பொதுவாக பொதுவெளியில் உள்ள டாய்லெடை பயன்படுத்துவது என்பது பலருக்கும் சங்கடத்தை உண்டாக்கும். இருப்பினும் இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்துவதும் ஆபத்து என்பதால் வேறு வழியில்லை. ஆனாலும் பலருக்கும் பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தும்போது சிறுநீர் பாதை தொற்று வந்துவிடுமோ என்ற பயம் இருக்கும்.
அனைவரும் பயன்படுத்தும் வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டுகளில் அமர்ந்து போவதால் நிச்சயம் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் நீங்கள் தண்ணீர் அருந்தாமல் நீரிழப்பு பாதிப்பால் பாதிக்கப்படுவதும் , சிறுநீரை அடக்கி வைப்பதும்தான் சிறுநீர் தொற்றுக்கான பெரும் காரணமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
எப்போதெல்லாம் சிறுநீர் பாதை தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம்..?
பொதுக்கழிவறை சுத்தமாக இல்லாதபோது தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு.
டாய்லெட் அறையில் உள்ள டிஷ்யூ பேப்பரை இயற்கை உபாதைகளை கழித்தப்பின் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறீர்கள் எனில் தொற்று வரலாம்.
யாருக்காவது சிறுநீர் பாதை தொற்று உள்ளது எனில் அவர் அந்த டாய்லெட்டை பயன்படுத்தியிருந்தால் வருவதற்கான வாய்ப்பு உண்டு.
சிறுநீரை அடக்கமுடியாமல் கழிக்கும்போது அல்லது நிதானமில்லாமல் கழிக்கும்போது அதன் சில துளிகள் டாய்லெட் சீட்டை சுற்றிலும் படும். அந்த சமயத்தில் உடனே மற்றொரு நபர் அந்த டாய்லெட் சீட்டை பயன்படுத்தினால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம். குறிப்பாக உங்கள் பிறப்புறுப்பை தொடுகிறீர்கள் என்றால் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பின் தொற்று பாதிப்பின் அறிகுறி தீவிரமாக இருக்கும். UTI ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் UTI தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து அதிகமா..?
அதிகமாக வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை பயன்படுத்தும் நபர் எனில் UTI தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் உங்கள் கைகளை சரியாக கழுவவில்லை எனில் அதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். ஏதேனும் சிறு டிஷ்யூ பேப்பர் துகள் வஜைனாவில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் UTI தொற்று வரும். ஆய்வுப்படி ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு UTI தொற்று அதிகமாக ஏற்படுகிறது.
Also Read : இந்த 5 தினசரி பழக்கங்களே மூல நோய் வர காரணம் : உணவு முறை மற்றும் சிகிச்சை முறை என்ன..?
அந்தவகையில் பொதுக்கழிப்பிடங்களில் பெண்கள் பயன்படுத்தும் இந்திய டாய்லெட்டை விட வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும்போது 78.2% தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் பயன்படுத்தும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில்தான் சிறுநீர் பாதை தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தும்போது UTI தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?
சிறுநீர் கழிக்கும் முன் பொது கழிப்பறை இருக்கைகளை டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
அந்தரங்க பாகங்களை முன்னிருந்து சுத்தப்படுத்தவும். பின்புறத்திலிருந்து இருந்து முன் பக்கமாக சுத்தம் செய்ய வேண்டாம்.
சிறுநீர் கழித்த பிறகு கைகளை நன்கு கழுவவும்.
எஞ்சிய சிறுநீர் சுற்றிலும் வெளியேறாமல் இருக்க, கழிப்பறை இருக்கையில் சரியாக உட்கார வேண்டும். முழுமையாக சிறுநீர் கழிக்கும் வரை பொறுத்திருப்பது அவசியம்.
சுகாதாரம் நன்கு பராமரிக்கப்பட்டால், ஒருவர் எப்போதும் UTI இல் இருந்து பாதுகாப்பாக இருப்பார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Toilet, Urinary Tract Infection, UTI