ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த பரிசோதனை மூலம் மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிய முடியும்!

இந்த பரிசோதனை மூலம் மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிய முடியும்!

காட்சி படம்

காட்சி படம்

மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முன்கூட்டியே சுட்டிக்காட்டக்கூடிய ரத்த பரிசோதனை குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல பாடகர்கள் பம்பா பாக்யா, கிருஷ்ணகுமார் குன்னத், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், சிரஞ்சீவி சார்ஜா என வயது வித்தியாசமின்றி ஏராளமான பிரபலங்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர்.

இது மக்கள் மத்தியில் சோகத்தை மட்டுமல்ல ஃபிட்னஸ் குறித்த பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. திடீர் மரணங்களால் செய்திகளில் இடம் பிடித்த பிரபலங்கள் பலரும், உடல் தகுதி உடையவர்களாகவும், ஆரோக்கியமாகவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். இதனால் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கண்டறிய ஏதாவது வழி உள்ளதா? என குழம்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முன்கூட்டியே சுட்டிக்காட்டக்கூடிய ரத்த பரிசோதனை குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கார்டியோ - சி ரியாட்டிவ் புரோட்டீன் (hs CRP) என அழைக்கப்படும் ரத்த பரிசோதனையை ஒரே ஒரு முறை செய்வதன் மூலமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை கண்டறிய முடியாது என்றாலும், தொடர்ந்து செய்யப்படும் சோதனைகள் மூலமாக மாரடைப்பு குறித்து எச்சரிக்கை பெற வாய்ப்புள்ளது.

கார்டியோ சி-ரியாக்டிவ் புரோட்டீன் சோதனை என்றால் என்ன?

கார்டியோ சி-ரியாக்டிவ் புரோட்டீன் அல்லது எச்.எஸ்.சி.ஆர்.பி என்பது சமீபத்தில் முக்கியத்துவம் பெற்று வரும் சோதனையாகும். CRP என்பது உடலில் ஏதேனும் அழற்சி மற்றும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் காட்டும் குறியீடு ஆகும். மனித உடலுக்குள் கார்டியோ சி-ரியாக்டிவ் புரோட்டீன் அதிகமாக இருந்தால், இதய தமனிகளில் அடைப்பு, நெஞ்சுவலி, திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

also read : நீங்கள் இப்படியெல்லாம் மொபைல் ஃபோல் பார்த்தால் கண்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி..!

அழற்சி என்பது தொற்று, மன அழுத்தம், முடக்கு வாதம் போன்ற சில தன்னுடல் தாக்க நோய்களுக்கு எதிராக நமது உடலின் எதிர்வினையாகும். உதாரணமாக பூச்சி கடியை சொல்லலாம், அழற்சி காரணமாக பூச்சி கடித்த இடம் வீங்க ஆரம்பிக்கும். இது சில நாட்களில் சரியானால் பிரச்சனை கிடையாது, ஆனால் நீண்ட நாட்களாக வீக்கம் அப்படியே இருந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். இதேபோல் தான் இதயத்தில் ஏற்படும் அழற்சி, மாரடைப்பு, திடீர் மரணம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் போன்ற சிகிச்சை முறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

கல்லீரலில் உற்பத்தியாகும் சி-ரியாக்டிவ் புரோட்டீன் ஆனது, உடலில் தொற்றோ, அழற்சியோ ஏற்படும்போது அதனை எதிர்த்து போராடும் விதமாக ரத்தத்திற்கு அனுப்பப்படுகிறது. எனவே கார்டியோ சி-ரியாக்டிவ் புரோட்டீன் சோதனையை மேற்கொள்ளும் போது ரத்தத்தில் அழற்சி அல்லது ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

எத்தனை முறை பரிசோதன செய்ய வேண்டும்:

நோயாளிக்கு தொற்று அல்லது கடுமையான நோய் இல்லாத போது, கார்டியோ சி-ரியாக்டிவ் புரோட்டீன் ரத்த பரிசோதனையை இரண்டு வார இடைவெளியில் இரண்டு முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் உயர் Hs-CRP அளவை வைத்து அழற்சிக்கான அளவை கண்டறிய முடியும்.

அதுமட்டுமின்றி அதிக கொழுப்பு, சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், உடல் பருமன், செயலற்ற வாழ்க்கை முறை, வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்றவையும் இதய நோய்க்கான பிற ஆபத்து காரணிகளாகும்.

40 வயதுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன?

ஆண்டுதோறும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறுநீரகம், கல்லீரல், சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய, இதயப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மார்பு எக்ஸ்ரே, ஈசிஜி, எக்கோ கார்டியோகிராபி மற்றும் டிரெட்மில் ஈசிஜி போன்ற சோதனைகளையும் மேற்கொள்ளலாம்.

40 வயதிற்கு முன்னதாகவே , உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நீண்டகால புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் அல்லது உடல் பருமன், மார்பு வலி அல்லது அசௌகரியம் மூச்சுத் திணறல், இதய நோய்கள் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

also read : டைப் 2 நீரிழிவு நோயால் மூளைக்கு ஆபத்து! எச்சரிக்கும் மருத்துவர்கள்..

குடும்பத்தில் இருதய நோய் இருக்கும் நபர்கள், நீரிழிவு நோயாளிகள், தீவிர கோவிட் போன்றவற்றில் இருந்து மீண்டு வருபவர்கள், உடல் பருமனானவர்கள் ஆகியோர் சிறப்பு சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், எக்கோ கார்டியோகிராம் போன்ற கூடுதல் பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்.

வித்தியாசமான நோய் அறிகுறிகள் தென்படும் நபர்கள் CT கரோனரி ஆஞ்சியோகிராம் பரிசோதனையும், அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே பணியாற்றுவோர் டிரெட்மில் சோதனை அல்லது கரோனரி கால்சியம் ஸ்கோர் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.

இதயத்தை பாதுகாக்க உதவும் வாழ்க்கைமுறை:

ஆரோக்கியமான வாழ்க்கை முறை இதய வீக்கம் மற்றும் Hs-CRP உற்பத்தியை குறைக்க உதவுகிறது.

  • புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தல்
  • ஆக்டிவான உடல் செயல்பாடு மற்றும் உடல் எடை பராமரிப்பு
  • ஆரோக்கியமான சரிவிகித உணவை உண்ணுதல்
  • மது பழக்கத்தை முற்றிலும் கைவிடுதல்
  • அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது போன்றவற்றிற்கு சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகியவை மாரடைப்பை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் காராணிகள் ஆகும்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Heart disease, Heart health