Home /News /lifestyle /

மூக்கில் வளரும் முடியை நீக்குவது சரியா..? அதன் பயன்பாடுகள் தெரிஞ்சா இப்படி செய்ய மாட்டீங்க..

மூக்கில் வளரும் முடியை நீக்குவது சரியா..? அதன் பயன்பாடுகள் தெரிஞ்சா இப்படி செய்ய மாட்டீங்க..

மூக்கில் வளரும் முடியை நீக்குவது சரியா..?

மூக்கில் வளரும் முடியை நீக்குவது சரியா..?

முக்கு முடி உருவாகும் மேலோடு பகுதிகள் பாக்டீரியாவால் நிரம்பியுள்ளதாகவும், இது மூக்கு முடிகள் வடிகட்டியாக செயல்படுவதற்கான ஆதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மூக்கில் இருக்கும் முடியையும் அடிக்கடி டிரிம் செய்து கொள்வார்கள். மீசை வளரும்போது மூக்கினுள் இருக்கும் முடியும் வளரும். முடிவெட்டும்போது அல்லது ஷேவ் செய்யும் சமயத்தில் மூக்கினுள் இருக்கும் முடியை அகற்றிவிடுவார்கள். இதில் பலருக்கும் ஒரு விதமான சந்தேகம் இருக்கிறது.

    தலைமுடி மற்றும் முகத்தில் இருக்கும் முடியைப்போல் மூக்கில் இருக்கும் முடியை அகற்றலாமா? என கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம், மூக்கில் இருக்கும் முடி, சுவாசிக்கும் காற்றை வடிகட்டி அதில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் தொற்றுக்கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்கிறது என நம்பப்படுகிறது.

    மருத்துவ ரீதியாக வெஸ்டிபுல் என அழைக்கப்படும் மூக்கு முடி குறித்து 1986 ஆம் ஆண்டு பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் ஆய்வு ஒன்று வெளியானது. அதில் நாசி துவாரங்களின் உட்புறம் நோய் நுண்மங்கள் அற்றவையாக (Sterlite) பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்டிபுல்ஸ், அதாவது முக்கு முடி உருவாகும் மேலோடு பகுதிகள் பாக்டீரியாவால் நிரம்பியுள்ளதாகவும், இது மூக்கு முடிகள் வடிகட்டியாக செயல்படுவதற்கான ஆதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நுண்ணுயிரிகள் முடியின் ஈரமான கண்ணிக்குள் சிக்கிக் கொள்ளும் உண்மையை நிரூபிப்பதாக லான்செட் இதழில் வெளியான ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



    2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மூக்கில் இருக்கும் முடியை வெட்டுவது சுவாசக் குழாயில் கிருமிகள் ஆழமாக ஊடுருவுவதை எளிதாக்குமா?, முடியின் அடர்த்திக்கும் சுவாச நோய்களுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். 233 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மூக்கு முடி அதிகமாக உள்ளவர்களுக்கு ஆஸ்துமான வருவது மிகக் குறைவு என தெரியவந்துள்ளது.

    எந்த கெமிக்கல் டையும் இல்லாமல் அடர்த்தியான கருகரு கூந்தல் வேண்டுமா..? இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்கள்

    வடிகட்டலாக முடி செயல்படுவது இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூக்கு முடியை வெட்டுவதால் ஆஸ்துமா மற்றும் தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

    2015 ஆம் ஆண்டு மூக்கு முடியை வெட்டுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிரிம்மிங் செய்யும்போது சுவாசிக்கும் காற்றோட்டத்தின் நிலை, தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்ததில் மூக்கு முடி இல்லாதவர்களைக் காட்டிலும் முடி வைத்திருப்பவர்கள் ஆரோக்கியம் நன்றாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



    அமெரிக்கன் ஜர்னல் ஆப் ரைனாலஜியில் இதழில் வெளியான ஆய்வில், வைரஸ் மற்றும் நுண் கிருமிகள் அளவில் மிகச்சிறியது என்பதால், மூக்கின் வழியே செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், முடியை வெட்டுவதால் சுவாசத் தொற்றை ஏற்படுத்தாது எனவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

    பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளைப் பார்க்கும்போது மூக்கு முடியை வெட்டுவதால் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Hygiene, Nose

    அடுத்த செய்தி