Home /News /lifestyle /

கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் மூட்டு வலி… உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் மூட்டு வலி… உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

மூட்டு வலி

மூட்டு வலி

சிலர் உடல் நிலை தேறி வந்தாலும், பலருக்கு மூட்டு வலி, அழற்சி மற்றும் மூட்டுகளில் பலவீனம் ஏற்பட்டுள்ளது.

கோவிட் தொற்று ஏற்பட்ட நபர்கள், முழுமையாக நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபட்ட பிறகு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன என்று பல அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன. கோவிட் நோயிலிருந்து மீண்டு வந்தாலும், உடல் அசதி, தீவரமான உடல் வலி, ஆற்றல் இல்லாமல் போவது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தோன்றுகின்றன. போதிய ஓய்வும், ஊட்டச்சத்து உணவுகளும் உடல் ஆரோக்கியத்தை மீட்க உதவும். சிலர் உடல் நிலை தேறி வந்தாலும், பலருக்கு மூட்டு வலி, அழற்சி மற்றும் மூட்டுகளில் பலவீனம் ஏற்பட்டுள்ளது. கோவிட் 19 பாதிப்பு வந்தால், ஆர்த்தரைடிஸ் ஏற்படுமா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பொதுவாகவே, தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு அல்லது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாவுடன் தொற்றால், நோய்த்தொற்றுக்குப் பிந்தைய மூட்டுவலி ஏற்படுகிறது. நோய்த்தொற்றால் ஏற்படும் மூட்டுவலி ரியாக்டிவ் ஆர்த்தரைடிஸ் என்று கூறப்படுகிறது.

இந்தத் தொற்று உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்து போரிட்டு, ஆரோக்கியமான திசுக்களைத் தாக்கத் தொடங்குகிறது. இதனால் ஆரோக்கியமான திசுக்கள் வீக்கமடைகிறது. இவ்வாறு ஏன் நடக்கிறது என்ற காரணம் இதுவரை சரியாகக் கண்டறியப்படவில்லை. பாக்டீரியா தொற்றால் ஏற்படும் திசுக்கள் பாதிப்பு, கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கும் உண்டாகிறது. குறிப்பாக, HLA-B27 வகை மரபணுவைக் கொண்டவர்களுக்கு, இதனால் ஆர்த்தரைடிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கோவிட்-19 பாதிப்பு, உடலில் பல்வேறு விதமாக தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். அதே போல, சிலருக்கு, ஆட்டோ இம்யூன் நோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இதில் ரியாக்டிவ் ஆர்த்தரைடிஸ் மூட்டுவலியும் அடங்கும். கோவிட் தொற்று ஏற்பட்டு, அதன் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கிய பின், இந்த பாதிப்பு ஏற்படும். மேலும், பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது கூறப்படுகிறது.



மூட்டு வலி, கால் மூட்டுகளில் மட்டுமல்லாமல், கைகள், விரல்கள், மணிக்கட்டு மற்றும் தோள்பட்டைகளிலும் ஏற்படும். மூட்டு வலி, மூட்டுகளில் வீக்கம், விறைப்புத்தன்மை, தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கம் ஆகியவை ஏற்படும்.

ரியாக்டிவ் ஆர்த்தரைடிஸ் நோயை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் பல வகையான மூட்டுவலிகளுடன் தொடர்புடைய ஆன்டிபாடிகள் ஆகியவற்றைக் கண்டறிவதன் மூலம் டயாக்னோஸ் செய்யலாம்.

சமீப நாட்களாக கோபம் அதிகமாக வருகிறதா..? நீங்கள் உட்கொள்ள வேண்டிய , கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

வலி நிவாரணிகள் மற்றும் வீக்கம் குறைக்கும் மருந்துகள் மூலம் ஆர்த்தரைடிஸ் நோய்யை நிர்வகிக்கலாம். வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க, ஐஸ் கட்டிகள் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சி செய்வது விறைப்புத் தன்மையைக் குறைக்கும்.

அது மட்டுமின்றி, மூட்டு மற்றும் தசைகளுக்கு வலுவூட்ட, ஃபிசியோதெரபி சிகிச்சை மற்றும் பயிற்சிகள் பெறலாம்.



சாதாரண மூட்டுவலி என்று நீங்களே சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. கோவிட் தொற்றுக்குப் பின்பு என்ன விதமான உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியதும் அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Arthritis Pain, Bone, CoronaVirus, Covid-19

அடுத்த செய்தி