மஞ்சள், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் மூலம் கருப்பு பூஞ்சை தொற்றை குணப்படுத்த முடியுமா? உண்மை என்ன!

கருப்பு பூஞ்சை

மிக அரிதான நோயான இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

  • Share this:
கொரோனா தொற்று காரணமாக நாடு கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழலில் மற்றொரு பூதாகரமான நோயாக மெல்ல மெல்ல உருவெடுத்து வருகிறது கருப்பு பூஞ்சை தொற்று ( Mucormycosis-மியூகோர்மைகோசிஸ்). நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள நபர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியது. மிக அரிதான நோயான இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை தொற்றின் தாக்கம் சுகாதாரத்துறைக்கு மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் முக்கியமாக அவர்களை இந்த கருப்பு பூஞ்சை தொற்று குறி வைத்து தாக்குவதாக கூறப்படுகிறது. இயற்கையாக மண் மற்றும் இலை தழைகளில் காணப்படும் இந்த பூஞ்சை நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் சுவாசம் வழியே உடலுக்குள் நுழையும் இந்த பூஞ்சை கண் பார்வை திறனை பறிக்கிறது.

மேலும் மூளையை தாக்கி செயலிழக்க வைத்து இறுதியில் உயிரையே பறித்து விடுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த தொற்றுக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதிகாரபூர்வ அறிக்கையின் படி, நாட்டில் இதுவரை சுமார் 9,000-க்கும் மேற்பட்ட கரும்பூஞ்சை தொற்று வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் கொரோனாவை போலவே இந்த தொற்று வராமல் தடுப்பது வந்து விட்டால் எப்படி குணப்படுத்துவது என்பது தொடர்பான பல போலி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தி என்னவென்றால் படிகாரம் (alum), மஞ்சள், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி மியூகோமிகோசிஸ் அல்லது கரும்பூஞ்சை தொற்றை குணப்படுத்த முடியும் என்று கூறுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா? அல்லது போலியா?

Black Fungus : கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு வருமா?

வைரல் வீடியோ..

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில் பேசும் ஒரு மருத்துவர் பொட்டாஷ் ஆலம், மஞ்சள் மற்றும் பாறை உப்பு தூள் ஆகியவற்றுடன் 2 துளி கடுகு எண்ணெயை கலந்து உட்கொண்டால் கொடிய கரும்பூஞ்சை தொற்று குணமாகும் என்று தனது சிகிச்சை முறை பற்றி விளக்கியுள்ளார். ஆனால் பத்திரிகை தகவல் பணியகம்( Press Information Bureau) இந்த வைரல் வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவலை நிராகரித்துள்ளது. மேலும் மேற்கண்ட தகவலை "போலியானது" (FAKE) என்று அறிவித்துள்ளது.

https://twitter.com/PIBFactCheck/status/1396778600741761030

வீடியோவில் உள்ளது: ஆலம்(படிகாரம்), மஞ்சள், பாறை உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றால் கரும்பூஞ்சை தொற்றை குணப்படுத்த முடியும்.

#PIBFactCheck: இந்த தகவல் போலியானது, ஏனெனில் வீடியோவில் கூறப்பட்டுள்ள சிகிச்சை முறை ஆதாரப்பூர்வமான எந்த ஒரு அறிவியல் முடிவுகளையும் கொண்டிருக்கவில்லை. கரும்பூஞ்சை தொற்று போன்ற உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கடும் உடல்நல கோளாறுகளுக்கு வீட்டு வைத்தியங்களை தயவுசெய்து நம்பி முயற்சிக்க வேண்டாம்” என்று PIB உண்மை கண்டறியும் சோதனை குழு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: