Home /News /lifestyle /

ஓமைக்ரான் தொற்று ஒருவரை இரண்டாவது முறையும் பாதிக்குமா.? WHO சொல்வது என்ன..

ஓமைக்ரான் தொற்று ஒருவரை இரண்டாவது முறையும் பாதிக்குமா.? WHO சொல்வது என்ன..

ஓமைக்ரான் தொற்று

ஓமைக்ரான் தொற்று

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டு உள்ள தகவல்களின் படி இரண்டாவது முறையாக Omicron தொற்றை பெறுவது சாத்தியமே. Omicron வேரியன்ட் குறித்த குறிப்பை வெளியிட்டுள்ள WHO, இரண்டாவது முறையாக இந்த தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்படலாம் என்று கூறியது.

மேலும் படிக்கவும் ...
புதிய வேரியன்ட்டான ஓமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் புதன்கிழமை (12.1.21) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,94,720 புதிய கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் 442 இறப்புகள் பதிவாகி இருக்கின்றன. ஆக்ட்டிவில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 9,55,319ஆக உயர்ந்துள்ளன. கடந்த 211 நாட்களை ஒப்பிடும் போது இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமானது. அதே போல தினசரி பாஸிட்டிவிட்டி ரேட் 11.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கிட்டத்தட்ட இந்தியாவில் கோவிட் மூன்றாம் அலை உருவாகி விட்டது என்பது சில நிபுணர்களின் கருத்து. தீவிரமாக உள்ள தொற்று பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகின்றன. விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாத ஒரு வேரியன்ட்டாக omicron இருந்து வரும் நிலையில், இந்த வேரியன்ட் ஒருவரை 2 முறை பாதிக்க முடியுமா என்பது பரவலாக எழும் ஒரு கேள்வியாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டு உள்ள தகவல்களின் படி இரண்டாவது முறையாக Omicron தொற்றை பெறுவது சாத்தியமே. Omicron வேரியன்ட் குறித்த குறிப்பை வெளியிட்டுள்ள WHO, இரண்டாவது முறையாக இந்த தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்படலாம் என்று கூறியது. இது மட்டுமின்றி ஏற்கனவே கோவிட் தோற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு உள்ளவர்களையும் Omicron தொற்று பாதிக்க கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.



இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் தனது வெப்சைட்டில் WHO ஒரு குறிப்பை வெளியிட்டது. டெல்டாவுடன் ஒப்பிடும் போது கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட நபர்கள் 3 முதல் 5 மடங்கு அதிகமாக omicron-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் எடுக்கும் இந்த ரிஸ்க்கான விஷயங்கள் உங்களுக்கு கொரோனா தொற்றை உண்டாக்கலாம்..! எச்சரிக்கும் மருத்துவர்கள்...
 இருப்பினும் இந்த வேரியன்ட்டின் தீவிரம் குறித்து அதிக தகவல்கள் இல்லை. இந்த வேரியன்ட் பெரும்பாலும் 20-கள் மற்றும் 30-களில் (வயது) இருக்கும் இளைஞர்களை பாதித்து வருகிறது மற்றும் பெரிய நகரங்களில் பரவி வருகிறது. Desert News-ன் அறிக்கை படி, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை மீண்டும் தொற்றும் ஆற்றல் இந்த ஓமைக்ரான் வேரியன்ட்டிற்கு உள்ளது. மக்களுக்கு என்ன நோய் எதிர்ப்பு சக்தியை ஓமைக்ரான் வேரியன்ட் அளிக்கிறது என்பது மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை.



இருப்பினும் ஆய்வு ஒன்றின் படி, இந்த புதிய வேரியன்ட் டெல்டா உட்பட மற்ற கோவிட்-19 வேரியன்ட்ஸ்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என கூறப்படுகிறது. டெல்டாவை விட Omicron லேசானது என்று பொதுவான கருத்து உள்ளது. ஆனால் WHO தலைவர் டாக்டர் டெட்ரோஸ் பேசுகையில், "டெல்டாவுடன் ஒப்பிடும் போது Omicron குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக தோன்றினாலும், , இது லேசானதாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Vaccine, CoronaVirus, Omicron, Omicron Symptoms

அடுத்த செய்தி