Home /News /lifestyle /

உஷார்... இந்த அறிகுறி உங்கள் கால்களில் இருந்தால் கேன்சராக இருக்கலாம்..!

உஷார்... இந்த அறிகுறி உங்கள் கால்களில் இருந்தால் கேன்சராக இருக்கலாம்..!

புற்றுநோய்

புற்றுநோய்

கால்களில் ரத்தம் கட்டி இருப்பதை ஒரு சில நேரங்களில் நீங்கள் எங்காவது கண்டிருக்கக்கூடும். அதாவது கால்களில் ஓடும் நரம்புகள் சில நேரம் தோலின் மேற்புறம் தெரியும். நரம்புகள் பச்சை நிறத்தில் இல்லாமல், கரும் பச்சை, கருநீல நிறம் அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் அது டீப் வெயின் த்ராம்போசிஸ் என்ற நிலையாகும்.

மேலும் படிக்கவும் ...
உலகின் மிக கொடிய உயிர்க்கொல்லி நோயாக கேன்சர் முதல் இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் கேன்சர் பாதிப்பால் இறந்து போகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. உடலில் இருக்கும் ஆரோக்கியமான செல்கள் மற்றும் செல்களின் இயல்பான வளர்ச்சி அபரிமிதமாக மாறி அதி வேகமாக வளர்வது கேன்சர் என்று கூறப்படுகிறது. புற்றுநோய்க்கு பெரும்பாலும் அறிகுறிகள் காணப்படுவதில்லை.

ஏனென்றால் கேன்சர் தான் என்று கண்டறிய உதவும் சில அறிகுறிகள் பலவிதமான நோய்களுடனுடன் குறைபாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் கேன்சர் தான் என்பது திட்டமிட்டு கூற முடியாத அளவுக்கு உள்ளது. ஆனால் கேன்சர் மார்பக புற்றுநோய் போன்ற ஒரு சில வகையான புற்று நோய்க்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியமுடியும். சமீபத்தில், கால்களில் ஏற்படும் மாற்றம் அல்லது ஒரு அறிகுறியால் உங்களுக்கு கேன்சர் ஆபத்து இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அதை பற்றிய விவரங்கள் இங்கே.

ஏற்கனவே கூறியுள்ளது போல உடலின் பல்வேறு உறுப்புகள் உறுப்புகள் மற்றும் பாதங்களில் புற்றுநோய் செல்கள் வளரும்.

பான்கிரியாஸ், அதாவது கணையம் உணவு செரிமானம் ஆவதற்கும், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும், இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி கூறியுள்ளது படி ஒரு சில வகையான புற்றுநோய்களுக்கு ரத்தம் கட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது. வயிற்றின் அடிப்பகுதியில் கணையம் இருப்பதாலும், அதிலிருந்து வெளியாகும் இன்சுலின் ரத்தத்தில் இன்சுலின் கலப்பாதாலும். ஜெல்லி போல, ஹைப்பர் கோயலேட்டிவ் நிலை என்று கூறப்படும் அளவுக்கு கெட்டியான திரவமாக மாறும். கணையம் அடிவயிற்றில் இருப்பதால் உடலின் கீழ் பாகத்தில் ரத்தம் கட்டிக் கொள்ளும். மருத்துவத்தில் இந்த நிலையை டீப் வெயின் த்ராம்போசிஸ் என்று கூறப்படுகிறது.



 

டீப் வெயின் த்ராம்போசிஸ் என்றால் என்ன..?  மற்றும் அதன் அறிகுறிகள் என்ன..? 

கால்களில் ரத்தம் கட்டி இருப்பதை ஒரு சில நேரங்களில் நீங்கள் எங்காவது கண்டிருக்கக்கூடும். அதாவது கால்களில் ஓடும் நரம்புகள் சில நேரம் தோலின் மேற்புறம் தெரியும். நரம்புகள் பச்சை நிறத்தில் இல்லாமல், கரும் பச்சை, கருநீல நிறம் அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் அது டீப் வெயின் த்ராம்போசிஸ் என்ற நிலையாகும்.

உங்கள் மெட்டாபாலிசத்தை தெரிந்துகொண்டால் உடல் எடையை சீக்கிரமே குறைத்துவிடலாம் : எப்படி தெரியுமா..?

* பெரும்பாலும் ஒரு காலில் தான் வீக்கம் காணப்படும். நிலைமை தீவிரமாக இருந்தால் இரண்டு கால்களும் வீங்கத் துவங்கும்.

* பாதிக்கப்பட்ட, வீங்கிய இடங்களில் வெதுவெதுப்பாக இருக்கும்.

* மேலே கூறியது போல நரம்புகளின் நிறம் மாறியிருக்கும் மற்றும் வீங்கியிருக்கும். தொட்டாலே வலி எடுக்கும்.

சில நேரங்களில் கால்களில் இருந்து நரம்புகள் உடலின் மேற்பகுதியுடன் இணைவதால் கால்களில் உண்டாகும் ரத்தக்கட்டு இதயம் மற்றும் நுரையீரல் வரை பரவலாம். இதனால் நெஞ்சுவலி மற்றும் மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்படக்கூடும். இதனால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு பல்மனரி எம்பலிசம் என்று கூறப்படுகிறது. இது, நுரையீரல் வீக்கத்தை குறிக்கும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு நிலை.



 

 

நரம்புகளில் ரத்த கட்டு ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், புற்றுநோய் என்பதற்கு வேறு சில அறிகுறிகளும் இருக்கின்றன.

மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டாலும் அதுவும் கணைய புற்றுநோய்க்கு ஒரு அறிகுறியாகும் என்று கேன்சர் சொசைட்டி தெரிவித்துள்ளது.

கோடைகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்..!

அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிப்பது, தோல் மற்றும் கண்களில் நிறம் மாறுதல் என்று மஞ்சள் காமாலை நோயின் அனைத்து அறிகுறிகளும் கணைய புற்று நோயின் அறிகுறிகளாகும். அது மட்டுமின்றி காரணமில்லாத எடை இழப்பு, பசி எடுக்காத நிலை வாந்தி மயக்கம் ஆகியவையும் கணைய புற்றுநோயின் அறிகுறிகள் என்று கேன்சர் சொசைட்டி கூறுகின்றது.

புற்றுநோய் எந்த நிலையில் இருக்கிறது மற்றும் உடலில் எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதன் அடிப்படையில்தான் சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்து கணையத்தை நீக்குவது முதல் ரேடியேஷன் தெரப்பி, கீமோதெரப்பி என்று நோயாளி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதன் அடிப்படையில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer symptoms

அடுத்த செய்தி