ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Padded Bra மார்பகப் புற்றுநோயை உருவாக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

Padded Bra மார்பகப் புற்றுநோயை உருவாக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

புற்றுநோய்

புற்றுநோய்

ப்ரா அணிவதற்கும், புற்றுநோய் பாதிப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மரபு ரீதியாக ஏற்படும் மாற்றங்களின் காரணமாகவே புற்றுநோய் உண்டாகுவதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களை மிகவும் அச்சுறுத்தக் கூடிய நோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் இருக்கிறது. குறிப்பாக சமீப ஆண்டுகளில் பெண்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பேடட் ப்ரா காரணமாக மார்பக புற்றுநோய் உருவாகலாம் என்ற வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், சந்தையில் இதற்கு முன்பு விற்பனையாகி வந்த, புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்ட ப்ராக்களை காட்டிலும், இது முற்றிலும் வேறுபட்டதாகும்.

குறிப்பாக, இறுக்கமாக ப்ரா அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படக் கூடும் என்று 1990களுக்கு மத்தியில் பரவிய ஒரு சில ஆய்வுக் கட்டுரைகளின் காரணமாக, ப்ரா அணிவது தொடர்பான நிறைய வதந்திகள் பரவத் தொடங்கின. சிலர் ப்ரா அணிவதையே கைவிடும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டனர்.

ஆனால், ப்ரா அணிவதற்கும், புற்றுநோய் பாதிப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மரபு ரீதியாக ஏற்படும் மாற்றங்களின் காரணமாகவே புற்றுநோய் உண்டாகுவதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பேடட் ப்ரா அணிந்தால் புற்றுநோய் வருமா?

மார்பகங்கள் தளர்வாக இல்லாமல், அவற்றை தாங்கும் வகையிலும், கனக்கச்சிதமாக பொருந்தும் வகையிலும் அடிப்பகுதியில் ஒயர் போன்ற பட்டை கொண்ட ப்ராக்களை பெண்கள் அணிகின்றனர். சிலர் இரவு தூங்கும்போதும் கூட ப்ரா அணிந்து கொள்கின்றனர். இந்தக் காரணங்களால் புற்றுநோய் ஏற்படும் என்ற தகவலை திட்டவட்டமாக மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் மருத்துவர் தாண்யா வெளியிட்டுள்ள வீடியோவில், “உங்களுக்கு சௌகரியமாக இருந்தால் ப்ரா அணிவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், தொந்தரவாக இருக்கிறது என்றால் நீங்கள் அதை அணியத் தேவையில்லை’’ என்கிறார்.


என்ன தான் சிக்கல் ஏற்படும்!

நீங்கள் பேடட் அல்லது ஒயர்டு ப்ரா அணிவதால் வேறு என்னதான் சிக்கல் ஏற்படும் என்ற கேள்வி எழுகிறதா? ஆம், சிலருக்கு இது வலியை ஏற்படுத்தலாம் அல்லது அழுத்தத்தை கொடுக்கலாம். சில சமயம், மரத்துப்போன உணர்வு ஏற்படலாம். மேலும், நீங்கள் பொருத்தமற்ற இறுக்கமான ப்ரா அணிவதும் கூட இந்தப் பிரச்சனைகளுக்கு காரணமாக அமையலாம். ஆகவே, உங்களுக்கு சௌகரியமான ஒன்றை, சரியான ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Also Read : 30 வயதைத் தாண்டிய பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

எதனால் புற்றுநோய் ஏற்படுகிறது

சரி, நாம் அணியும் ப்ராவுக்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை என்றால், வேறு எதனால் புற்றுநோய் ஏற்படுகிறது? இதுகுறித்து நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். கட்டுப்பாடற்ற உடல் எடை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கம் மற்றும் மரபு ரீதியான பிரச்சினைகளால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

குறிப்பாக, தாய்ப்பால் புகட்டாத பெண்கள், 35 வயது வரையிலும் குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் போன்றோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு. இந்த பிரிவில் வரும் பெண்கள் பொதுவாக ஓராண்டுக்கு ஒருமுறையேனும் மார்பக புற்றுநோய்க்கான மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

மார்பகங்களில் வீக்கம், மார்புக் காம்புகளில் வெடிப்பு, மார்பகங்களில் கட்டிகள் தென்படுவது, சிவந்து போவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Bra, Breast cancer