ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கருவை பாதிக்கும் கர்ப்பிணிகளின் மன அழுத்தம் : செய்ய வேண்டியவை என்ன..?

கருவை பாதிக்கும் கர்ப்பிணிகளின் மன அழுத்தம் : செய்ய வேண்டியவை என்ன..?

கருவை பாதிக்கும் கர்ப்பிணிகளின் மன அழுத்தம்

கருவை பாதிக்கும் கர்ப்பிணிகளின் மன அழுத்தம்

Stress during pregnancy : தீவிரமான மன உளைச்சல் அல்லது ஸ்ட்ரெஸ் உள்ள பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் சாத்தியமுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ஒரு பெண், கர்ப்பம் செய்த நொடி முதல் பல்வேறு உடல்ரீதியான, உணர்ச்சிபூர்வமான மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். கர்ப்பமாக இருப்பது, குழந்தை பிறப்பு, வளர்ப்பு என்று எல்லாமே மிகவும் உற்சாகமாகவே இருக்கும். அதே நேரத்தில், எது சரி, எது தவறு என்ற படபடப்பு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி உடலில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்த்து ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் அவ்வப்போது மன ரீதியான மாற்றங்கள் உண்டாகும்.

கருவில் குழந்தை சரியாக வளர்ச்சி அடைதுள்ளதா? என்ற தவிப்பு, உணவு ஒவ்வாமை, மசக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கர்ப்பிணி பெண்களை வாட்டி எடுக்கும். போதாத குறைக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு, அனைவரும் அவர்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் ஆலோசனையாக கூறுவார்கள். எதை பின்பற்றுவது யார் சொல்வதை கேட்பது என்பதை ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும்.

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் அது உடல் ரீதியாக கர்ப்பிணி பெண்ணை மட்டுமல்லாமல் வயிற்றில் வளரும் சிசுவையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்த பிறகு Post Pregnancy Stress Disorder என்ற பிரச்சனையையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெஸ் எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ப்ரீஈக்லாம்ப்சியா: கர்ப்பிணி பெண்கள் மட்டுமன்றி பெரும்பாலானவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அதிக உயர் ரத்த அழுத்தம் காணப்படும். கர்ப்பிணிகளில் இந்த ஹை பிளட் பிரஷர், ப்ரீ-ஈக்லாம்ப்சியா என்ற நிலையை உண்டாக்குகிறது. பிரசவ சமயத்தில் அல்லது மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் டெலிவரி நேரத்தில் பெரிய சிக்கலை உண்டாக்கும். சில நேரங்களில் இது கர்ப்பிணி பெண் மற்றும் சிசுவின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

கருச்சிதைவு: கரு உண்டாகி சில நாட்களிலேயே கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு ஏற்படுவது உடல் மற்றும் மன ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் வாழ்வில் நெகட்டிவான அனுபவங்களால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் பொழுது அதனால் ஏற்படும் கருச்சிதைவு விகிதம் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. மன அழுத்தம் ஏற்படும் போது, உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியமான ஹார்மோன்கள் உற்பத்தியையும் தடுக்கிறது. இதனால் தீவிரமான மன உளைச்சலுக்கு பெண்கள் உள்ளாகிறார்கள். அதுமட்டுமின்றி கருச்சிதைவும் ஏற்படுகிறது.

தாய்மார்களே உஷார்... குழந்தையை குப்புற படுக்க வைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..

குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தை: தீவிரமான மன உளைச்சல் அல்லது ஸ்ட்ரெஸ் உள்ள பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் சாத்தியமுள்ளது. ப்ரீ-டெர்ம் தேல்வியாரி என்று கூறப்படும் கர்ப்ப காலம் முழுவதும் நிறைவு பெறாமலேயே குழந்தைகள் பிறக்கும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகள் முழுவதுமாக வளர்ச்சி அடையாமல் பிறந்த பிறகு சில வாரங்கள் வரை தீவிரமான மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்படும். பிறக்கும் போது குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தும் காணப்படுகிறது.

பிறக்கும் குழந்தைக்கு மூளை குறைபாடு: கர்ப்ப காலத்தில் பெண்கள் நீண்டகால மன அழுத்தத்தை எதிர்கொண்டால், அந்த பெண்ணினுடைய ஹார்மோன், நரம்பு மண்டலம், வாஸ்குலார் செல்கள் அமைப்பை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு தெரிவிக்கின்றது. இதை தவிர்த்து சமீப காலமாக அதிக குழந்தைகளை பாதித்து வரும் ADHD எனப்படும் மூளைக் குறைப்பாடு கொண்ட குழந்தைகள் பிறப்பது அதிக மன அழுத்தம் ஏற்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு காணப்படுகிறது என்ற அச்சுறுத்தக்கூடிய ஒரு முடிவையும் ஆய்வு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள் மற்றும் புதிய அம்மாக்களுக்கு மன அழுத்தம் இதனால்தான் ஏற்படுகிறதாம்..! ஆய்வில் தகவல்

கார்பிணிகள் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் அனைத்துமே தற்காலிகமானவை தான். அது மட்டுமின்றி கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகள் பிடிக்காமல் போகலாம்; ஹார்மோன் மாற்றங்கள் அசௌகரியமாக உங்களை உணரச் செய்யலாம்; ஆனால் இவை அனைத்துமே தற்காலிகமானவை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவு மற்றும் போதிய ஓய்வும் உறக்கமும் மிகவும் அவசியம். முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து மிதமான உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். மாதாந்திர மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் சத்து மாத்திரைகளையும் தவறாமல் சாப்பிட வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Stress