Home /News /lifestyle /

வெந்நீரை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவாதா..? ஊட்டச்சத்து நிபுணரின் அதிர்ச்சியூட்டும் தகவல்

வெந்நீரை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவாதா..? ஊட்டச்சத்து நிபுணரின் அதிர்ச்சியூட்டும் தகவல்

வெந்நீரை குடிப்பதால் உடல் எடை குறையுமா.?

வெந்நீரை குடிப்பதால் உடல் எடை குறையுமா.?

சாப்பிட்டு முடித்த பிறகு வெந்நீரை குடிப்பது எடையை குறைக்க உதவும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல! இருப்பினும் இப்பழக்கம் செரிமானத்திற்கு உதவும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தங்களது உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைக்க பலரும் வெவ்வேறு வழிகளை முயற்சித்து வருகிறார்கள். பலர் டயட் மற்றும் வொர்கவுட்களை பின்பற்றும் நிலையில், சிலர் இந்த இரண்டில் ஒன்றை தீவிரமாக பின்பற்றுவதன் மூலம் தங்கள் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

எடையை குறைக்க நினைப்போருக்கு பலரால் தரப்படும் அட்வைஸ் எப்போது தண்ணீர் குடித்தாலும் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடியுங்கள் என்பதாக இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை பருகுவது உடல் எடையை குறைக்க உதவுவதாக பெரும்பாலும் நம்பபப்பட்டு வருகிறது. நீங்களும் கூட இந்த டிப்ஸை முயற்சித்திருக்க கூடும்.

ஆனால் இந்த டிப்ஸ் உண்மையில் எடை குறைப்பிற்கு உதவுகிறதா என்பதில் இன்னும் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உண்மையில் எடை குறையுமா? என்ற கேள்விக்கான பதிலில் உங்களுக்கும் குழப்பம் இருந்தால் கவலைப்படாதீர்கள்.! இதற்கான பதிலை இப்போது பார்க்கலாம்.



வெந்நீரை குடிப்பதால் உடல் எடை குறையுமா.?

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போஸ்ட் ஒன்றின் படி, நாம் நீண்டகாலமாக நம்பி வரும் இந்த டிப்ஸ் கட்டுக்கதை என்பது தெரிய வருகிறது. இவர் சமீபத்தில் ஷேர் செய்துள்ள போஸ்ட்டில், "சாப்பிட்டு முடித்த பிறகு வெந்நீரை குடிப்பது எடையை குறைக்க உதவும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல! இருப்பினும் இப்பழக்கம் செரிமானத்திற்கு உதவும்" என குறிப்பிட்டு உள்ளார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை பாதிப்புகளா..? உஷார்...

மேலும் இதுகுறித்து கூறி இருக்கும் அஞ்சலி முகர்ஜி, வெந்நீர் செரிமானத்திற்கு உதவுகிறது. சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிப்பது உடலில் இருக்கும் சில நச்சுத்தன்மைகளை போக்க உதவும். எனவே இதற்காக நீங்கள் இந்த டிப்ஸை முயற்சிக்கலாமே தவிர உங்கள் உடல் எடையை குறைக்க அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

வெந்நீர் குடிப்பதால் எடை குறையாது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். சரி, இரு என்ன செய்தால் எடையை விரைவாக குறைக்கலாம் என்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கே...



 




View this post on Instagram





 

A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)






டிடாக்ஸ் வாட்டர்:

டிடாக்ஸ் வாட்டர் அல்லது ஹெர்பல் டீ-யுடன் நாளை துவக்குவது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை குறைக்க பெரிதும் உதவும்.

தொடர்ந்து அதிக பசி எடுக்கிறதா? - இந்த ஸ்நாக்ஸ்களை முயற்சி செய்து பாருங்கள்!

ஆரோக்கியமான காலை உணவு:

எடை குறைப்பில் இருக்கும் சிலர் காலை உணவை தவிர்ப்பார்கள். ஆனால் இது தவறான பழக்கம். நாளை ஆற்றலுடன் துவக்க மற்றும் எடை இழப்பில் சிறந்த பலன்களை பெற சில ஆரோக்கியமான மற்றும் எடை குறைப்பு உணவுகளை சாப்பிட வேண்டும்.

பழங்களை தவிர்க்க கூடாது:

சூப்பர்ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படும் பழங்களில் இருக்கும் இயற்கையான சர்க்கரை பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. எடை இழப்பு முயற்சிகளின் போது நல்ல ஸ்னாக்ஸாகவும் இருக்கும்.

நாமக்கல் மக்களே மழைக்காலம் தொடங்கி உள்ளதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க  அறிவுறுத்த

ஹைட்ரேட்டாக இருப்பது முக்கியம்:

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து எப்போதும் இருந்து கொண்டே இருப்பது முக்கியம். எனவே தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கம் இழந்த ஆற்றலை ஈடுசெய்ய உதவி எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

நொறுக்கு தீனிகளுக்கு நோ:

உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் முக்கியமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று நொறுக்கு தீனிகளுக்கு நோ சொல்வது. ஜங்க் மற்றும் வறுத்த உணவுகளில் இருக்கும் அதிக எண்ணெய் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு எடை அதிகரிப்பு உட்பட பல வாழ்க்கை முறை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hot Water, Weight loss

அடுத்த செய்தி