேன்சர் உண்டாகும் ஆபத்து இருக்கின்றது என்று அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சமையல் எண்ணெயிலுமே, சில எண்ணெய்களில் கேன்சர் உண்டாகும் நச்சு இருக்கின்றன.

வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

சமையில் எண்ணைய்யில் வெளியாகும் நச்சு :

எண்ணெய்கள் அன்றாட சமையலில் தேவையான பொருளாக இருந்தாலும், ஒரு சில எண்ணெய்களை சூடாக்கும் போது, அவை ஒரு விதமான நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இந்தியர்களின் சமையலில் பொறித்த உணவுகளுக்கு அதிக எண்ணெய் பயன்படுத்தப்படும். அது மட்டுமின்றி, எண்ணெய்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும். இந்த சூழலில், சில எண்ணைகளில் சமைக்கும் போது, கேன்சர் உண்டாக்கும் ஒரு முக்கியமான aldehydes எனப்படும் நச்சு வெளியேறுகிறது. இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது.

இந்த எண்ணெய்களை சமையலில் பயன்படுத்த கூடாது.

* கார்ன் அதாவது சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் மற்றும் சோயா பீன் எண்ணெய் ஆகிய நான்கு வகையான எண்ணெய்களிலும் மேற்கூறிய ஆபத்து உள்ளது.

* இதைப் பற்றிய சில ஆய்வுகள், இந்த எண்ணெய்களில் இருந்து வெளியாகும் நச்சுத்தன்மை கொண்ட கூறுகள், ஆக்ஸிடைஸ் ஆகி, ரெடினாயிக் ஆசிட் ஆக உருமாற்றும் என்று கூறுகின்றன. ரெடினாயிக் ஆசிட் உடலில் கேன்சர் செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மார்பக புற்றுநோயை எதிர்கொள்ள மருந்து போல் உதவும் ஏலக்காய் - ஆய்வில் தகவல்!

* உடலில் இருக்கும் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி காண்பது புற்று நோயை குறிக்கும். எனவே, ஆரோக்கியமான செல்கள் புற்று செல்களாக மாறும் சூழலை தவிர்க்க, மேற்கூறிய எண்ணெய்களைத் தவிர்க்க வேண்டும்.

* சூரியகாந்தி எண்ணெய் தவிர்த்து, மற்ற எண்ணெய்கலை அதிகமாக ஹீட் செய்யக்கூடாது. இந்த எண்ணெய்களுக்கு மாற்றாக, நம்முடைய ஊரில் கிடைக்கும் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer, Cooking Oil