முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / திருமணத்திற்கு பின் மாதவிடாய் அடிக்கடி தள்ளிப்போவது ஆபத்தா..? கரு நிற்பதில் சிக்கல் வருமா?

திருமணத்திற்கு பின் மாதவிடாய் அடிக்கடி தள்ளிப்போவது ஆபத்தா..? கரு நிற்பதில் சிக்கல் வருமா?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் : புதிதாய் திருமணம் ஆன பெண்களுக்கு, ஏராளமான சவால்கள் இருக்கும் . புதிய மனிதர்கள், புதிய இடம், தாம்பத்திய உறவு, ஏராளமான பொறுப்புகள் பயணங்கள் என்று வரிசை கட்டி நிற்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அன்று ராதாவும் கோகுலும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இருவருமே வங்கியில் பணிபுரிகிறார்கள். திருமணமாகி 6 மாதங்களே ஆகியிருந்தது. அழகான முகமும், நேர்த்தியான ஒப்பனையும், சரியான உடை தேர்வும் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர், என்பதை உணர்த்தியது.

ராதாதான் துவங்கினார்.

"டாக்டர்! இந்த மாதம் பீரியட்ஸ் ஒரு வாரம் தள்ளி போய் இருக்கு.

ஆனா திருமணம் ஆனதிலிருந்து பீரியட்ஸ் ரெகுலராக இல்ல, டாக்டர்! மேரேஜ் ஆனதிலிருந்து 15-20 நாள் வரைக்கும் டிஃபரன்ஸ் வருது. அதுக்கு முன்னாடி ஒரு நாள் ரெண்டு நாள் தான் மாறி வரும் .

அதான் எனக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோன்னு பயமா இருக்கு. மேரேஜுக்கு முன்னாடி ரொம்ப ரெகுலரா இருக்கும். இப்ப என்னால எதுவும் பிளான் பண்ணவும் முடியல. இன்னிக்கு இப்ப இங்க செக் பண்ணி னதுல நான் ஒரு 5 கிலோ எடை கூடி இருக்கேன். வேறு ஏதாவது எனக்கு பிரச்சனை இருக்குமா? வேற ஏதாவது டெஸ்ட் பண்ணனுமா?" என்றார்.

"நாங்க ஒரு வருடம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம் என்ற பிளான்ல இருக்கோம் டாக்டர்!" என்று கூறினார் கோகுல்.

புதிதாய் திருமணமான பலருக்கும் இந்த பிரச்சனை, இந்த சந்தேகங்கள் மிக மிக பொதுவானது.

என் ஆலோசனை:

மாதவிடாய் ஏராளமான ஹார்மோன்களின் ஒத்திசைவால் ஒவ்வொரு மாதமும் சரியாக வருகிறது. கர்ப்பப்பையும் முட்டைப் பையும் தன்னுடைய வேலையை சரியாக செய்கின்றன. இந்த ஹார்மோன்கள் நம்முடைய மனநிலையால், மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். மாதாந்திர மாதவிடாயில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் .

பெரும்பாலானவருக்கும் ரத்த பரிசோதனையும் அல்லது ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கும் பொழுது எந்தவிதமான பிரச்சனையும் இருப்பதில்லை.

புதிதாய் திருமணம் ஆன பெண்களுக்கு, ஏராளமான சவால்கள் இருக்கும் . புதிய மனிதர்கள், புதிய இடம், தாம்பத்திய உறவு, ஏராளமான பொறுப்புகள் பயணங்கள் என்று வரிசை கட்டி நிற்கும். அதனால் பலருக்கும் திருமணமான முதல் சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை கூட ஒரு சிலருக்கு இதுபோன்று மாதவிடாய் மாறி மாறி வரலாம். பல பெண்களும் அப்போதே தாய்மை அடைவதுமுண்டு.

பெண்குயின் கார்னர் 26 : புதுமணத் தம்பதிகளே... ஹனிமூன் தொற்று பற்றி தெரியுமா..?

ராதாவுக்கு ஒரு ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பை ,முட்டைப்பை போன்றவற்றில் எந்த விதமான கட்டிகளோ பிரச்சனைகளோ இல்லை. கர்ப்பம் அடைந்திருக்கிறாரா? என்று பரிசோதனை செய்த போது, அதுவும் நெகட்டிவ் என்றே காட்டியது.

சில சமயங்களில் ரத்தம் குறைவாக இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் எழலாம் என்பதால் ரத்தத்தில் ஹீமோக்ளோபின் மற்றும் தைராய்டு போன்ற சில அடிப்படை பரிசோதனைகளை மட்டும் செய்தேன்.

ஹீமோகுளோபின் அளவு மட்டும் சராசரிக்கு சிறிது குறைவாக இருந்தது. அது தவிர எல்லாவற்றிலும் சராசரியான அளவுகளே வந்திருந்தது.

பெண்குயின் கார்னர் 25 : அடிக்கடி வரும் தலைவலிக்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது திருமண வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்குமா..?

அவர்கள் ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதால் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் எடுப்பது அவர்களுக்கு பலனளிக்கும் என்று பரிந்துரைத்தேன். அவற்றை எடுக்கும்பொழுது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சரியாக வந்துவிடும். அதனால் அவர்களுக்கு இரண்டு விதத்தில் பலன் அளிக்கும் என்பதால் அவற்றை பரிந்துரைத்தேன். மேலும் இரும்புச்சத்து சிரப்பும் ராதாவுக்கு எழுதிக் கொடுத்தேன்

இரண்டு மாதங்கள் கழித்து ராதா தனக்கு மாதவிடாய் ஒழுங்காக வருவதாகவும் மாத்திரைகளை சரியாக எடுப்பதால் நிம்மதியாக இருப்பதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Infertility, Irregular periods, Pregnancy, பெண்குயின் கார்னர்