Home /News /lifestyle /

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவு கொள்வது ஆபத்தா..! அதிர்ச்சியூட்டும் செய்தி...

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவு கொள்வது ஆபத்தா..! அதிர்ச்சியூட்டும் செய்தி...

மாரடைப்புக்கான ஆபத்து காரணியாக உடலுறவு

மாரடைப்புக்கான ஆபத்து காரணியாக உடலுறவு

மார்பு வலி, மூச்சுத் திணறல், சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் குமட்டல் அல்லது அஜீரணம் போன்ற அறிகுறிகள் இருந்தால் பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

மனித இதயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல ஆபத்து காரணிகள் உள்ளன. மாரடைப்பு காரணமாக தற்போது அதிக இளம் உயிர்கள் பலியாவது தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கான பிரச்னையாகக் காணப்பட்ட இந்நோய், காட்டுத் தீயாக இளைய சமுதாயத்தினரிடையே பெருமளவில் பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய நோய்களால் இறக்கும்1.8 மில்லியன் உயிர்களில் கணிசமானது அகால மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையாகும். இதில் பலர் 70 வயதிற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள்.

மனித இதயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல ஆபத்தான காரணிகள் உள்ளன. இந்த காரணிகளில் சில கவனிக்கத்தக்கவை. மேலும் சில பொதுவாக நம் அன்றாட வாழ்வில் வேரூன்றியுள்ளதன் காரணமாக அவற்றை இனம் காணுவதில் தாமதம் ஏற்படும். அது வரை அவற்றின் தாக்கங்களை நாம் காண மாட்டோம்.

02. மாரடைப்புக்கான ஆபத்து காரணியாக உடலுறவு

சமீபத்தில், 28 வயது இளைஞர் உடலுறவு கொள்ளும்போது மாரடைப்பால் மரணமடைந்தார். நாக்பூரைச் சேர்ந்த அஜய் பார்டேகி என்பவர் தனது காதலியுடன் லாட்ஜில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்., பார்டேகி ஓட்டுநராகவும், வெல்டிங் டெக்னீஷியனாகவும் பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக பார்டெகிக்கு காய்ச்சல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலுறவின் போது அவர் படுக்கையில் சரிந்தார். இதுவரை, இதய பிரச்னைக்கான மருந்தையோ அல்லது போதைப்பொருளையோ உட்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர்.03. இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு உடலுறவு ஆபத்தானதா?

கரோனரி தமனி நோய்க்கு (coronary artery disease) சிகிச்சை அளிக்காவிட்டால் அது உடலுறவின் போது ஆபத்தானதாக மாறும். கரோனரி தமனி நோbய் இந்த நாட்களில் இளைஞர்களிடையே பொதுவாகக் காணப்படுகிறது.

எச்சரிக்கை... 8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் இதய நோய்க்கான அபாயம் அதிகம்..!

செக்ஸ் போன்ற அதிக தீவிரம் கொண்ட செயல்பாட்டின் போது இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் இரத்தம் தேவைப்படுகிறது. ஒருவருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், உடலுறவின் போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் என்பது மேலும் ஆபத்தானது. நோயாளி வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் இருந்தால், திடீரென மாரடைப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக தான், 20 வயதிலிருந்தே வழக்கமான உடல் பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

04.உடலுறவு மற்றும் இதய நோய் பற்றி மற்ற நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதய நோய் தடுப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சிக்காரோன் மையத்தின் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் மைக்கேல் பிளாஹாவின் கருத்துப்படி, மார்பு வலி, மூச்சுத் திணறல், சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் குமட்டல் அல்லது அஜீரணம் போன்ற அறிகுறிகள் இருந்தால் பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.இருப்பினும், இந்த அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் இல்லாதவரை பயப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், நீங்கள் ஜாகிங் அல்லது படிக்கட்டுகளில் சிரமமின்றி நடக்க முடிந்தால், உடலுறவு கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

05.உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு விகிதம் என்ன?

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களால் 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாலியல் செயல்பாடு சிலருக்கு மாரடைப்பைத் தூண்டும், குறிப்பாக ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.

அதிக நேரம் தூங்குவோருக்கு காத்திருக்கு அபாயம்... இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

ஆனால் உண்மையில் மொத்த மாரடைப்பு நிகழ்வுகளில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான காரணியாகவே உடலுறவு உள்ளது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவது மிகவும் குறைவு என்று பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

JAMA இருதயத்துறையால் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், 1994 மற்றும் 2020 க்கு இடையில் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மொத்த திடீர் இதய இறப்புகளில் 0.2% மரணங்களுக்கு மட்டுமே உடலுறவு காரணமாக இருந்தது. அப்படி என்றால், 1000 திடீர் மாரடைப்பு நிகழ்வுகளில், 2 மரணங்கள் மட்டுமே உடலுறவுடன் தொடர்புடையவை. இந்த 0.2% மரணம் நடுத்தர வயது ஆண்களையும் உள்ளடக்கியது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், உடற்பயிற்சி மற்றும் உடலுறவு உட்பட பல்வேறு சூழ்நிலைகளில் திடீர் இதய மரணம் ஏற்படலாம் என்றும் இந்த ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.07.மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன?

மாரடைப்பின் பொதுவான அறிகுறிகள்:

நெஞ்சு வலி

மார்பில் ஏற்படும் நாள்பட்ட அசவுகரியமான உணர்வு

கழுத்து, தாடை மற்றும் கைகளில் வலி

மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம்

குமட்டல்

குளிர்ந்த வியர்வை

“நமக்கு அஜீரணம் தானே“ என அலட்சியமாக இருக்காதீங்க... அது மாரடைப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம்

07. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு உடலுறவு உண்மையில் இதயத்திற்கு நல்லது

உடலுறவால் ஏற்படும் ஆரோக்கியமான நன்மைகளை நிரூபித்த பல ஆய்வுகள் உள்ளன. உடற்பயிற்சி செய்யும் அதே நன்மைகளை ஒரு மனித உடலுக்கு உடலுறவு வழங்குகிறது. இது இதயத் துடிப்பை மேம்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தையும்மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் உடலுறவு பலருக்கு தூக்கத்தை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் தினசரி மேற்கொள்ளப்படும் உடலுறவால் களையப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart attack, Sex

அடுத்த செய்தி