திருமணமான அடுத்த சில மாதங்களிலேயே ஏதும் விசேசம் இருக்கா? என பலர் பெண்களிடம் கேட்பது வழக்கம். இவ்வாறு ஒவ்வொருவரும் மாறி மாறி இதே கேள்விகளைக் கேட்கும் போது ஒவ்வொரு பெண்களின் மனதில் எப்போது நாம் தாயாக போகிறோம் என்ற ஆசை நிச்சயம் ஏற்படும்.
சில பெண்களுக்கு இயற்கையிலேயே சீக்கிரம் தாய்மை ஆகும் பாக்கியம் ஏற்படும். ஆனால் சிலருக்கோ எத்தனை ஆண்டுகளானாலும் குழந்தைப் பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதற்கு ஒரு காரணமாக அமைகிறது கருப்பைக்குழாய் பிரச்சனை (Fallobian tube block). முதலில் ஃபலோபியன் குழாய் என்றால் என நாம் அறிந்துக்கொள்வோம்.
ஃபலோபியன்குழாய் என்றால் என்ன?
கருமுட்டைகளை கருப்பையுடன் .இணைக்கும் ஒரு பெண் இனப்பெருக்க உறுப்பு தான் ஃபலோபியன் குழாய். ஒவ்வொரு பெண்களுக்கும் 2 ஃபலோபியன் குழாய்கள் உள்ளன. பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் அண்டவிடுப்பின் போது, ஒரு கருமுட்டை ஃபலோபியன் குழாய் வழியாக கருப்பைக்குக் கொண்டு செல்லப்படும் போது, விந்துவும், முட்டையும் இணைகிறது.
அப்போது எவ்வித பிரச்சனையும் இன்றி விந்துவும், முட்டையும் இணையும் போது பெண்கள் கருத்தரிக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் குழந்தை பிறப்பிற்கு ஒரு தடையாக உள்ளது.
ஃபாலோபியன் அடைப்பு ஏற்படக்காரணங்கள்:
பாதுகாப்பற்ற உடல் உறவினால் ஏற்படும் கிளமிடியா போன்ற நோய்த்தொற்றுகள் பெண்களுக்கு வடுவை ஏற்படுத்தி இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்துகிறது. இதுவும் ஃபலோயின் குழாய்கள் அடைப்பிற்கு காரணமாக அமைகிறது. சில நேரங்களில் ஹார்மோன் பிரச்சனை, காசநோய் பிரச்சனை போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு கருப்பைக்குழாய் அடைப்பு உண்டாகிறது.
Also Read : உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்கலாமா.? இந்த பழக்கம் நல்லதா.?
ஒற்றை கருப்பை குழாய் மூலம் கர்ப்பம் தரிக்குமா?
பெண்களுக்கு ஒரே ஒரு ஃபாலோபியன் குழாய் மட்டும் இருந்தால், மாதவிடாய் சுழற்சி, வயது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற பிற காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்வது அவசியமான ஒன்று. பெண்ணின் கருப்பைகள் ஆயிரக்கணக்கான முதிர்ச்சியடையாத ஓசிஸ்ட்கள் அல்லது முட்டைகளைக் கொண்டிருக்கின்றன. மேலும், ஒரு பெண் தன் வாழ்நாளில் வளரும் முட்டைகளின் எண்ணிக்கை பிறக்கும் போது அல்லது தாயின் வயிற்றில் இருக்கும்போது மிகவும் துல்லியமாக தீர்மானிக்கப்படுகிறது.
பெண் முதிர்ச்சியடைந்து, அவளது அண்டவிடுப்பின் தொடங்கும் போது, முட்டைகள் ஒடுக்கற்பிரிவு எனப்படும் உயிரணுப் பிரிவின் ஒரு கட்டத்தில் செல்கின்றன. இந்த பிரிவு செயல்பாட்டின் போது, பழைய முட்டைகள் மரபணு ரீதியாக அசாதாரண முட்டைகளுக்கு வழிவகுக்கும் DNA பிழைகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. மோசமான முட்டை தரம் ஒரு ஃபலோபியன் குழாயுடன் இணைந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே ஒரு குழாய் கொண்ட இளம் பெண்கள் வயதான பெண்களை விட கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.
Also Read : வீட்டிலேயே ஈசியா ஹேர் கலரிங் செய்யலாம்… எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும் பெரும்பாலான பெண்களுக்கு சராசரி மாதவிடாய் சுழற்சி 21 -35 நாட்களுக்குள் இருக்கும். வழக்கமான மாதவிடாய் சுழற்சியானது அதிக ஒழுங்கற்ற சுழற்சிகளைக் கொண்ட பெண்களைக் காட்டிலும் அதிக துல்லியத்துடன் கருத்தரிக்க உதவுகிறது. மேலும் அவர்கள் இயற்கையாக கருத்தரிக்க விரும்பினால், ஒரு குழாய் மற்றும் ஒழுங்கற்ற சுழற்சி கொண்ட ஒரு பெண்ணின், கர்ப்பம் தாமதமாகலாம்.
மேலும், பெண்களின் நாளமில்லாச் சுரப்பிப் பிரச்சனைகளான நீரிழிவு நோய், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அண்டவிடுப்பையே பாதிக்கும். மேலும் ஆண்களின் விந்தும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
எனவே, ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு குழாய் மட்டுமே இருந்தாலும் குழந்தைப் பிறக்கும். ஒருவேளை உங்களுக்குக் குழந்தைப்பிறப்பில் பிரச்சனை ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy, Pregnancy Chances, Uterus Care