முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்குயின் கார்னர் 13 : தைராய்டு மாத்திரையை பாதியிலேயே நிறுத்துவது சரியா ? இதனால் கரு நிற்பதில் சிக்கல் வருமா ? மருத்துவரின் விளக்கம்

பெண்குயின் கார்னர் 13 : தைராய்டு மாத்திரையை பாதியிலேயே நிறுத்துவது சரியா ? இதனால் கரு நிற்பதில் சிக்கல் வருமா ? மருத்துவரின் விளக்கம்

மக்களில் பலர் எண்ணற்ற காரணங்களால் தூக்கமிழந்து தவிக்கின்றனர். மனதில் இருக்கும் அதிகப்படியான கவலைகள் அல்லது தூக்கமின்மை பிரச்சனைகள் அல்லது இதர நோய்களின் எதிரொலியாக தூக்கம் கெட்டு விடுகிறது. சிலருக்கு படுத்த உடனே தூக்கம் வருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. இன்னும் சிலர் பாதியில் முழிப்பு வந்து அவதி அடைபவர்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில், ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் என்பதற்காக பலரும் தூக்க மாத்திரைகளை வாடிக்கையாக எடுத்துக் கொள்கின்றனர்.

மக்களில் பலர் எண்ணற்ற காரணங்களால் தூக்கமிழந்து தவிக்கின்றனர். மனதில் இருக்கும் அதிகப்படியான கவலைகள் அல்லது தூக்கமின்மை பிரச்சனைகள் அல்லது இதர நோய்களின் எதிரொலியாக தூக்கம் கெட்டு விடுகிறது. சிலருக்கு படுத்த உடனே தூக்கம் வருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. இன்னும் சிலர் பாதியில் முழிப்பு வந்து அவதி அடைபவர்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில், ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் என்பதற்காக பலரும் தூக்க மாத்திரைகளை வாடிக்கையாக எடுத்துக் கொள்கின்றனர்.

தைராய்டு குறைபாடு என்பது ஒரு பெரிய நோய் கிடையாது. மிகவும் சிறுபிரச்சனை தான். . எளிதில் தீர்க்கக் கூடியது. தைராய்டு மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொண்டாலும் அதனால் பக்க விளைவுகள் கிடையாது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருமதி ராதா தன் மகளோடு அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

"டாக்டர்!!! ஒரு சந்தோஷமான விஷயம் என்னுடைய மகளுக்கு திருமண நிச்சயமாயிருக்கு. மாப்பிள்ளை சிங்கப்பூரில் வேலையில் இருக்கிறார். மகளுக்கும் திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூர் செல்ல விசாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார். " ரொம்ப சந்தோஷம் " என்றேன்.

"டாக்டர்!! , என்னுடைய மகள் தைராய்டு பிரச்சினைக்காக தினமும் மாத்திரை எடுக்கிறாள். திருமணத்திற்கு பிறகு மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமா? இல்லை, நிறுத்தி விடலாமா? அதனால் ஏதாவது பிரச்சினை வருமா? தினமும் மாத்திரை சாப்பிட்டால் ஏதாவது சொல்லி விடுவார்களோ? என்று பயமாக இருக்கிறது. அந்த ஊரில் மாத்திரை கிடைக்குமா ?இங்கிருந்தே வாங்கி அனுப்பி விடவா?." என்று கேள்விக் கணைகளைத் தொடுத்து தள்ளிவிட்டார்.

அவர்களுக்கு நான் அளித்த விளக்கம் இதோ:

திருமதி ராதாவின் மகள் எடுத்துக்கொள்ளும் தைராய்டு மாத்திரையின் அளவு 100 மைக்ரோ கிராம், 5 வருடங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக செய்யப்பட்ட தைராய்டு பரிசோதனைகள் முடிவுகள் அனைத்தும் சரியாக இருப்பதால் மாத்திரையின் அளவை மாற்ற வேண்டியதில்லை.

