ரஞ்சனியும் அவருடைய தாயும் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். ரஞ்சனி முகத்தில் ஏராளமான குழப்ப ரேகைகள்.
"டாக்டர்!! என்னுடைய சகோதரி பி நெகட்டிவ் வகை , அவர் கணவருக்கு பாசிட்டிவ் வகை ரத்தம். சகோதரிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை இல்லை.
என் சகோதரிக்கும், அவர் கணவருக்கும் பாசிட்டிவ் ,நெகட்டிவ் வகை ரத்தம் மாறி இருப்பதால் தான் குழந்தை பிறப்பதில் பிரச்சினையா ???. "
"என்னுடைய ரத்த வகையும் பி நெகட்டிவ் தான். எனக்கு மிகவும் குழப்பமாகவும் கவலையாகவும் இருக்கிறது" என்றார்.
இந்த ரத்த குரூப் மற்றும் Rh பற்றி சில விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ரத்த குரூப்களில் A,B,AB,O என்ற நான்கு வகை ரத்த குரூப். உண்டு. Rh வகைகளில் இரண்டு- ஆர்எச் பாசிட்டிவ் ஆர்எச் நெகட்டிவ்
பொதுவாக மக்களில் 85% பாசிட்டிவ் வகை, 15% நெகட்டிவ் வகை ரத்தம் இருக்கும்.
ஒரு கணவன் மனைவிக்கு ரத்த குரூப் மாறுவதால் , பாசிட்டிவ் நெகட்டிவ் மாறுவதால், குழந்தை உருவாவதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்கக் கூடாது.
ஆனால் கர்ப்பம் ஆன பிறகு சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கணவன் மனைவி இருவரும் நெகடிவ் ஆக இருக்கும்போது குழந்தை பெரும்பாலும் நெகட்டிவ் ஆகவே பிறக்கும். ஆனால் தாய் நெகட்டிவ், தந்தை பாசிட்டிவ் என்றால் உருவாகும் குழந்தை 75% பாசிடிவ் வகை ரத்தத்தை கொண்டிருக்கும்.
நெகட்டிவ் வகை ரத்தத்தை கொண்டிருக்கும் தாய்க்கு, கருச்சிதைவு ஆனாலோ அல்லது பிரசவ சமயத்திலோ தாய் மற்றும் குழந்தையின் இரத்தம் கலப்பதற்கு வாய்ப்பிருக்கும்.
ICT என்ற ரத்தப்பரிசோதனையை செய்வதன் மூலம் இதை அறிந்து கொள்ளலாம்.
பெண்குயின் கார்னர் 4 : ஓவரியில் ஆபரேஷன் செய்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? மருத்துவரின் விளக்கம்
கலந்தால் சிலசமயங்களில் குழந்தைக்கு பிரச்சினைகள் உருவாகலாம் . முதல் குழந்தைக்கு பிரச்சினை இல்லை என்றாலும் இரண்டாவது குழந்தைக்கு பிரச்சினை உருவாகலாம்.
தாய் நெகட்டிவாக குழந்தை பாசிட்டிவ் ஆக இருந்தால் Anti D என்ற ஊசியை போடுவதன் மூலம் அவ்வாறு பிரச்சினைகள் உருவாவதை தடுக்கலாம்.
ரஞ்சனியின் முகத்தில் தெளிவைப் பார்க்கமுடிந்தது . "நன்றாக புரிந்தது டாக்டர்!!" என்னுடைய சகோதரியையும் அவள் கணவரையும் இங்கு கூட்டி வருகிறேன். உங்களை சந்தித்தால் கட்டாயம் அவர்கள் மனதில் நம்பிக்கை பிறக்கும் " என்றார்.
இறைவனுக்கு நன்றி கூறி என்னுடைய பணியைத் தொடர்ந்தேன்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.