முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்.!

பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்.!

புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் பாதிப்பு

Cancer Risk | தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் புற்றுநோய் பற்றிய ஆய்வில், பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் காரணங்கள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபகாலமாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், இது வரை அறிந்திராத புற்றுநோய் வகைகள் கூட பலரையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுவதுமாக வெளியேறுவது என்பது பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை, புற்றுநோய் செல்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தான் நிர்ணயிக்க முடியும். உடலில் உள்ள செல்களில், ஒரு குறிப்பிட்ட பாகங்களில் அல்லது உறுப்புகளில் அபரிமிதமான வேகத்தில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடையும்.

அவ்வாறு வேகமாக வளரும் போது, அதை சுற்றியிருக்கும் ஆரோக்கியமான செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, புற்று செல்கள் பரவத் தொடங்கும். புற்று நோய் செல்கள் எங்கு வளரத் தொடங்கியது, எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறிந்தால், சிகிச்சை அளித்து முழுவதுமாக நிவாரணம் பெற முடியும்.

உடலின் எந்த உறுப்பில் அல்லது இடத்தில், என்ன காரணத்தால் புற்று செல்கள் வளரத் துவங்கும் என்பதும் தெரியவில்லை. குறிப்பாக ஒரு காரணம் என்று இல்லாமல் புற்று நோய் செல்கள் பல காரணங்களால் வளரலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண் பெண் இருபாலருமே புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் புற்றுநோய் பற்றிய ஆய்வில், பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் காரணங்கள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

புற்றுநோய் பற்றிய சமீபத்திய ஆய்வு

சமீபத்தில் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி நடத்திய புதிய ஆய்வின்படி, பெண்களை விட ஆண்கள் புற்றுநோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. புகை பழக்கம், மது அருந்தும் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களை தவிர்த்து வேறு சில காரணங்களால் ஆண்கள் புற்றுநோய் பாதிப்புக்கு அதிகமாக உள்ளாகிறார்கள் என்பதே இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.

Also Read : H1N1 வைரஸால் உருவாகும் பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..? எப்படி பரவுகிறது..?

பாலின வேறுபாட்டின் அடிப்படையில் 1995 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 2.94 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு, கேன்சர் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பற்றிய ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆண்களுக்கு புற்றுநோய் பாதிக்கப்படும் ஆபத்து ஏன் அதிகமாக இருக்கிறது என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியவில்லை. ஆனால், இதை புரிந்து கொள்வதன் மூலமும், காரணங்களை அறிந்து கொள்வதன் மூலமும், கேன்சர் ஏற்படாமல் தடுக்கவும், அதற்கான சிகிச்சை வழிமுறைகளை உருவாக்கவும் உதவும் என்று கருதுகிறார்கள்.

குறிப்பிட்ட கேன்சர் பாதிப்புகள் அதிகம்

இந்த ஆய்வின் படி, பெண்களை விட ஆண்களுக்கு 1.3 சதவிகிதம் முதல் 10.8 வரை கேர்ந்சர் ஏற்படும் ரிஸ்க் அதிகம் இருக்கிறது. பின்வரும் கேன்சர் பாதிப்புகள் அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈசோஃபீகல் கேன்சர் - 10.8 மடங்கு அதிக ஆபத்து

லாரின்க்ஸ் கேன்சர் - 3.5 மடங்கு அதிக ஆபத்து

காஸ்ட்ரிக் மற்றும் கார்டியா கேன்சர் - 3.5 மடங்கு அதிக ஆபத்து

ப்ளாடர் கேன்சர் - 3.3 மடங்கு அதிக ஆபத்து

அதே நேரத்தில், தைராய்டு மற்றும் பித்தப்பை கேன்சர் பெண்களை அதிகம் பாதிக்கின்றன.

Also Read : சமையலில் பெருங்காயம் அதிகமாக சேர்த்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

ஆய்வின் கண்டுபிடிப்புகள்

இந்த 16 ஆண்டுகால தரவின் அடிப்படையில், 17,951 ஆண்களுடன் கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன மற்றும் 8742 பெண்களிடம் கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. பெண்களைவிட பெரும்பாலான புற்றுநோய் வகைகள் ஆண்களை பாதிக்கும் ஆபத்து அதிகம் என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கேன்சர் காரணியாக கூறப்படும் கார்சினோஜென் என்ற ஒரு ஏஜென்ட்டுக்கும் ஆண்கள் அதிகம் வெளிப்படுகிறார்கள் என்ற காரணமும் கேன்சர் ஆபத்தை அதிகரிக்கிறது.

தேசிய புற்றுநோய் மையத்தின் பணியாற்றும் மருத்துவர் சாரா ஜாக்சன் இதைப் பற்றி கூறுகையில் “இந்த ஆய்வின் முடிவுகள் கேன்சர் பாதிக்கும் ஆபத்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை பற்றியும், சுற்றுசூழல் பாதிப்பால் மட்டுமே கேன்சர் உண்டாகிறது என்பதை சார்ந்த இதுவரை கூறப்படாத விளக்கத்தையும் காண்பிக்கிறது. மிக மிக அடிப்படையாக, ஆண் பெண் இருவருக்கும் பயாலஜிக்கல் ரீதியாக காணப்படும் வித்தியாசங்கள், கேன்சர் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார். அது மட்டுமல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் கேன்சர் பாதிப்பு எதனால் வேறுபடுகிறது என்பதை பற்றி உறுதி செய்வதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

Also Read : குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்..?

top videos

    வாழ்க்கை முறை, புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துவது, உணவுப் பழக்கம் ஆகியவை புற்று நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

    First published:

    Tags: Cancer, Health, Lifestyle