மவுத்வாஷ் மூலம் கொரோனா வைரஸை கொல்ல முடியுமா? விஞ்ஞானிகள் கூறும் கருத்து!

வைரஸ் எண்ணிக்கையைக் குறைக்க சிபிசி அடிப்படையிலான மவுத்வாஷ் தயாரிப்புகள் உதவியாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மவுத்வாஷ் மூலம் கொரோனா வைரஸை கொல்ல முடியுமா? விஞ்ஞானிகள் கூறும் கருத்து!
மாதிரி படம்
  • Share this:
பல மாதங்களாக உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளன. இந்த கொடிய வைரஸை கொல்ல, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் மற்றும் அதன் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி செய்யும் பணியில், தடுப்பூசி என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு வாழ்க்கை குறிக்கோளாகவே மாறியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், கொரோனா வைரஸைக் கொல்ல மவுத்வாஷ் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 30 வினாடிகளில் என்பது கவனிக்கத்தத்தக்கது. இந்த சோதனைகளை நடத்திய கார்டிஃப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வாய் கழுவும் தயாரிப்புகள் கொரோனா வைரஸைக் கொல்ல உதவும் என்று கண்டறிந்துள்ளனர். சோதனையில் பங்கெடுத்த சிறப்பு பீரியண்டாலஜிஸ்ட் டாக்டர் நிக் கிளேடன் என்பவர் ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கினார்.

அவர் கூறியதாவது உமிழ்நீரில் உள்ள வைரஸைக் கொல்வதில் மவுத்வாஷ் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான ஆரம்ப அறிகுறிகளை ஆய்வு காட்டியுள்ளது என்று கூறினார்.


ஆனால் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க மவுத்வாஷ் பயன்படுத்தப்படலாம் என்பதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் மவுத்வாஷ் மூலம் வியில் நுழையும் வைரஸ் கொல்லப்படுவதால், அவற்றால் அதிகம் பாதிக்கப்பட கூடிய நுரையீரல் அல்லது சுவாசப் பகுதியை அடைய முடியாது என்று தெரிவித்துள்ளார். மவுத்வாஷ்களில் குறைந்தது 0.07% செடிபைரிடினியம் குளோரைடு (சிபிசி) இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு ஆய்வகம் போன்ற குறிப்பிட்ட நிலைமைகளில் வைக்கப்படும் போது வைரஸை ஒழிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

கொரோனா தொற்றுநோயை விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும் காலநிலை மாற்றம்..

இருப்பினும், கொரோனா வைரஸுக்கு முறையான சிகிச்சையாக மவுத்வாஷ் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விஞ்ஞானிகள் இன்னும் தெளிவாக கண்டறியவில்லை. மற்றொரு ஆய்வில், வைரஸ் எண்ணிக்கையைக் குறைக்க சிபிசி அடிப்படையிலான மவுத்வாஷ் தயாரிப்புகள் உதவியாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து அதிகமான ஆய்வுகள் தேவை என்று கூறி, மவுத்வாஷ் கூற்றுக்களை ஆய்வு செய்வதை நிறுத்தியுள்ளனர்.

மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் வைரஸ் பரவுவதைப் படிக்கும் மற்றொரு விஞ்ஞானி டொனால்ட் மில்டன் தெரிவித்ததாவது, உங்கள் வாயில் ஒரு மவுத்வாஷ் வைரஸைக் கொல்ல முடியும் என்றாலும், உங்கள் மூக்கு, நுரையீரல் காற்றுப்பாதை, நுரையீரலில் பரவும் வைரஸை ஒரு மவுத்வாஷால் கொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் கிரஹாம் ஸ்னைடர் கூறியதாவது, ஒரு வைரஸைத் தொடர்பு கொண்ட பின்னர் அதைக் கொல்வதற்கு மவுத்வாஷ் உதவியாக இருந்த போதிலும், வைரஸ் பரவுவதை முழுமையாக நிறுத்த முடியாது என்பதற்கான பல விஷயங்கள் இருப்பதாகக் கூறினார். பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்கள் பிரிவில் இணை பேராசிரியராக இருக்கும் ஸ்னைடர், ஆல்கஹால், குளோரெக்சிடைன், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற பொருட்களால் சிறிது நேரத்திற்குப் வைரஸ்களைக் கொல்ல முடிந்தாலும், அவற்றால் எந்த வகையிலும் வைரஸ் பரவுவதை நிறுத்த முடியும் என்பதை உறுதி பட தெரிவிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.அதே சமயம் கார்டிஃப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்ற ஆராய்ச்சியாளர்களால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. எனவே அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கொரோனா வைரஸுக்கு சரியான சிகிச்சையாக கருதப்படக்கூடாது என பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிக்கை ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட உள்ளது. அதில், வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறைகளைத் தொடருமாறு விஞ்ஞானிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading