பொதுவாகவே சிகரெட் பிடிக்கும்போது, சிகரெட் அட்டையிலேயே டொபாக்கோ அதாவது புகை பிடிப்பதால் புற்றுநோய் உண்டாகும் என்ற வாசகங்கள் எச்சரிக்கை அளிக்க அச்சிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பதற்கு எதிரான எல்லா விளம்பரங்களிலும் புகை பிடிப்பதால் புற்றுநோய் உண்டாகும் என்று மட்டுமே அதன் அபாயத்தைப் பற்றி விளம்பரப்படுத்தி உள்ளனர்.
எனவே புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது மற்றும் புகை பிடித்தால் கேன்சர் வரும் என்பது சிறு குழந்தைகள் கூட மனப்பாடமாகச் சொல்லும் வரிகள் போல மாறி உள்ளன. ஆனால் புகைப்பிடிப்பதால் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கும், பாகங்களுக்கும் பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என்பதை இந்த எச்சரிக்கைகளில் எங்கேயுமே கூறப்படவில்லை. கேன்சர் தவிர்த்து பல்வேறு பாதிப்புகளை புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும், அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்!
கேன்சர் பாதிப்பு மட்டும் தானே ஏற்படும், ஆனால் புகைபிடிக்கும் அனைவருமே புற்று நோயால் பாதிக்கப்படுவது இல்லையே என்ற எண்ணம் பலரிடம் மேலோங்கி இருப்பதால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது இல்லை. இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வும் எச்சரிக்கையும் மக்களுக்கு தேவை.
இதையும் படியுங்கள்: உடல் எடையை குறைக்க உதவும் புரோட்டீன் நிறைந்த 5 காலை உணவுகள்!
ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உலகம் முழுவதுமே 19 சதவிகித அடல்ட் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கைகளின் படி, புகைப்பிடிப்பது மற்றும் பின்வரும் காரணங்களுடன் இணைந்து அதிக எண்ணிக்கையிலான மரணங்களை ஏற்படுத்துகின்றது.
* எச்ஐவி நோய் தொற்று
* போதைப்பழக்கம்
* மது அருந்துதல்
* மோட்டார் வாகன விபத்து
* தீ விபத்து
ஜெர்மனியில் ஆய்வு நடத்திய நிறுவனத்தின் அறிக்கையின்படி சிகரெட் பிடிப்பதால் அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் நபர்கள் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது ஐந்தில் ஒரு நபர் இறப்புக்கான காரணம் சிகரெட் பிடிப்பதாக இருக்கிறது. அதே போல 2001ஆம் ஆண்டில் உலக சுகாதார மையத்தின் ஆய்வின்படி பொது மக்களிடையே மிகப்பெரிய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கம் தான் என்று கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ’செக்’ வைக்கும் 5 பழக்கங்கள்!
சிகரெட் பிடிப்பதால் என்ன வகையான புற்றுநோய் உண்டாகும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தாலும், புகை பிடிப்பது உடலின் எந்த உறுப்புகள் அல்லது எங்கு வேண்டுமானாலும் கேன்சரை உண்டாக்கும் என்பதைப் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை. புகைப்பிடிப்பதால், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கர்ப்ப வாய், மலக்குடல், உணவுக்குழாய், உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
ஆண்களுக்கு புற்று நோய் உண்டாகும் ஆபத்தை அதிகமாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம், பெண்களுக்கு வேறுவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பெண்கள், குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். கருத்தரிப்பதில் சிக்கல் என்பதில் தொடங்கி, குழந்தை கருவிலேயே இறப்பது, கருப்பைக்கு வெளியே கருவாகுதல், குழந்தைகள் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு முன்கூட்டியே டெலிவரி, குழந்தை பிறந்த பிறகு திடீரென்று இறப்பது, எடை குறைவான குழந்தை பிறப்பு மற்றும் முக அமைப்புகளில் பாதிப்புடன் குழந்தை பிறப்பது ஆகிய ஆபத்துகள் அதிகமாக காணப்படுகிறது.
இதையும் படியுங்கள்: எரிச்சலூட்டும் சூழ்ச்சிக்காரர்களை சிறப்பாக கையாளுவதற்கான சில வழிகள்!
சிகரெட் பிடிப்பதால் இதயநோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். இதயத்தை தவிர்த்து தீவிரமான சரும நோய்களையும் சிகரெட் பழக்கம் உண்டாக்கும். மேற்கூறியவை தவிர்த்து நாள்பட்ட நோய்களான, சிஓபிடி எனப்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயும் புகை பழக்கத்தால் உண்டாகும். அதுமட்டுமின்றி சிகரெட் பழக்கம் பற்கள் இழப்பு, கண்களில் புரை வளர்தல், நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் வாத நோய் ஆகியவற்றையும் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Cancer Facts, Smoking