உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பலவிதமான உணவுப் பழக்கங்களை, உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை முயற்சி செய்து வருகிறார்கள். தீவிரமான டயட் கட்டுப்பாடு அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பது என்று பலவிதமான எடை குறைக்க உதவும் டயட்கள் காணப்படுகின்றன. முக்கியமாக, லிக்விட் டயட் எனப்படும் திரவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவும் என்று பலரும் நம்புகின்றனர்.
திட உணவுகள் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடும் என்பதால், திரவ உணவுகளான ஜூஸ், ஸ்மூதி, சூப், ஆகியவை எடை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால். உண்மையிலேயே திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தால் எடை குறையுமா? ஊட்டச்சத்து நிபுணர் ருச்சி ஷர்மா திரவ உணவு டயட்டைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தன்னிடம் வெயிட் லாஸ் ஆலோசனை பெற வந்த ஒரு கிளையன்ட், வழக்கமாக சாப்பிடும் உணவுகள் உடல் எடையை அதிகரிக்கிறது என்பதால் ஜூஸ் மற்றும் ஷேக்குகள் போன்ற திரவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருவதாகக் கூறினார் என்று ருச்சி தெரிவித்தார். ஒரே வாரத்திலேயே அவர் உடலில் எதிர்பாராவிதமாக எதிர்மறையான மாற்றங்கள் உண்டாகியது. ஆற்றல் குறைவாகவும், எரிச்சலூட்டும் மனநிலையிலும், நாள் முழுவதும் அசௌகரியமாக உணர்ந்ததாகவும், எந்த உணவை எங்கு பார்த்தாலும் உடனே எடுத்து சாப்பிடத் தோன்றும் அதீத மனநிலை மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
திரவ உணவு டயட் எடை குறைப்பதில் உதவவில்லை, மாறாக சில நாட்களுக்குப் பின் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்ற முடியாமல் அதிக உணவுகளை சாப்பிடத் தொடங்கி எடை அதிகரித்துள்ளது என்று ருச்சி தெரிவித்தார்.
திட உணவுகளில் அதிக கலோரிகள் நிறைந்தவை. ஆனால் திரவ உணவுகளில் கலோரிகள் கிடையாது என்பது பொய்யான தகவல். லிக்விட் உணவுகளிலும் கலோரிகள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி நீங்கள் எந்த வகையான பானங்களை உணவாக எடுத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்து நீங்கள் வழக்கத்தைவிட அதிகமான கலோரிகளை உட் கொள்ளக் கூடிய அபாயமும் உள்ளன.
எனவே இந்தக் கூடுதல் கலோரிகள் உங்கள் எடையை அதிகரிக்கும். மேலும், திரவ உணவுகள் நீங்கள் திருப்தியாக சாப்பிட்ட அல்லது வயிறு நிறைந்த உணர்வைத் தராது. வெகுவிரைவிலேயே உங்களுக்கு மீண்டும் பசிக்க தொடங்கலாம். எனவே, முழுக்க முழுக்க திரவ உணவுகளை மட்டும் நீங்கள் சாப்பிட போகிறீர்கள் என்றால், அது உங்கள் ஆரோக்கியத்தை பலவிதங்களில் பாதிக்கக்கூடும்.
வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா..? உணவு மூலம் குறைக்க டிப்ஸ்
பழங்களை விட பழச்சாறுகளில் அதிக கலோரிகள்
பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடுவது அதிக பலனளிக்கும். பழங்களில் உள்ள நார்சத்தும், நுண்ஊட்டச்சத்துகளும் தண்ணீரில் கரைகிறது. இரண்டு ஆரஞ்சு பழங்களில் 100 கலோரிகள் வரை தான் இருக்கும். ஆனால் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் 200 கலோரிகள் வரை இருக்கலாம். இரண்டு பழங்களை சாப்பிடும் பொழுது வயிறு நிறைந்துள்ளதாக உணர்வீர்கள். ஆனால் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸை குடித்தாலும் உங்களுக்கு அந்த நிறைவு ஏற்படாது. எனவே அதிகமான உணவுகளை சாப்பிட நேரிடும். இதனால் கூடுதல் கலோரிகள் உங்கள் எடையை அதிகரிக்கும்.
எடையைக் குறைக்க ஆரோக்கியமான திரவ உணவுகளை எப்படி டயட்டில் சேர்ப்பது
எடை அதிகரிக்கும் சாத்தியம் கொண்டவர்கள் அல்லது ஊட்டச்சத்து அல்லது வளர்ச்சிக்காக அதிக கலோரிகளை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள், தங்களுடைய உணவில் ஒரு பகுதியாக திரவங்களை சேர்க்கலாம். வெஜிடபிள் ஜூஸ் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த அடிப்படையில் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காய்கறி சூப்புகளையும் சாப்பிடலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த முழு உணவுகளையும், நிறைய காய்கறிகளையும் சேர்ப்பது தான் எடை குறைப்பின் முதல் படியாகும். அதே போல, புரோட்டின் ஷேக்குகள் எடை குறைப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஷேக்குகளைத் தவிர்த்து புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது எடை குறைக்க உதவும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை சீர் செய்யும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.