கொரோனாவுக்கு அடுத்தபடியாக மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த தொற்று இல்லை என கருதப்பட்டு வந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவுரையா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மக்களை மிகுந்த கவலை அடைய வைத்துள்ளது.
அதாவது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சிறுமியின் குடும்பத்தினர் அல்லது அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வெளிநாடு சென்று திரும்பவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கு அம்மை நோய் பரவத்தொடங்கியது முதலே, பாலியல் நடத்தை பற்றி பல சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. அறிகுறிகள் உள்ள ஒருவருடன் முத்தமிடுதல், தொடுதல், வாய்வழி மற்றும் பிறப்புறுப்பு வழி உடலுறவு உட்பட எந்த வகையான நெருங்கிய தொடர்பு மூலமாகவும் வைரஸ் பரவக்கூடும் எனக்கூறப்படுகிறது.
WHO இன் கூற்றுபடி, தடிப்புகள், உடல் திரவங்கள் (திரவங்கள், சீழ் அல்லது தோல் புண்களின் இரத்தம் போன்றவை) மற்றும் சிரங்குகள், உமிழ்நீர் மூலம் வைரஸ் பரவுவதால் புண்கள் அல்லது கொப்புளங்கள் தோன்றுவது தொற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த ஆடைகள், படுக்கை, துண்டுகள் போன்றவற்றுடன் தொடர்புகொள்வது அல்லது அவர்கள் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது போன்ற தொடர்புகள் மூலம் தொற்று பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனக்குறிப்பிட்டுள்ளது.
உடல் தொடர்பு மூலம் பரவுவதைக் கருத்தில் கொண்டு, உடலுறவு போன்ற பாலியல் ரீதியிலான தொடர்பு மூலமாகவும் குரங்கு அம்மை பரவுமா? என்ற சந்தேகம் நீடித்து வருகிறது.
சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் டிரேன் குப்தா கூறுகையில், “பாலியல் தொடர்புகளின் போதும் குரங்கு அம்மை பரவுகிறது. அதாவது குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது குரங்கு அம்மை பரவக்கூடும். வாய், குதம் அல்லது பிறப்புறுப்பு வழியாக உறவு கொள்ளும் போதும், அவர்களது உறுப்புகளை தொடுவதன் மூலமாகவும் குரங்கு அம்மை பரவக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
கட்டிப்பிடித்தல், மசாஜ் செய்தல் மற்றும் முத்தமிடுதல் மற்றும் நீண்டநேரம் முகத்திற்கு நேருக்கு நேராக அமர்ந்து பார்ப்பது அல்லது பேசுவது ஆகியவையும் வைரஸ் உடனான தூரத்தை குறைப்பதாக எச்சரித்துள்ளார்.
நல்ல கொலஸ்ட்ராலுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலுக்கும் என்ன வித்தியாசம்..?
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய படுக்கை, துண்டுகள் மற்றும் செக்ஸ் பொம்மைகள் போன்ற கிருமி நீக்கம் செய்யப்படாத துணிகள் மற்றும் பொருட்களை உடலுறவின் போது ஒருவர் தொட்டால் நோய் தாக்க வாய்ப்புள்ளது.
குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் பாலியல் ரீதியாக பலருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாலியல் தொழிலாளிகள் போன்றவர்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் பிறருடன் தொடர்பு கொள்வதை தவிர்ப்பதன் மூலமாக இது மேலும் பரவாமல் தடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விந்து, யோனி திரவங்கள் அல்லது பிற உடல் திரவங்களில் வைரஸ் இருக்க முடியுமா? என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நிபுணர்கள் முயற்சித்து வருகின்றனர்.
மூத்த மருத்துவரான வசந்த் குஞ்ச் கூறுகையில், “உடலுறவின் போது நெருங்கிய தொடர்பு மூலம் குரங்கு அம்மை பரவ வாய்ப்புள்ளது. நோய்வாய்ப்பட்ட நபரின் பிறப்புறுப்புகளைத் தொடுவது உட்பட வாய்வழி, யோனி மற்றும் குதம் போன்ற அந்தரங்க உறுப்புகள் வழியாக உடலுறவு கொள்ளும் போது தொற்று பரவக்கூடும்” என எச்சரிக்கிறார்.
ஆணுறை பயன்படுத்துவது உதவுமா?
குரங்கு அம்மை நோயானது கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் அல்லது உடலுறவின் போது பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய படுக்கை, உடைகள் அல்லது பொருள்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் பரவலாம், எனவே ஆணுறை பயன்படுத்துவது போன்ற தடுப்பு முறைகள் பயனுள்ளதாக இருக்காது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குரங்கு அம்மை உடலுறவின் மூலம் பரவும், எல்லா வகையான தொடுதலும் அதனால் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலக்கட்டத்தைப் போலவே குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படும் நபர்களிடமும் மிகுந்த எச்சரிக்கையுடனும், சுகாதாரத்துடனும் இருக்க வேண்டும். தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க், கை கழுவுதல், சமூக விலகல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் ஆரம்ப அறிகுறிகளில் கூடிய விரைவில் மருத்துவரை அணுக வேண்டும், மேலும் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறினால் பாலியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
குரங்கு அம்மை உள்ள ஒருவருடன் எந்த வகையான நெருங்கிய உடல் ரீதியான தொடர்பைக் கொண்டாலும், அவர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் உடலுறவு கொள்ளத் தேர்வு செய்கிறார்கள் உள்ளிட்ட எந்த காரணிகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்களை ஆபத்திற்குள்ளாக்கி கொள்கிறார்கள் என அர்த்தம்.
நீரிழிவு நோயாளிகள் நாவல்பழம் சாப்பிடலாமா..? கூடாதா..? தெரிந்துகொள்ளுங்கள்...
அதேசமயத்தில் ஒரு நோயின் காரணமாக மக்களை களங்கப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என சுட்டிக்கட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்களைக் கவனித்துக் கொள்ள உதவுபவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
WHO அறிக்கையின்படி, தடிப்புகள் சில பாலியல் பரவும் நோய்களான ஹெர்பெஸ் மற்றும் சிபிலிஸ் போன்றவற்றுடன் ஒத்திருக்கும் என்றும், பாலியல் ஆசை அதிமுள்ள நபர்கள் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு மட்டும் அல்ல. தொற்றக்கூடிய ஒருவருடன் நெருங்கிய உடல் தொடர்பு வைத்திருக்கும் எவரும் ஆபத்தில் உள்ளனர் என்றும் எச்சரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monkeypox, Sex, Sex infection