ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு... இது எந்த அளவுக்கு பலன் அளிக்கும்..? மருத்துவர்கள் விளக்கம்

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு... இது எந்த அளவுக்கு பலன் அளிக்கும்..? மருத்துவர்கள் விளக்கம்

புற்றுநோய்க்கு மருந்து

புற்றுநோய்க்கு மருந்து

இந்த அறிக்கையின் முடிவு மிகவும் ஊக்கமளிக்கிறது, இருப்பினும் ஒரு பெரிய சோதனை முடியும் வரை எங்களால் இதைப் பற்றி அதிகம் படிக்க முடியாது என்று குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் புற்றுநோய் நிறுவனத்தின் மெடிக்கல் மற்றும் ஹீமாடோ ஆன்காலஜியின் தலைவர், டாக்டர் அசோக் குமார் வைட் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆறு மாதங்களுக்கு ஒரே மருந்தை உட்கொண்ட 12 மலக்குடல் புற்றுநோயாளிகளை கொண்டு நடத்திய சோதனையில், அவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் 'மறைந்துள்ளது' கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக நோயாளிகள் அனைவரும் உடல் பரிசோதனை, எண்டோஸ்கோபி, பயாஸ்கோபி, பிஇடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் என தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

ஒரு வருட மீடியன் ஃபாலோ-அப்பிற்கு பின்னர் எந்தவொரு அறிக்கையும் அவர்களுக்கு கேன்சர் கட்டியின் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. பொதுவாக பெங்குடலின் கீழ் பகுதியை பாதிக்கும் மலக்குடல் புற்றுநோய் ஆனது கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை மூலமே சிகிச்சையளிக்கப்படும்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட, அனைத்து 12 நோயாளிகளும் மேக்னட்டிக் ரிசோனன்ஸ் இமேஜிங், எஃப்-ஃப்ளூரோடாக்சிகுளுக்கோஸ்-பாசிட்ரான்-எமிஷன் டோமோகிராபி மற்றும் எண்டோஸ்கோபி மூலம் க்ளினிக்கல் ரெஸ்பான்ஸ்-ஐ கவனமாக கண்காணித்து ஆறு மாதங்களுக்கு டோஸ்டார்லிமாப் (dostarlimab) பெற்றனர். இந்த பரிசோதனை மருந்து குறித்து அல்ல, இது நோயெதிர்ப்பு சிகிச்சையின் முன்னுதாரணத்தின் கீழ் வருகிறது என்று டெல்லி சிகே பிர்லா மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை டாக்டர் ஆன மந்தீப் சிங் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கு இந்த சோதனை ஏன் முக்கியமானது?

இந்த அறிக்கையின் முடிவு மிகவும் ஊக்கமளிக்கிறது, இருப்பினும் ஒரு பெரிய சோதனை முடியும் வரை எங்களால் இதைப் பற்றி அதிகம் படிக்க முடியாது என்று குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் புற்றுநோய் நிறுவனத்தின் மெடிக்கல் மற்றும் ஹீமாடோ ஆன்காலஜியின் தலைவர், டாக்டர் அசோக் குமார் வைட் தெரிவித்து உள்ளார். "ஒரு முறை ஒரு பெரிய சோதனை செய்யப்பட்டால், கண்டுபிடிப்புகள் சரிபார்க்கப்படும். இருப்பினும், இப்போதைக்கு, இந்த முடிவுகள் மிகவும் நல்லவை மற்றும் நம்பிக்கைக்குரியவை. இந்த மருந்து ஒரு வகை நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகும் - மேலும் இது (immune checkpoint inhibitor) இம்மூய்ன் செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர் என்றும் அழைக்கப்படுகிறது.

PCOD கோளாறை எளிதாக நிர்வகிக்க உதவும் உணவு பழக்கங்கள் என்ன..? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

இது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூலம் செயல்படுகிறது. மலக்குடல் புற்றுநோயைத் தவிர, மற்ற புற்றுநோய்களுக்கு இது வேலை செய்யுமா என்பது எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அதுகுறித்த சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆய்வு உறுதியளிக்கிறது என்பதை வலியுறுத்தும் டாக்டர் மல்ஹோத்ரா, பெருங்குடல் புற்றுநோயால் ஹை ட்யூமர் மயூட்டேஷன் உள்ள நோயாளிகளுக்கு இது பயன்படுத்தப்பட்டது என்பதை புரிந்துகொள்வது முக்கியம் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் ஒரு புற்றுநோய் உயிர்வாழ்வதற்கும் வளருவதற்கும் பல வழிகள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது, எனவே ஒரு பெரிய சோதனையானது ஒரு பெரிய புரிதலுக்கு மிகவும் பொருத்தமான இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

க்ளினிக்ல கம்ப்ளீட் ரெஸ்பான்ஸ்-ஐ பெற்ற இந்த நோயாளிகளுக்கு பத்தாலாஜிக்கல் கம்ப்ளீட் ரிமிஷன் (pathological complete remission) உள்ளதா? அதாவது நோயில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைத்ததா என்பது தெரியவில்லை என்று ஆசிய புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஹீமாடோ-புற்றுநோய் நிபுணரான டாக்டர் சுஹாஸ் ஆக்ரே குறிப்பிட்டுள்ளார்.

ஃபோர்டிஸ் நொய்டா வெஜோவிஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கின் மூத்த ஆலோசகர், புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அனில் தக்வானி கருத்துப்படி, அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் இந்த சோதனை வேலை செய்யாது. மலக்குடல் புற்றுநோய்களில், குறைபாடுள்ள மற்றும் பொருத்தமற்ற ரிப்பேர் ஜீன் (deficient mismatch repair gene) மற்றும் கீமோதெரபியை எதிர்க்கும் நபர்களுக்கு மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும்.

நாம் சிறிது நேரம் காத்திருந்து இந்த ஆய்வில் பங்குகொண்ட நோயாளிகளை ஃபாலோ செய்ய வேண்டும். இது குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது” என்று அவர் கூறி உள்ளார். அதே நேரத்தில், எதிர்காலத்தில் பல்வேறு வகையான மலக்குடல் புற்றுநோயாளிகளை கொண்டு ஒரு பெரிய சோதனையையம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer