30 நாட்களில் எடையைக் குறைக்கலாமா?

உங்கள் உணவுப் பழக்கம் மாறி உணவின் மீதான புரிதலால் அனுபவித்து உண்ணத் துவக்குவீர்கள்.

30 நாட்களில் எடையைக் குறைக்கலாமா?
உங்கள் உணவுப் பழக்கம் மாறி உணவின் மீதான புரிதலால் அனுபவித்து உண்ணத் துவக்குவீர்கள்.
  • News18
  • Last Updated: January 18, 2019, 9:43 AM IST
  • Share this:
எடையைக் குறைக்க பல டயட் பிளான்கள் வரும் அதேசமயத்தில்தான் பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது என்கிற செய்தியையும் படிக்கக் நேரிடுகிறது. இந்த அளவிற்குத்தான் நம்ம ஊர் மக்கள் டயட்டைப் பின்பற்றுகின்றனர். அதுவும் 10 அல்லது 20 நாட்களிலேயே அந்த டயட் கட்டுப்பாடுகளும் காணாமல் போய்விடும். அவர்களுக்காகவே   உருவாக்கப்பட்டதுதான் இந்த ஹோல் 30 டயட்.

 
ஹோல் 30 டயட் என்றால் என்ன?

இந்த ஹோல்30 டயட்டை மெலிஸ்ஸா ஹாட்விக் என்பவர்தான் உருவாக்கினார். ஆரோக்கியமற்ற கொழுப்புகளை நீக்கி உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதுதான் இந்த டயட்டின் முக்கிய நோக்கம். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

எவ்வாறு இந்த டயட்டை பின்பற்ற வேண்டும்?உங்கள் உடலின் ஆற்றல் குறைவு, தோல் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள், உடல் அசதி, உடல் சோர்வு போன்ற காரணங்கள்  இருக்கின்றன என்றால் அதற்கு நீங்கள் உண்ணும் உணவுகளே காரணம் என்கிறது இந்த டயட்.

அது ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவே  இருக்கும் என்கிறது. அதேபோல் பலமணி நேர உடற்பயிற்சி செய்தும்  எடைக் குறைந்தபாடில்லை என்ற புலம்பல்களுக்குக் காரணமும் நீங்கள் உண்ணும் உணவுகள்தான் என்கிறது.

ஆகவே நீங்கள் இதுவரை பின்பற்றி வந்த எல்லா உணவுகளையும் நிறுத்த வேண்டும். உளவியல் ரீதியாக ஆரோக்கியமற்ற உணவுகள், சீரற்ற ஹார்மோன்களை உண்டாக்கும் உணவுகள், வயிற்றுக்கு எரிச்சலை உண்டாக்கக் கூடிய உணவுகள் என இப்படி இதுவரை நீங்கள் பின்பற்றி வந்த எல்லாவகையான உணவுகளையும் 30 நாட்களுக்கு உண்ணாதீர்கள்.

இதனால்  அந்த உணவுகளால் அடைந்த பாதிப்புகளிலிருந்து உங்கள் உடலை மீட்டெடுக்க முயற்சி செய்யும்.உண்ணக் கூடாத உணவுகள்

சர்க்கரை, உப்பு, பாலிலிருந்து கிடைக்கக் கூடிய நெய், சீஸ் பட்டர் போன்ற பொருட்கள், தானிய வகைகள், பருப்பு வகைகள் ஆகிய உணவுகள் நம் உடலுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

டெசர்ட் மற்றும் பிரெட் வகை உணவுகள், ஆல்கஹால் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இவற்றை உண்பதால் எந்தவிதத்திலும் உடல் எடைக் குறையாது. மாறுதலாக எடையை அதிகரிக்கவே செய்கின்றன. எனவே இந்த டயட்டில் இதுபோன்ற உணவுகளை முறிலுமாக  தவிர்க்க வேண்டும்.எந்த மாதிரியான உணவுகளை உண்ணலாம்

30 நாட்களுக்குப் பின் உங்கள் வளர்சிதையில் மாற்றத்தைக் கொண்டு வரும் உணவுகள், ஜீரண சக்தியைத் தூண்டும் உணவுகள், உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் என தேர்வு செய்து கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்குங்கள்.

உதாரணமாக இறைச்சி, முட்டை, பழவகைகள், கடல்சார் உணவுகள் போன்ற உணவுகளை உண்ணலாம்.  இதனால் எந்தெந்த உணவுகள் உங்கள் உடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர முடியும். இப்படி ஒவ்வொரு உணவாக உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளும் உணவுகளை மட்டும் உண்ணத் தொடங்குங்கள்.

உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். இந்த டயட்டில் இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்கிறக் கட்டுபாடு கிடையாது. அது எத்தனைக் கலோரிகள் கொண்டது என்கிற கவலையும் தேவையில்லை. விருப்பம்போல் உண்ணலாம்.பலன் எவ்வாறு இருக்கும்?

இந்த டயட்டை சரியான முறையில் பின்பற்றினால் , உணவு குறித்த உங்கள் பார்வையே முற்றிலும் மாறிவிடும். உணவின் சுவை அறிந்து, அரோக்கியம் அறிந்து உண்ணத் தொடங்குவீர்கள். உங்கள் உணவுப் பழக்கம் மாறி உணவின் மீதான புரிதலால் அனுபவித்து உண்ணத் துவக்குவீர்கள்.

இந்த டயட்டை பின்பற்றிவர்களில்  95% பேர் நல்ல பலனைப் பெற்றிருப்தாகக் கூறியுள்ளனர். அவர்களின் எடையிலும் நல்ல மாற்றத்தைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும், நல்ல தூக்கம் வரும், கவனச் சிதறல்களின்றி தெளிவான சிந்தனைகள் வளரும். மனதளவில் மகிழ்ச்சி பிறக்கும் என்கிறது இந்த டயட்.

இந்த டயட்டைப் பின்பற்றிய பலரும் அதிகளவிலான எடைக் குறைந்திருப்பதாகவும், ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்ததிலேயே அதிக அளவிலான எடைக் குறைந்ததை உணர முடிகிறது எனக் கூறியுள்ளனர்.

யாரெல்லாம் இந்த டயட்டை பின்பற்றலாம்.

இந்த டயட்டை எல்லோருமே பின்பற்றலாம். இருப்பினும் உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்தபின் இந்த டயட்டைப் பின்பற்றுங்கள்.   உயர் இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, அதிக கொழுப்புச் சத்து, மன அழுத்தம், நெஞ்சு எரிச்சல் என தினசரி நோயால் அவதிப்படும் பலருக்கும் இந்த ஹோல்30 டயட் பொருந்தும். அவர்கள் இந்த டயட்டைப் பின் பற்றினால் எல்லா நோய்களும் பறந்துபோகும்.

Also See..

First published: January 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்