• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புரோட்டீன் ஷேக்ஸ் மற்றும் மருந்துகள் எடுக்காமலே தசைகளை வலுவாக்க முடியுமா..?

புரோட்டீன் ஷேக்ஸ் மற்றும் மருந்துகள் எடுக்காமலே தசைகளை வலுவாக்க முடியுமா..?

புரோட்டீன் ஷேக்ஸ்

புரோட்டீன் ஷேக்ஸ்

உங்களின் தசைகளை வளர்க்க புரோட்டீன் பவ்டர்கள் மிக சிறந்த வழி என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

  • Share this:
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் பலரின் சவாலான விஷயம் தசைகளை வலுவாக்குவது தான். இதற்காக எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருவார்கள். அவற்றில் பல நமது உடலுக்கு மோசமான பக்க விளைவுகளை உண்டாக்க கூடியவை என உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தசைகளை சிறந்த முறையில் வலுப்பெற செய்ய புரோட்டீன் சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்வார்கள். இது மட்டும் தான் ஒரே வழி என்று பலர் நினைக்கின்றனர்.

ஆனால் உடல் எடையை குறைத்து, தசையை வலுப்பெற செய்வதற்கு வேறு சில சரியான வழிமுறைகள் உள்ளன. இதில் நமது வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. தசையை வலுப்பெற செய்வதும், உடல் எடையை குறைப்பதும் நீண்ட கால பயிற்சி கொண்ட செயலாகும். சிறந்த தசை நிறையை அடைய சீரான ஆற்றல் அளவு, உடல் செயல்திறன், உடலுக்கு ஏற்ற வலிமை போன்றவை முக்கியமாக தேவையானவை.

எவ்வளவு புரோட்டீன் ஒரு நாளைக்கு தேவை?

உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைத்து வருவதன் மூலம் தசையை வலுப்பெற செய்யலாம். உங்களின் வயது மற்றும் எடைக்கு ஏற்ப, தேவையான அளவு புரோட்டீனை எடுத்துக்கொண்டால் இதற்கு அதிகம் உதவும். ஒரு கிலோவிற்கு 1.6 கிராம் முதல் 2.2 கிராம் வரை புரோட்டீன் நமது உடலுக்கு தேவைப்படும். உங்களின் உடல் எடை 70 கிலோவாக இருந்தால், உங்களுக்கு 112 கிராம் முதல் 160 கிராம் வரை புரோட்டீன் ஒரு நாளைக்கு தேவைப்படும்.



புரோட்டீன் பவ்டர்கள் :

உங்களின் தசைகளை வளர்க்க புரோட்டீன் பவ்டர்கள் மிக சிறந்த வழி என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவு சாப்பிடுவோர், அசைவ உணவு சாப்பிடுவோர், வீகன் உணவு சாப்பிடுவோர் என ஒவ்வொருவருக்கும் தனியான புரோட்டீன் பவ்டர்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி எளிதில் தசைகளை வளர்க்கலாம்.

உணவுகள் :

ஏற்கனவே சாப்பிட்டு வரும் புரோட்டீன் பவ்டர்களில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைக்கிறது. மேலும், தினமும் சாப்பிடும் உணவில் 100 கிராமிற்கு குறைவாக புரதச்சத்து இருப்பதாக பார்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பாக புரதம் உள்ள முக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அளவு ஒவ்வொருவரின் அன்றாட செயல்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும்.

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பால் குடிக்கலாமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..!

உடற்பயிற்சியின் போது :

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியமானது. எளிமையாக தசையை வலுப்பெற வைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், அதற்கு பின்னரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுமுறையை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு முறை உடற்பயிற்சி செய்யும்போது, 30 நிமிடத்திற்கு முன்பும், அதற்கு பின்னரும் புரோட்டீன் அதிகம் உள்ள பானங்கள் அல்லது உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் சிறிது கார்போஹைட்ரேட், கொழுப்பு கொண்ட உணவுகளையும் சாப்பிடலாம் என உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றன.



உடற்பயிற்சிகள் :

நீங்கள் எடுத்துக்கொள்ளும் புரோட்டீன் அளவுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும். தசைகளை வலுப்பெற செய்யும் முக்கிய உடற்பயிற்சிகள் செய்து வரலாம். அதிக பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் மூலம் விரைவாக தசை வலிமை பெறலாம். மேலும் விளையாட்டுகளின் மூலமும் தசையை வலுவாக்க செய்யலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: