மாதவிடாய் சீராக இருக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை சீராக இருக்கிறது என்று நிபுணர்களால் குறிப்பிடப்படும் வேளையில், ஒழுங்கற்ற மாதவிடாய் சிக்கலை கொண்ட பெண்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே இருக்கிறது மற்றும் கவலையை ஏற்படுத்துகிறது. பிசிஓஎஸ், மன அழுத்தம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய அபாயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய் பெண்களின் உடல் செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி ஒழுங்கான மாதவிடாய் சுழற்சியை கொண்ட பெண்களை விட, ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கு இதய ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகம். PCOS மற்றும் PCOD சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சமீப காலமாக 12 - 40 வயதுடைய 8 பெண்களில் ஒருவரை பாதிக்கும் முக்கிய கோளாறாக இருந்து வருகிறது PCOS.
தவறான வாழ்க்கை முறைகளால் ஏற்படும் இந்த நிலை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், உடல் எடை அதிகரிப்பு, சீரற்ற மாதவிடாய், இனப்பெருக்க பிரச்சினைகள் மற்றும் வளர்சிதை மாற்ற வேறுபாடுகள் என பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. PCOS பற்றிய போதுமான புரிதல் இல்லாதது, நோயை தாமதமாக கண்டறிவது உள்ளிட்டவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது. குறிப்பாக ஆபத்து காரணிகளை புறக்கணிப்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்க கூடும்.
பிசிஓஎஸ், சீரற்ற மாதவிடாய் மற்றும் இதய ஆரோக்கியம் உள்ளிட்டவற்றுக்கு என்ன தொடர்பு?
ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பல பெண்களில் பிசிஓஎஸ் காணப்படுகிறது. பெண் உடலில் அதிக அளவு ஆண் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன்) இருப்பது, இன்சுலின் எதிர்ப்புடன் சேர்ந்து கொலஸ்ட்ரால், லிப்பிட் ப்ரொஃபைல்ஸ் உள்ளிட்டவற்றை அதிகரிக்கலாம். இதன் மூலம் PCOS அல்லது மாதவிடாய் சுழற்சியில் சிக்கல்கள் உள்ள பெண்களுக்கு இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே போல சீரான மாதவிடாய் உள்ள பெண்களை ஒப்பிடும் போது PCOS கொண்ட பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக 28% அதிக இதய கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன. இதய ஆரோக்கியத்தில் PCOS அபாயத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணங்களில் அது ஏற்படுத்தும் அறிகுறிகள் மற்றும் பக்க விளைவுகள் உள்ளன.
மேலும் PCOS-ஆல் பாதிக்கப்படும் பெண்கள் முக்கியமாக உடல் பருமன் பிரச்சனைகளை எதிர்கொள்கிறர்கள். அவர்களது உடல் எடையும் அவ்வளவு எளிதில் குறையாது. இதனால் அவர்களின் பிஎம்ஐ அளவுகள் அதிகமாக காணப்படுகிறது. அதிகரித்த பிஎம்ஐ மற்றும் உடல்பருமன் தமனிகளில் கொழுப்பு சேர வழிவகுக்கும். இதன் காரணமாக பிற்காலத்தில் இதய கோளாறு அல்லது மாரடைப்பு ஏற்படலாம்.
PCOS-ற்கு மருத்துவ சிகிச்சை இல்லை என்றாலும் இதன் அறிகுறிகளை திறம்பட நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் சிறந்த வழி சரியான வாழ்க்கை முறை மாற்றங்களே. எடை குறைப்பு மற்றும் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற பிஎம்ஐ அளவை பராமரிப்பதை நோக்கி நகர்ந்தாலே PCOS-ஐ திறம்பட கட்டுப்படுத்தி கொள்ள முடியும்.
* ஆரோக்கியமான உணவு, பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
* ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து பேக்கேஜ் மற்றும் கெமிக்கல்ஸ் கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பெண்களும்… மார்பக புற்றுநோயும்… மார்பக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்..!
* குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 நாட்கள் தவறாமல் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம்.
* மனஅழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபடலாம்.
* இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடலாம்
* இடையூறு இல்லாத 7 - 8 மணி நேர தூக்கம் அவசியம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart disease, Irregular periods, PCOS