உணவில் உப்பை சேர்த்து கொள்வதை பற்றி நீண்ட காலமாகவே மருத்துவர்களிடம் மிக பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு மருத்துவர்கள் உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உப்பில் உள்ள அயோடின் நம் உடலுக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காப்பதில் அயோடின் பங்கு மிக முக்கியம்.
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் அயோடின் அளவு சரியான விகிதத்தில் இருக்கும்போது பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
அயோடினின் முக்கியத்துவம்:
உடலுக்கு தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் அயோடின் முக்கிய ஊட்டச்சத்தாக உள்ளது. மேலும் இனப்பெருக்கத்திற்கும் தைராய்டு சுரப்பிகள் நன்றாக செயல்படுவதற்கும் உடலில் அயோடின் அளவு சரியாக இருப்பது மிகவும் அவசியம். ஒருவேளை அயோடின் அளவில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் தைராய்டு சுரப்பியில் சீரற்று இயங்குவது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
தினசரி தேவைப்படும் அயோடின் அளவு:
18 வயது மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 150mcg அளவு அயோடின் தேவைப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி பெண்கள் கருத்தரிப்பதற்கும், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கும் அயோடின் முக்கிய காரணியாக விளங்குகிறது. ஒருவேளை உடலில் அயோடின் அளவு 50ug/d அல்லது அதற்கும் கீழ் குறையும்போது மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு 14 சதவீதம் அதிகரிப்பதாக புதிய ஆய்வு தெரியவந்துள்ளது.
அயோடின் குறைபாட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்:
உடலில் அயோடின் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவே இருக்கும்போது பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக உடலில் உள்ள அயோடின் கருப்பை மற்றும் எண்டோமேட்ரியத்தினால் அதிக அளவு கிரகித்துக் கொள்ளப்படுகிறது. அயோடின் குறைபாடு ஏற்படும் போது மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்பட எவ்வளவு அயோடின் தேவை:
உடலில் தைராய்டு சரியாக சுரப்பதற்கு அயோடின் தேவைப்படுகிறது. சாதாரணமான TSH ஓசைட்டுகளில் ஃபாலிகுலர் வளர்ச்சியை தூண்டுகிறது. TSH ஆனது FSH ரிசப்டார்களுடன் அவை ஒரே விதமான தன்மையை ஒத்து உள்ளதால், அவை சேர்ந்து கருப்பையில் நேரடியான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
அயோடின் குறைபாட்டால் கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனைகள் :
டாக்டர் ராமமூர்த்தியின் கூற்றுப்படி “உடலில் அயோடின் குறைபாடு அதிகரிக்கும் போது அவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதுடன், ஆண்களின் உடலில் தைராய்டு சுரப்பிகள் சரிவர வேலை செய்யாத நிலையை உண்டாக்குகிறது. மேலும் அயோடின் குறைபாடு ஏற்படுவதால் ஆண்களுக்கு 70% அளவு விறைப்பு தன்மை குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இவை தவிர உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக கூறியுள்ளார்.
Also Read : அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறதா..?
என்னதான் தீர்வு :
உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்கள் தான் கருப்பை, வளர்ச்சிதை மாற்றம், உடல் எடை பராமரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் காரணியாக உள்ளது. சாதாரணமாகவே பிரசவத்தின் போது இவை அனைத்தும் அதிகரித்து விடும். மேலும் ஆண்களுக்கு அயோடின் குறைபாடு ஏற்படும் போது உயிரணுக்களின் தரம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவை அனைத்தையும் சரிப்படுத்த உணவில் தேவையான அளவு அயோடின் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. முக்கியமாக கர்ப்ப காலங்களில் போது அயோடின் அளவு குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Infertility, Iodine Salt