தைராய்டு மாத்திரை குறைபாடு உள்ளவர்கள் தாமாகவே மாத்திரையை நடுவில் நிறுத்துவது சரியல்ல. தைராய்டு நம் உடலின் பல்வேறு செயல்களுக்கும் முக்கியமான ஒரு இயக்கு நீராக விளங்குகிறது. தைராய்டு குறைபாடு உடல் சோர்வையும், எடை அதிகரிப்பையும், ரத்தத்தில் குறைபாட்டையும் ஏற்படுத்தலாம். பெண்களைப் பொறுத்தவரை மாதாந்திர சுழற்சியும் பாதிக்கலாம். அதனால் மாத்திரையை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் திருமணத்திற்கு உள்ள பெண் ,விரைவில் கருத்தரிக்க லாம் என்ற சூழ்நிலையில் மாத்திரையை நிறுத்தினால் அவருக்கு மாதவிடாய் சரியாய் வராமல் இருப்பதும் கர்ப்பம் உண்டாவது தள்ளிப் போவதும், நடக்கலாம்.

அவ்வாறு உண்டானாலும் அந்த கரு வளர்ச்சி ஆரோக்கியமாக இல்லாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது . அதனால் தைராய்டு மாத்திரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பொதுவாக தைராய்டு மாத்திரை காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சரியானதாக இருக்கும் ஏனென்றால் உணவோடு தைராய்டு மாத்திரை சேரும்பொழுது, வயிற்றில் உறிஞ்சப்படுவது சீராக இருக்காது. வேலை செய்யும் திறன் குறைவாகும். இது ஒரு கேள்விக்கான பதில்.

கண்கள் வீங்குவதற்கான காரணங்கள் என்ன.? சரி செய்ய டிப்ஸ்

அடுத்தது, தைராய்டு மாத்திரையை பொறுத்தவரை எல்லா நாடுகளிலும் கிடைக்கக்கூடிய, வெகு சாதாரணமான ஒரு மாத்திரை. மற்ற நாடுகளில் அதை தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் வேறாக இருப்பதால், பெயர் வேறுபடலாம். ஆனால் மாத்திரை கட்டாயம் கிடைக்கும். தேவைப்பட்டால் நீண்ட காலாவதி உள்ள மாத்திரைகளை ஒரு வருடத்திற்கு கூட மருத்துவரின் மருந்துச் சீட்டு பரிந்துரையுடன் விமானத்தில் எடுத்துச்செல்லலாம் .

அடுத்தது, எத்தனை தான் நாம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், 'மகளுக்கு ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது, தைராய்டு குறைபாடு உள்ளது, அதனால் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தைரியமாக சொல்வதற்கு இன்னமும் பெண்ணைப் பெற்றவர்கள் தயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தைராய்டு குறைபாடு என்பது ஒரு பெரிய நோய் கிடையாது. மிகவும் சிறுபிரச்சனை தான். . எளிதில் தீர்க்கக் கூடியது. தைராய்டு மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொண்டாலும் அதனால் பக்க விளைவுகள் கிடையாது. இயற்கையாக சுரக்கக்கூடிய தைராய்டு ஹார்மோனே மாத்திரையாக வருவதால் பல வருடங்கள் எடுத்துக் கொண்ட பிறகும் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

மாப்பிள்ளை வீட்டாரிடமும் ,தைராய்டு பிரச்சனை உள்ளது அதற்காக தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதை முன்பே தெரிவித்து விடுங்கள்.

அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களையும் மருத்துவரோடு ஒருமுறை பேச வையுங்கள். அவர்களி டத்தில் சொல்லாமல், சந்தேகப்படும் படியாக ஒரு சூழ்நிலையை உருவாக்கும் போதுதான் பிரச்சனை பூதாகரமாகும். எனவே சிக்கலை சிறியதாக வைத்துக் கொண்டு சமாளித்து விடுங்கள் என்று கூறினேன்.

"சரியான ஆலோசனையை கொடுத்தீர்கள் டாக்டர்!!!. மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. தேவைப்பட்டால் மாப்பிள்ளை வீட்டாரை உங்களுடன் பேச வைக்கிறேன். ஊருக்கு செல்லும் முன் தேவையான அளவு தைராய்டு மாத்திரைகளை வந்து வாங்கிக் கொள்கிறேன் "எனக் கூறி விடைபெற்றுச் சென்றனர், திருமதி ராதாவும் அவர் பெண்ணும்.

First published:

Tags: Infertility, Pregnancy Risks, Thyroid, பெண்குயின் கார்னர்