Home /News /lifestyle /

எலான் மஸ்க் உடல் எடை குறைக்க இந்த டயட் முறைதான் காரணமாம் : வைரலாகும் அவரின் வெயிட் லாஸ் ட்வீட்...

எலான் மஸ்க் உடல் எடை குறைக்க இந்த டயட் முறைதான் காரணமாம் : வைரலாகும் அவரின் வெயிட் லாஸ் ட்வீட்...

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்த இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங்கை நிபுணரின் ஆலோசனைபடி சரியாக 2 - 3 மாதங்களுக்கு பின்பற்றி வந்தால் 3-5 கிலோ வரை உடல் எடை குறைக்க முடியும் என தி மேக்ஸ் ஹெல்த்கேர் டீம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரபல தொழிலதிபர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், பதிவிட்ட ட்வீட்தான் இன்றைய டிரெண்டிங் தலைப்புச் செய்தியாக உலா வந்துக்கொண்டிருக்கிறது. அந்த போஸ்டில் உள்ள குறிப்புகளை பலரும் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்ன செய்தியை பகிர்ந்தார் என்கிறீர்களா..?

    எலான் மஸ்க் கடுமையான பல முயற்சிகளுக்கு பின் உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதோடு தான் எவ்வாறு உடல் எடையை குறைத்தேன் என்ற குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், 'எனது நல்ல நண்பரின் ஆலோசனைக்கு பிறகு நான் அவ்வப்போது இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting )இருக்க ஆரம்பித்தேன், இப்போது நான் மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் இது மிகவும் உதவிகரமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.



    இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் என்றால் என்ன..?

    எலான் மஸ்க் மட்டுமல்ல பல பிரபலங்களும் இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங்கைதான் பின்பற்றுகின்றனர். ஊட்டச்சத்து நிபுணர்களும் இந்த ஃபாஸ்டிங் முறையைதான் பரிந்துரைக்கின்றனர். ஃபாஸ்டிங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பீரியட் ஃபாஸ்டிங் முறை. இரண்டாவது இண்டர்மிண்டண்ட் ஃபாஸ்டிங். இதை தமிழில் இடைப்பட்ட உண்ணாவிரதம் என்று கூறப்படுகிறது. இந்த உண்ணாவிரதத்தில், நாம் ஒரு வேளைக்கு சாப்பிடும் உணவையே குறிப்பிட்ட நேர இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதாகும். அதற்கிடையில் வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. அதேபோல் அந்த உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு பின் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

    இடைப்பட்ட உண்ணாவிரதத்தில் மிகவும் பிரபலமான முறை 16:8 ஆகும். இதில், நபர் 8 மணி நேரம் மட்டுமே சாப்பிட வேண்டும். இதற்குப் பிறகு, மீதமுள்ள 16 மணி நேரத்தில் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.



    இந்த இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங்கை நிபுணரின் ஆலோசனைபடி சரியாக 2 - 3 மாதங்களுக்கு பின்பற்றி வந்தால் 3-5 கிலோ வரை உடல் எடை குறைக்க முடியும் என தி மேக்ஸ் ஹெல்த்கேர் டீம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இதை எல்லோரும் பின்பற்றலாமா என்றால் நிச்சயம் கிடையாது. இதற்கென சில வரம்புகள் உள்ளன. எனவே இதை மருத்துவரின் பரிந்துரையின்றி பின்பற்றக்கூடாது. குறிப்பாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் உட்கொள்வோர், தொடர் சிகிச்சைகள் எடுத்து வருவோருக்கு இந்த இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் கைக்கொடுக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தொடர்ந்து அதிக பசி எடுக்கிறதா? - இந்த ஸ்நாக்ஸ்களை முயற்சி செய்து பாருங்கள்!

    இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாக குறிப்பிட்டுள்ளது.

    இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங்கில் எட்டு முதல் 16 மணிநேரம் போன்ற பல்வேறு வகையான உணவு முறைகள் உள்ளன. அவை சில நேரங்களில் 10 மற்றும் 14 மணி நேரங்களாக மாற்றப்படும். பின்னர் காலை மற்றும் மாலை விரதம் உள்ளது. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என இதில் சில முறைகள் உள்ளன.
    எனவே இது அவரவர் வேலை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை பொறுத்து வரைமுறை படுத்தப்படுகிறது.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Elon Musk, Intermittent Fasting, Weight loss

    அடுத்த செய்தி