ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமா..? உண்மை என்ன..?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமா..? உண்மை என்ன..?

கர்ப்ப காலத்தில் செக்ஸ்

கர்ப்ப காலத்தில் செக்ஸ்

கர்ப்ப காலத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டால், கருவில் வளரும் குழந்தையின் நலனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ அல்லது கருச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுவாக எழுந்துவிடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருமணம் நடைபெற்ற புதிதில் ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் குதூகலமாக அடியெடுத்து வைக்கின்றனர். அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் பெண் கர்ப்பம் அடைந்ததும், தம்பதியருக்குள் இனம் புரியாத குழப்பங்களும், சந்தேகங்களும் எழுந்து விடும். இனி மனதின் ஆசைக்கும், உடல் தேவைக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமா என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்துவிடும். அதாவது கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு கொள்ளலாமா, அது சரியா, தவறா என்ற பலத்த சந்தேகம் மனதிற்குள் எழுந்துவிடும்.

குறிப்பாக, கர்ப்ப காலத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டால், கருவில் வளரும் குழந்தையின் நலனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ அல்லது கருச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுவாக எழுந்துவிடுகிறது. இதனால், குழந்தை பெற்றெடுக்கும் வரையில் பாலியல் உறவை முற்றிலுமாக தவிர்க்கக் கூடிய தம்பதியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.

இந்த சந்தேகத்தை வெளிப்படையாக மற்றவர்களிடம் கேட்டு தெளிவு பெற தயக்கம் இருக்கும். இதனால், மனதுக்குள் பூட்டி வைத்து விடுவார்கள். சில சமயம், மனக் கட்டுப்பாட்டை மீறி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் ஏற்படும் சமயத்தில் கூட, மனம் நிறைய அச்சத்துடன் அதை செய்வார்கள். ஆனால், உண்மையில் இது நல்லதா, கெட்டதா என்பதை இந்தச் செய்தி விவரிக்கிறது.

கர்ப்ப காலத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது பாதுகாப்பானதா..?

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது நிச்சயமாக பாதுகாப்பானது தான். குறிப்பாக, போதிய கால இடைவெளியில் நீங்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது நல்லது. இதனால், குழந்தையின் வளர்ச்சிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. பெண்களின் கர்ப்பப்பை பலமான சுவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது குழந்தைக்கான பாதுகாப்பு அரணாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவை தவிர்ப்பதைக் காட்டிலும், செக்ஸ் உறவை தொடருவதன் மூலமாக சில நன்மைகளும் கிடைக்கும். அதே சமயம், நீண்ட கால போராட்டங்களுக்கு மத்தியில் அல்லது நீண்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு உங்கள் மனைவி கர்ப்பம் அடைந்தவர் என்றால், இதுதொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து விடுங்கள்.

கர்ப்பிணிகளுக்கான அலர்ட் பதிவு… மருத்துவரிடம் மறைக்கக்கூடாத 5 விஷயங்கள்..!

செக்ஸ் உறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமா..?

கருவில் குழந்தையின் வளர்ச்சி சீராக இல்லை என்றால் மட்டுமே கருச்சிதைவு ஏற்படும். மாறாக, உங்கள் கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதால் ஒருபோதும் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படாது. அதே சமயம், மருத்துவ சிகிச்சைகள் அடிப்படையில் கர்ப்பம் அடைந்திருந்தால் செக்ஸ் உறவை தவிர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இது போல கர்ப்பம் அடைந்த பெண்கள், செக்ஸ் உறவின் போது உச்சகட்டம் அடைந்தால், அதன் எதிரொலியாக குறைப்பிரசவம் ஏற்படக் கூடும்.

சௌகரியமான பொசிஷன் கடைப்பிடிப்பது நல்லது..?

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றவுடன் உங்கள் மனம் விரும்பியபடி, சாதாரண நாட்கள் போல அதைச் செய்துவிட முடியாது. கர்ப்ப காலத்தில், பெண்ணுக்கு உடல் சௌகரியத்தை கொடுக்கும் பொசிஷன் கடைப்பிடிப்பது மிக அவசியம். குறிப்பாக, அவரசம் இன்றி இருவருமே நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Pregnancy Miscarriage, Sex